கூவத்தூரில் நடிகைகளை நான் கூட்டிட்டு வந்தேனா? அங்கு எத்தனை பேர் இருந்தாங்க? கருணாஸ் ஓபன் பேச்சு

  • சென்னை: நடிகரும், அரசியல் பிரமுகருமான கருணாஸ் தனது அரசியல் வாழ்க்கையில் பல வருடங்களாக தன்னைத் துரத்தி வரும் கூவத்தூர் சர்ச்சை குறித்து மீண்டும் மனம் திறந்து பேசி இருக்கிறார். குறிப்பாக கூவத்தூருக்கு நடிகைகளை அழைத்து வந்தேன் என்ற குற்றச்சாட்டு, தன்னுடைய பெயரை எப்படி பாதித்தது? அந்த நேரத்தில் தன்னுடைய மனைவி மட்டுமே தன்னை நம்பினார் என்று உணர்ச்சி பூர்வமாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    கூவத்தூர் சர்ச்சை

    2017 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பயங்கரப் போட்டியின் போது, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எம்எல்ஏகளை கூவத்தூரில் தங்க வைத்தது, அவர்களை சுற்றிய அரசியல் பேரம், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் கருணாஸ் பெயரும் தொடர்ந்து அந்த விவாகரத்தில் அடிபட்டது.

    Advertisement

    கருணாஸ் பேட்டி

    ஆனால் பல வருஷத்துக்கு பிறகு தன்னை விடாமல் துரத்தும் நடிகைகளை கூட்டிட்டு வந்தார் என்ற குற்றசாட்டு தான் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கருணாஸ் இப்போது பேசி இருக்கிறார். அதில் அன்னைக்கு கூவத்தூரில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவர் என்னை வேணும்னே தப்பா எழுதினார். ஏன்னா அன்னைக்கு அதிமுக கூட்டம் நடந்ததில் அவருக்கு வேற யாரையும் தெரியாது. அப்போ எடப்பாடி பழனிச்சாமி கூட தெரியாத முகம் தான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த முகமாக நான் இருந்தேன்.

    உடனே என்னை பற்றி ஏதாவது கதை கட்டி விட்டால் தானே அது பிரபலமாகும் என்று என்னை பற்றி தப்பு தப்பாக எழுதிவிட்டார்‌. நான் நடிகைகளை கூட்டிக்கொண்டு வந்து அங்கு ஆட வைத்தேன் என்று சொல்லி இருந்தார். இன்னும் சில மோசமான வார்த்தைகளையும் சொல்லி இருந்தார். அந்த சமயத்தில் என்னை யாரும் நம்பவில்லை. என் மனைவி மட்டும்தான் என்னை நம்பினாள். இதற்குப் பிறகு என்னுடைய கதை அவ்வளவுதான் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் அன்னைக்கு அந்த சம்பவம் நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் வெளியே இருந்தார்கள்.

    Advertisement

    அங்கு நடந்த சம்பவம்

    ட்ரோன் பறந்து கொண்டு இருந்தது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் இருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவர்களுடைய உதவியாளர்கள் என குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்தார்கள். அப்படி இருந்தபோது என்னை பற்றி அவர் வேண்டுமென்று அவதூறாக பேசி அதனால் வியூஸ் ஏற்றி, அதற்காக கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த போட்டோ எல்லாம் என்கிட்ட இருக்கு.

    அந்த மீட்டிங் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் என்னுடைய ரிசார்ட் இருக்கிறது. அங்கு நான் தங்கவே இல்லை. ஆனால் என்னே பற்றி என்னென்னமோ பேசிட்டாங்க. அதற்கு முன்பு என்னைப் பற்றி ஏதாவது சர்ச்சைகள் மீடியாவில் வந்திருக்கிறதா? நான் குடிப்பேன் என்று எல்லோருக்கும் தெரியும். குடித்தால் சில இடங்களில் பிரச்சனை வந்திருக்கிறது. அது வேற, ஆனா பொண்ணுங்கள நான் அவ்வளவு மதிக்கிறேன். என்னை பொண்ணுங்களை வைத்து தொழில் பண்றவன் என்று அந்த நபர் பேசிவிட்டார்.

    Advertisement

    மன வருத்தம்

    அதற்குப் பிறகு என்ன பண்ணனுமோ அதை எல்லாம் நான் செஞ்சேன்... அது வேற கதை. ஆனால் அன்னைக்கு என்னை பற்றி பேசின அதே வார்த்தைகள் வைத்து தான் இப்போ கூட சிலர் என்னை அசிங்கப்படுத்துறாங்க என்று கருணாஸ் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முதலமைச்சர் பதவியை சுற்றி கடுமையான போட்டிகள் நிலவி வந்திருந்த சமயத்தில்தான் கருணாஸ் பற்றியும் இப்படி சர்ச்சைகள் பரவிவது.

    கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள்
    கருணாஸ் அப்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மேலும் சசிகலா அணிக்கு ஆதரவாகவும் இருந்தார். அப்போதுதான் நடிகைகளை கூவத்திற்கு அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையாக வெடித்தது அதற்கு பிறகு 2024 பிப்ரவரியில் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜு ஒரு பெட்டியில் பேசியதும் வைரல் ஆனது அதில் கூவத்தூரில் இருந்த சில நடிகைகளை கேட்டதாகவும் அதற்கு கருணாஸ் ஏற்பாடு செய்ததாகவும் அவர் குற்றம் சட்டி இருந்த அந்த பேட்டியில் நடிகை திரிஷாவின் பெயரும் பேசப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு கருணாஸ் மறுப்பு தெரிவித்து புகார் கொடுத்து இருந்தார்.

    English Summary

    Karunas: Actor and politician Karunas has once again opened up about the 'Koovathur controversy' that has dogged his political career for years. He spoke emotionally about how the specific allegation—that he had brought actresses to Koovathur—impacted his reputation, and noted that his wife was the only one who believed in him during that time.