சென்னை: தமிழக தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் நடன ரியாலிட்டி ஷோ 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' மீண்டும் புதிய பொலிவுடன் களமிறங்க தயாராகியுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வந்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை இந்த முறை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கொண்டு வர Zee தமிழ் முடிவு செய்துள்ளது.
இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களும் சேர்த்து 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்ட நடன ஜோடிகளை அறிமுகப்படுத்திய பெருமையையும் இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது. தற்போது அந்த வெற்றிப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பெண்களுக்கான பிரத்யேக சீசனாக 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' மீண்டும் வர இருக்கிறது.
இந்த முறை சாதாரண நடனப் போட்டியாக அல்லாமல், பெண்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் கனவுகளுக்கான மேடையாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆடிஷன்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற நிலையில், அவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட திறமையாளர்கள் இந்த மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இளம் பெண்கள், திருமணமான பெண்கள், குழந்தைகளுக்கு தாயானவர்கள், பிளஸ் சைஸ் நடனக் கலைஞர்கள், சமூக வலைதள பிரபலங்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த பெண்கள் இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதற்கட்ட தேர்வுகளுக்குப் பிறகு டாப் 20 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு முன்னேறுவார்கள். அதிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த பெண் நடனக் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுடன் சின்னத்திரையின் பிரபல ஆண் நட்சத்திரங்கள் ஜோடி சேர்ந்து போட்டியில் பங்கேற்க இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட மேடைக்கு மேலும் நட்சத்திர மதிப்பை சேர்க்க தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான சிம்ரன், பிரஷாந்த் மற்றும் சினேகா ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களின் கருத்துகள், மதிப்பீடுகள் மற்றும் ஊக்குவிப்புகள் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 27 எபிசோடுகளும், ஒரு பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவும் கொண்ட இந்த சீசன், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜூன் 13 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை Zee தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பெண்களின் கனவுகளையும் திறமைகளையும் கொண்டாடும் ஒரு புதிய நடனப் புரட்சியாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடனம் தெரிந்த பெண்களுக்கு மட்டுமல்ல... தங்கள் கனவுகளை உலகம் முன் நிரூபிக்க விரும்பும் பெண்களுக்கான மேடையாக இந்த சீசன் அமையப்போகிறது என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு.ஒரே ப்ரமோவின் ஜீ தமிழின் மொத்த சீரியல் கதையும் ரிவில்.. கங்கா தேவியாக மிரட்டிய ராதிகா தான் அல்டிமேட்