சென்னை: நடிகர் தனுஷின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரது ரசிகர் மன்றம் சார்பில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த தனுஷ் மேடையில் பேசிய சில கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சமீப காலமாக தனுஷ் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவருக்கு மட்டும் இந்த முறை 2 தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டு இருந்தாலும் அவருடைய ராயன் படத்திற்கு விட சிறந்த படங்கள் பல இருக்கிறது அப்படி இருக்கும்போது இந்த படத்திற்கு எப்படி விருது கிடைத்தது? என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல தனுஷ் செயல்கள் எல்லாமே இப்போ விஜய்யை ஃபாலோ பண்ணுவது போல இருக்கிறது என்ற விமர்சனமும் இருக்கிறது.
இந்த நிலையில் மேடையில் தனுஷ் தன்னை பற்றி விமர்சனங்களுக்கு முதலில் பதில் கொடுத்து இருந்தார். அப்போது என்னை தட்டி விடாதீர்கள், தட்டி கொடுங்கள் என்று அவர் சொல்லியிருந்தார். பிறகு கடைசியாக நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களிடம் அவர் வைத்த வேண்டுகோள் இணையத்தில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
அதாவது நிகழ்ச்சியின் முடிவில் அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும்போது இங்கு வந்து இருக்கிற எல்லோரும் பத்திரமாக வீட்டுக்கு போகணும். தயவுசெய்து யாரும் என் வாகனத்தை பின் தொடர்ந்து வரக்கூடாது. நீங்க உங்க வீட்டுக்கு பாதுகாப்பாக போய் சேரனும், போற வழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதோடு அவர் நிறுத்தவில்லை மேலும் பப்ளிக் நியூசன்ஸ் ஸ்கிரியேட் பண்ண கூடாது. ஓவர்டேக் பண்ண கூடாது, நீங்க போகிறதை பார்த்து இந்த மாதிரி பசங்க தான் இருக்கணும்னு எல்லாரும் சொல்லணும். அந்த மாதிரி பொறுப்பா நடந்துக்கோங்க என்று அட்வைஸ் பண்ணினார். தனுஷ் இப்படி பேசியதை கேட்ட பலரும் சில வருஷத்துக்கு முன்பு விஜய் தன்னுடைய ரசிகர்களிடம் வைத்த அதே வேண்டுகோளை இப்போ இவரும் வைக்கிறார் என்று சொல்லி வருகின்றனர். அதாவது தமிழக வெற்றி கழகத்தின் மாநாடுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு விஜய் போகும்போது அவருடைய வாகனத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து போன சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது. அதனால் சில உயிர் இழப்புகளும் கூட நடந்து இருக்கிறது. சில விபத்துகளும் நடந்து இருக்கிறது. அப்போது விஜய் யாரும் என்னுடைய வாகனத்தை பின்தொடர்ந்து வளர வேண்டாம் பாதுகாப்பாக வீட்டுக்கு போங்க என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். அதேபோல இப்போ தனுஷும் பேசுகிறார். ஆனால் அதிலும் கடைசியாக விஜய் ரசிகர்கள் போல இருந்து விடாதீர்கள் என்று சொல்வது போல தனுஷ் சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பொதுவாக விஜய்யின் ரசிகர்களை பலர் தற்குறிகள் என்று ட்ரோல் செய்து வரும் நிலையில் அதேபோல நீங்க பேர் எடுத்துரக்கூடாது, நல்ல பிள்ளைங்கன்னு பெயர் வாங்கணும் என்று தான் தனுஷ் இப்படி சொல்கிறார் எனவும் சிலர் சொல்லி வருகிறார்கள். மீண்டும் சாதித்த விஜய்.. ஜனநாயகன் 4 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை எகிறிய மவுசுதனுஷ் சொன்ன அட்வைஸ்
விஜய் சொன்ன அட்வைஸ்
நெட்டிசன்கள் கேள்வி
அதே நேரத்தில் தனுஷ் சொன்ன சின்ன அட்வைஸ் கூட ரசிகர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து சொல்லப்பட்ட ஒரு சாதாரண வேண்டுகோள் அல்லது விஜய் ரசிகர்கள் குறித்து சோசியல்மீடியாவில் நீண்ட காலமாக பேசப்பட்ட விமர்சனங்களை மறைமுகமாக நினைவுபடுத்தும் வகையில் பேசுகிறாரா? என்ற கேள்வி இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.