சென்னை: நடிகர் துருவ் விக்ரம் சோசியல் மீடியாவில் போட்ட ஒரே ஒரு போட்டோ இப்போது ரசிகர்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. காரணம் போட்டோவில் துருவ் மட்டும் இல்லை. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறார். ஆனால் அந்த பெண் யார் என்பதை மட்டும் துருவ் காட்டவே இல்லை. ஹெட்செட் மாட்டிக்கொண்டு ஏதோ ஒரு பாடலை கேட்டபடி துருவல் இருப்பது தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.
அதைவிட பெரிய விஷயம் அந்த பதிவுக்கு அவர் பயன்படுத்தியிருக்கும் பாடல். "எதற்காக கிட்ட வந்தாயோ.." என்ற வரிகளைக் கொண்டு அந்த பாடலை தான் அந்த போட்டோவுக்கு சேர்த்திருக்கிறார். அவ்வளவுதான் ரசிகர்களின் கற்பனை குதிரை வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
துருவ் விக்ரமின் காதல் வாழ்க்கை பற்றி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாகவே சமூக வலைதளத்தில் பேச்சு இருக்கிறது. குறிப்பாக நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் துருவ்க்கும் காதல் இருப்பதாக நீண்ட நாட்களாகவே வதந்திகள் சுற்றின. இருவரும் பைசன் படத்தில் இணைந்து நடித்தது காரணமாக இருந்தது. அதன் பிறகு அனுபமா சோசியல் மீடியாவில் பதிவிட்ட சில எமோஷனல் பதிவுகளையும் ரசிகர்கள் காதல், பிரேக்கப் உடன் தொடர்பு படுத்தி பார்த்தார்கள். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்று பார்த்தால் இருவரும் தங்களுக்குள் காதல் இருந்தது என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவே இல்லை. அனுபமா பின்னர் தனது பதிவுகள் தனிப்பட்ட எண்ணங்கள் தொடர்பானவை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அப்படி இருக்கும்போது துருவ் ஒரு பெண்ணுடன் இருக்கும் போட்டோவை மறைமுகமாக வெளியிட்டு அதற்கு இப்படி ஒரு காதல் வரிகளை கொண்ட பாடலை வைத்திருப்பதால் அப்போ இது என்ன விஷயம்? பிரேக் அப்- ஆ? இல்லைனா புதுசா யாராவது வந்துட்டாங்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனா இங்கேதான் இன்னொரு ட்விஸ்ட் இருக்கு. துருவின் இந்த பதிவுக்கு அவருடைய அப்பா விக்ரம் லைக் போட்டு இருக்கிறார். இதுதான் இப்போ ரசிகர்களுக்கு இன்னொரு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. அதாவது இது உண்மையில் காதல் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட பதிவுக்கு விக்ரம் இப்படி வெளிப்படையாக லைக் போட்டு இருப்பாரா? அதனால் இது துருவின் அடுத்த படத்திற்கான ஏதாவது ஒரு அப்டேட்டாக இருக்குமோ? என்ற பேச்சும் கிளம்பி இருக்கிறது. அதுவும் துருவ் இப்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் புதிய ஆக்சன் படத்தில் நடிக்கிறார். அதோடு ஜாக்கி என்ற புதிய படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டோவில் இருக்கும் அந்த பெண் ஒரு புதிய படத்தின் கதாநாயகியா? என்ற கேள்விகள் கமெண்ட்ஸ்களில் குதிந்து வருகிறது. ஆனால் இதில் எதற்கும் இன்னும் துருவ் விளக்கம் கொடுக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு போட்டோ, ஒரு பாடல், பக்கத்தில் யார் என்று தெரியாத பெண்... அப்பாவே போட்ட லைக் இவற்றை வைத்து ரசிகர்கள் மட்டும் ஒரு முழு கதையும் ரெடி பண்ணிட்டாங்க.துருவ் விக்ரம் பதிவு
காதல் வதந்தி
குழப்பத்தில் ரசிகர்கள்
என்னவாக இருக்கும்