விஜய் கட்சிக்கு தனுஷ் போறாரா? ஒரே ஒரு ட்விட்டால் கிளம்பிய விவாதம்.. பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்

  • சென்னை: 72 தேசிய விருது அறிவித்ததில் இருந்து சோசியல் மீடியா முழுக்க தனுஷ் பெயர்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவருக்கு 2 விருது கொடுக்கிறாங்களே என்று சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரைப் பற்றி இன்னொரு விஷயமும் விவாதிக்கப்படுகிறது. அதாவது தனுஷ் தமிழக வெற்றிக்கழகத்தில் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் எழும்பி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அரசியல் கூட்டமும் மேடை பேச்சோ இல்ல.. ஒரே ஒரு டுவிட் தான்.

    Advertisement

    அதாவது தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு தனுஷ், "Thank you Hon'ble Chief Minister" என்று மரியாதை உடன் நன்றி தெரிவித்திருந்தார். அவ்வளவுதான் அந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்ட ரசிகர்கள் விஜய் கூப்பிட்டாரு தனுஷ் தவெகவிற்க்கு போறாராம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

    Advertisement

    அது மட்டும் இல்ல சோசியல் மீடியா பக்கத்தில் முதல்வர் விஜய் தன் கட்சிக்கு அழைத்ததால் தான், தனுஷ் நன்றி சொன்னார் என்று ரீதியிலும் பதிவுகள் பரவின. இதை பார்க்கும் ஒரு சிலருக்கு உண்மையிலேயே சந்தேகமும் வந்திருக்கிறது. ஆனால் இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

    முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவு

    முதல்வர் விஜய்க்கு மட்டுமல்ல தேசிய விருது கிடைத்ததற்காக வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் தனுஷ் தனித்தனியாக நன்றி தெரிவித்திருக்கிறார். அதாவது அவரை வாழ்த்திய அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக பதில் சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    தனுஷ் கொடுத்த பதில்

    அந்த விஷயத்தை விட்டுட்டு விஜய்க்கு சொன்ன நன்றியை மட்டும் எடுத்துக்கொண்டு விஜய்யுடன் இணைவதால் தான் அவருக்கு நன்றி சொன்னார் என்று சிலர் கிளம்பி வரும் வதந்திகளுக்கு தனுஷ் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் இதை இன்னொரு கோணத்திலும் பேசுகிறார்கள். அதாவது தனுஷ் மாதிரி இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கும் நடிகர் தவெகாவுக்கு வந்தால் அது கட்சிக்கு பெரிய பலம். அவர் வந்தாலும் சந்தோஷம்தான் என்றும் சிலர் இப்போதே துண்டு போடுவது போல கமெண்ட் போடுகிறார்கள்.

    ஆனாலும் இன்னும் ஒரு சிலர் தனுஷ்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தாலும் தனியாக நிற்பார். இப்போது கட்சியில் சேருவதாக பேசுவது ஓவர் தான் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த பேச்சுக்கு இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ உறுதியான தகவல்களும் இல்லை.

    Advertisement

    விஜய் தரப்பில் இருந்து தவெகாவில் சேருங்கள் என்று அழைக்கவும் இல்லை. தனுஷ் தரப்பில் இருந்து நான் சேரப் போகிறேன் என்று அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தனுஷ் விஜய்யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஒரே விஷயத்தை வைத்துதான் இப்போ சோசியல் மீடியாவில் பூதாகரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    ரசிகர்கள் கருத்து

    ஏற்கனவே சமீபத்தில் தனுஷ் ரசிகர் மன்ற கொடி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அப்போது கூட தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அதற்கு இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பல ஆண்டுகளாக இருக்கும் ரசிகர் மன்ற கொடி தான். சில மாற்றங்கள் மட்டும்தான் செய்து இருக்கிறோம் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

    Advertisement

    அதுபோல தனுஷுக்கு இது முக்கியமான தருணம் ராயன் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும், கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கும் செலக்ட் ஆகி இருக்கிறார். இயக்குநராக தேசிய விருது வாங்குவது தனுஷுக்கு முதல் அனுபவம் அதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி சர்ச்சைகள் மட்டும் அதிகமாக பரவி வருகிறது.

    ஏற்கனவே போன வருஷம் எத்தனையோ நல்ல படங்கள் வந்திருந்தாலும் ராயன் படத்திற்கு விருது கொடுக்கிறார்களே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இப்போ விஜய் கட்சியில் தனுஷ் சேரப் போகிறாரா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் தனுஷே இனி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    English Summary

    Dhanush: Since the announcement of the 72nd National Award, Dhanush's name has been the most talked about social media. While some people are already questioning whether they are giving him 2 awards, another thing is being discussed about him. Does that mean Dhanush is going to join the Tamil Nadu Victory League? Questions are arising. Do you know what is the cause of all this? There is no political meeting or stage speech.. only one tweet.