சென்னை: ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த பிறகும், தனுஷ் தனது முன்னாள் மாமனார் ரஜினியின் மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் குறையவில்லை போலிருக்கிறது. இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்தைத் தனது மகன்களுடன் பார்க்க வந்த தனுஷ், இப்போது இன்னொரு காரணத்துக்காகவும் பேசப்பட்டு வருகிறார். அதே தியேட்டரில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மனைவி லதா என குடும்பத்தினரும் படம் பார்க்க வந்திருக்கிறார்கள்.
தனுஷ் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தலைவர் தரிசனம்" என்று பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று மகன்களுடன் ஜெயிலர் 2 படத்தைப் பார்க்க வந்திருப்பதால், ரஜினி மீதான தனது ரசிகர் அன்பை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த சந்திப்பு வெறும் ரசிகர் பாசத்துடன் முடிந்துவிடுமா? அல்லது இதற்குப் பின்னால் வேறு கணக்குகள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க தனுஷ் தனது மகன்களுடன் வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. அதே நேரத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் அதே திரையரங்கில் படம் பார்த்திருக்கிறார்கள். தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துவிட்ட நிலையில், இருவரது குடும்பத்தினரும் ஒரே திரையரங்கில் ரஜினியின் படத்தைப் பார்க்க வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும்போது தனுஷ் பதிவுகள் வெளியிடுவது புதிதல்ல. ரஜினி மீது தனக்கு இருக்கும் மரியாதையையும், ரசிகர் பீலிங்கையும் அவர் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 வெளியீட்டுக்கு முன்பே "தலைவர் தரிசனம்" என்று பதிவிட்டுவிட்டு, முதல் நாளில் படத்தைப் பார்க்க வந்திருப்பதும் அதையே நினைவுபடுத்துகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஜினியைத் தனது தலைவராகப் பார்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதுபோல தனுஷின் இந்தச் செயல் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அவர் அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், ரஜினியின் படத்தை முதல் நாளிலேயே பார்க்க தனுஷ் வந்திருப்பது அரசியல் கோணத்திலும் பேசப்படுகிறது. ஏற்கனவே தனது ரசிகர்கள் மன்றத்தை தனுஷ் தூசி தட்டி மீண்டும் நற்பணிகளை தொடங்கி இருப்பதால் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு ரஜினி தான் சப்போர்ட் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ரஜினி படத்துக்கு தனுஷ் முதல் ஆளாக வந்திருப்பதை பார்த்ததும் அந்த பேச்சு உண்மைதானா? என்ற பேச்சும் எழுந்து இருக்கிறது.ஒரே தியேட்டரில் ரஜினிகாந்த் குடும்பம்
தனுஷின் அரசியல் கணக்கு