சென்னை: சில பாடல்களை எத்தனை வருஷம் கழிச்சு கேட்டாலும், அந்தப் பாடல் வந்த காலத்துக்கு நம்மை அப்படியே கூட்டிட்டுப் போயிடும். பள்ளிக்கூடத்தில் படிச்ச நாட்கள், நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலம், முதல் காதல், என்று ஒவ்வொரு பாடலுக்கும் பின்னாடி ஒரு நினைவு இருக்கும். அப்படித் தமிழ் ரசிகர்களின் வாழ்க்கையோடு கலந்து போன பல பாடல்களைக் கொடுத்தவர்தான் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா.
இப்பவும் தொலைக்காட்சியில் பாட்ஷா படத்தின் பாடல் வந்தால் சேனலை மாற்றாமல் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். காதல் கோட்டை படத்தின் பாடல்களை கேட்டால் பழைய காதல் கதைகளை நினைத்து பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். குஷி படத்தின் பாடல்கள் ஒலித்தால் அந்த காலத்து விஜய், ஜோதிகா காதல் நினைவுக்கு வராமல் இருக்காது. இப்படி ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நினைவை கொடுத்திருக்கிறார் தேவா.
அவருடைய இசையில் குத்து பாடல்கள் மட்டும் பிரபலமானவை என்று நினைத்துவிட கூடாது. காதல் பாடல்கள், மென்மையான மெலடிகள், மோட்டிவேஷன பாடல்கள் என எல்லா வகையிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அப்படி இன்றைக்கும் கேட்டால் பழைய நினைவுகளைக் கிளறிவிடும் சில பாடல்களை பற்றி பார்ப்போம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது "நான் ஆட்டோக்காரன்" பாடல்தான். அந்த பாட்டை பார்த்தால் ரஜினியின் ஸ்டைலும், அவருடைய நடனமும் கண்முன்னால் வந்துவிடும். இப்போதும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டங்களில் இந்த பாடல் ஒலித்தால் உற்சாகத்துக்குக் குறைவே இருக்காது. இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பே, அது ரஜினியின் ஸ்கிரீன் ப்ரெசென்ட் அப்படியே பொருந்தியிருந்ததுதான். தேவா முதலில் வேறு இசை வடிவத்தை முயற்சி செய்துவிட்டு, பின்னர் கானா பாணியில் ஒரு மெட்டை பாடி காட்டியபோது அது படத்துக்கு பொருத்தமாக இருந்ததாக பாட்ஷா படத்தின் இசை உருவான பின்னணி பற்றி ஏற்கனவே அவரே பேசி இருந்தார். அதே படத்தில் வரும் "ரா ரா ராமையா" பாடலும் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒன்று. இன்றைக்கும் பழைய பாடல்களை போட்டு கேட்கும்போது இந்த பாடல் வந்தால் அப்படியே சேர்ந்து பாட ஆரம்பித்துவிடுவார்கள். பாட்ஷா படத்தின் வெற்றியில் தேவாவின் இசைக்கும் முக்கியமான பங்கு இருந்தது என்பதை இந்த பாடல்களை மீண்டும் கேட்கும்போதே புரிந்துகொள்ள முடியும். ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தில் வரும் "வந்தேண்டா பால்காரன்" பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெறும் இன்ரோ பாட்டு கிடையாது. ரஜினியின் கேரக்டர் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தோடு சேர்ந்து இந்த பாடலும் தனியாக ஒரு அடையாளமாக மாறிவிட்டது. அதே படத்தில் வரும் "வெற்றி நிச்சயம்" பாடலும் பலருக்கு பிடித்தமானது. வாழ்க்கையில் சோர்வாக இருக்கும்போதோ, ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும்போதோ இந்த பாடலை கேட்டால் ஒரு உற்சாகம் கிடைக்கும் என்று சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தேவாவின் இசையை பற்றி பேசும்போது அஜித் நடித்த காதல் கோட்டை படத்தை தவிர்த்துவிட்டு பேச முடியாது. குறிப்பாக காலமெல்லாம் காதல் வாழ்க, நலம் நலமறிய ஆவல், வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா போன்ற பாடல்கள் அந்த படத்தின் முக்கியமான அடையாளங்களாகவே மாறிவிட்டன. இப்போதைய தலைமுறையினர் காதலை வாட்ஸ் அப் மெசேஜிலும் வீடியோ காலும் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸ்களைக் கேட்டுப் பாருங்கள். கடிதம் எழுதி அனுப்பிய காலம், ஒருவருடைய பதிலுக்காக காத்திருந்த நாட்கள், மனதில் இருப்பதை நேரடியாகச் சொல்ல முடியாமல் தவித்த தருணங்கள் என்று எத்தனையோ கதைகள் இருக்கும். அதையெல்லாம் காதல் கோட்டை படத்தில் தனது பாடல்களாகவே தேவா அனைவரும் மனதிலும் பதிய வைத்துவிட்டார். அஜித் நடித்த ஆசை படத்தில் வரும் "மீனம்மா அதி காலைலேயும்" பாடல் இன்றைக்கும் காதல் பாடல்களை விரும்புகிறவர்களின் பட்டியலில் இருக்கிறது. அந்த பாடலில் இருக்கும் துள்ளலும், காதலை வெளிப்படுத்தும் விதமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதே படத்தின் "புல்வெளி புல்வெளி" பாடலை எடுத்துக்கொண்டாலும், அதில் இருக்கும் மென்மையான இசை தனியாக ரசிக்க வைக்கும். ஒரே படத்தில் உற்சாகமான பாடலையும், அமைதியாக உட்கார்ந்து கேட்கக்கூடிய மெலடியையும் கொடுக்க முடியும் என்பதை தேவாவின் இசை காட்டியது. விஜய், ஜோதிகா இணைந்து நடித்த குஷி படத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் மேகம் கருக்குது, மொட்டு ஒன்று, கட்டிப்புடி கட்டிப்புடிடா, மகரினா மகரினா என்று அந்த படத்தின் பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். தேவா என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கானா பாடல்கள்தான். வடசென்னையின் இசை மரபில் இருந்து வந்த கானா பாணியை திரைப்படங்களில் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கியமான பங்கு உண்டு. லாலாக்கு டோல் டப்பிமா, கவலைப்படாதே சகோதரா, பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் போன்ற பாடல்கள் அதற்கு சிறந்த உதாரணங்கள். இந்த பாடல்களில் இருக்கும் மொழி, இசை, தாளம் எல்லாமே மக்களுக்கு நெருக்கமானவை. பெரிய பெரிய வார்த்தைகள் இல்லாமல், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேசும் மொழியிலேயே பாடல்கள் இருக்கும். அதனால்தான் இந்த பாடல்களை மக்கள் எளிதாக ரசித்தார்கள், நண்பர்களுடன் சேர்ந்து பாடினார்கள், கொண்டாட்டங்களிலும் ஒலிக்க வைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடலோடு ஒரு கதை இருக்கும். அந்த கதைகள்தான் ஒரு பாடலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாததாக காலத்துக்கும் நமது மனதில் இருக்கும். தேவாவின் பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாட்டு எது நண்பா!பாட்ஷா பட பாட்டு
வந்தேண்டா பால்காரன்
காதல் கோட்டை பாடல்கள்
Deva: தம்பி இறந்த சோகம் மறைவதற்குள் அண்ணனும் மறைந்தார்.. சோகத்தில் தேனிசை தென்றல் தேவா குடும்பம்
ஆசை படத்தில் மீனம்மா
குஷி பட பாட்டு
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த காரணம் இதுதான்! இசையமைப்பாளர் தேவா முன்பு பிளாக் பாண்டி உருக்கம்
கானா பாடல்களில் தேவா செய்த சாதனை