தேவா கடைசியாக சொன்ன வார்த்தை! கள்ளம் கபடம் இல்லாத சொக்க தங்கம்.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

  • சென்னை: இசையமைப்பாளர் தேவா காலமான செய்தியை கேட்டதும் சோசியல் மீடியா முழுக்க பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சுந்தர்சி என பல பிரபலங்கள் தேவா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தேவா பற்றி உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    Advertisement

    ரஜினிகாந்த் இண்ட்ரொடக்சன் தீம் மியூசிக் போட்டதே தேவா தான். அந்த மியூசிக் இந்த காலம் வரை பல வருஷங்களாக எல்லா படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட ஜெயில்ர் 2 படத்தில் ரஜினிகாந்த் என்ற பெயர் வரும்போது தேவா போட்ட அதே தீம் மியூசிக் தான் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ புதுமுக இசை அமைப்பாளர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தாலும் ரஜினிகாந்துக்கு தனி அடையாளமாக இருப்பது இந்த தீம் மியூசிக் தான்.

    Advertisement

    ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

    இப்போது ரஜினிகாந்த் வெளியிட்டு வீடியோவில் பேசுகையில், தேவாவின் மரண செய்தியை கேட்டு நான் ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். அவர் என்னுடன் இணைந்து அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என 3 படங்கள் பண்ணினார். எல்லாமே சூப்பர் ஹிட். படையப்பா படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று சில பேர் சொன்னார்கள். நான் அரை மனதோடு தேவா சாரிடம் போய் விஷயத்தை சொன்னேன்.

    பெருந்தன்மையான வார்த்தை

    உடனே அவர் எழுந்து நின்று, சார் அந்த புது பையன் நன்றாக பண்ணுவார். ரொம்ப சந்தோஷமாக பண்ணுங்க.. என்று மனதார சொன்னாரு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சார் உங்களுக்கு வருத்தமாக இருக்குமே என்று நினைத்துதான் நேரடியா சொல்ல வந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இல்ல சார் புதுசா வரவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும். உங்க கூட 3 படங்களுக்கு நான் தொடர்ந்து பணியாற்றியதே பெரும் பாக்கியம் என்று சொன்னாரு. அவ்வளவு நல்ல மனுஷன்.

    Advertisement
    தேவா உடலை பார்த்ததும் அப்படியே நின்ற ரஜினி.. சத்யராஜ் சொன்ன விஷயம்! ஸ்டாலின், உதயநிதி உருக்கம்

    தேவாவின் நல்ல மனசு

    தேவா கள்ளம் கபடம் இல்லாத சொக்கத்தங்கம். ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர். ஆரம்பத்தில் தன்னுடைய குடும்பத்தினரையும், தம்பிகளையும் வளர்க்க ரொம்ப பாடுபட்டார். திருமண வீடுகளில் பாடல்கள் பாடி தான் இன்னைக்கு இந்த அளவிற்கு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய தம்பிகளை தன் கூடவே வைத்துக் கொண்டார். அவர் நல்ல நிலைமைக்கு வந்த பிறகும் தம்பிகளை விட்டு பிரியவே இல்லை. அதுவே பலருக்கு பாடம். இப்படி ஒரு மனுஷனை பார்க்க முடியுமா? என்று எனக்கு தெரியாது.

    Advertisement
    தேனிசை தென்றல் தேவா இனி இல்லையா? மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுத பாடகி அனுராதா

    கடைசியாக சொன்ன வார்த்தை

    ஒரு நாள் திடீரென என்கிட்ட வந்து சார் மியூசிக் கான்செப்ட் பண்ணலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னாரு. கண்டிப்பா சூப்பர் ஐடியா பண்ணுங்க என்று சொன்னேன். நீங்கள் வரணும் என்று சொன்னாரு, அதற்காகவே ஒரு நிகழ்ச்சியில் அவருக்காக நான் போய் அவருடன் கலந்து கொண்டேன். அதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். சமீபத்தில் என்னை சந்தித்தபோது சார் இப்போ உள்ள இளைஞர்களுக்கும் என்கிட்ட பாசமா இருக்காங்க, அவங்களுக்கும் என்ன தெரியுது இந்த சந்தோசத்திலே இன்னும் 10 வருஷம் வாழ்ந்துட்டு போயிடனும் என்று சொன்னாரு, கஷ்டப்படாம நல்ல நிலைமையிலேயே போயிருக்கிறார்.

    Advertisement

    ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்

    அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். அவருடைய ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். முன்னதாக தேவா உடலுக்கு நேரில் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தும் போது தேவாவின் மகள் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து விட்டு, தேவாவின் உடலையும் பக்கத்தில் நின்று சில நிமிடங்கள் உற்று பார்த்துவிட்டு வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பி இருந்தார். அதற்கு பிறகு இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    English Summary

    Deva: Following the news of music composer Deva’s passing, many have been expressing their condolences across social media. Prominent figures—including Chief Minister M.K. Stalin, Udhayanidhi Stalin, and actors Rajinikanth, Sathyaraj, and Sundar C.—have visited to pay their final respects to Deva. In the midst of this, a video featuring actor Rajinikanth speaking poignantly about Deva has gone viral online.