சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.. சூர்யாவை பழிதீர்த்தாரா? நான்கு வருஷத்துக்கு பிறகு திருப்பி அதே ட்விட்

  • சென்னை: சூரி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மண்டாடி திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பு, படத்தின் கடல் காட்சிகள், படகு போட்டி, கிளைமாக்ஸ் என பல விஷயங்களுக்காக முதல் நாள் ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் போட்ட ஒரு பதிவுதான் சினிமா ரசிகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி இருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் பதிவு

    சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், "Great reports for #Mandaadi. Soori annan's hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big!" என்று சூரியை பாராட்டியிருக்கிறார்.

    Advertisement

    சூரியின் பல வருட உழைப்புக்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றி இது என்றும், நல்ல கதை எப்போதும் வெற்றி பெறும் என்றும் வாழ்த்தி இருக்கிறார். பார்க்கப் போனால் இது சாதாரண ஒரு வாழ்த்து பதிவு தான். இருவரும் ஆரம்பத்தில் ஒரே படத்தில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார்கள். அந்த பாச பிணைப்பினால் அவர் போட்டதாக இருந்தாலும், நெட்டிசன்கள் இங்கே தான் ஒரு பழைய கணக்கை தூசி தட்டி எடுத்து இருக்கிறார்கள்.

    சூர்யா வெளியிட்ட பதிவு

    அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சர்தார் திரைப்படம் வெளியான போது தனது தம்பி கார்த்தியை வாழ்த்து சூர்யா போட்ட பதிவிலும் இதே வார்த்தை இருந்து இருக்கிறது. "Good content always wins big! Team #Sardar... hearing great things..." என்று சூர்யா பதிவிட்டு, சர்தார் படத்துக்கு கிடைத்த வரவேற்பை குறிப்பிட்டு படக்குழுவை வாழ்த்தியிருந்தார்.

    Advertisement

    அதாவது சூர்யா 2022 கார்த்தியின் சர்தார் படத்துக்காக பயன்படுத்திய அதே கண்டன்ட்டை இப்போது சிவகார்த்திகேயன் மண்டாடி படத்திற்கு சொல்லி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். காரணம் 2022 தீபாவளிக்கு ஒரே நாளில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. அந்த நேரத்தில் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி இருந்தது. பின்னர் விமர்சனம் ரீதியாக சர்தார் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

    ரசிகர்கள் கேள்வி

    அந்த சமயத்தில் சூர்யா தம்பி கார்த்தியின் படத்துக்கு நீளமான வாழ்த்து பதிவை போட்டு இருந்தார். இப்போது கார்த்தியின் சர்தார் 2 படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் நாளில் சிவகார்த்திகேயன் சூரிக்கு ஆதரவாக நிற்கிறார். அதுவும் சூர்யா 4 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தி அதே வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதுதான் இப்போது ரசிகர்களின் கண்களை உறுத்த வைத்திருக்கிறது.

    Advertisement

    சேயோன் படத்தில் சீமான்.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு புது ட்விஸ்ட்
    சிவகார்த்திகேயன் இப்போ போட்ட பதிவு 2022ல் நடந்ததற்கு இப்போது பதிலடி கொடுத்து விட்டாரா? என்று கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் 4 வருஷமாக இந்த வார்த்தையை மனதில் வைத்திருந்தாரா? என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள். சினிமாவில் சில ட்வீட்கள் படம் வெளியான பிறகு தான் இன்னொரு கதையை சொல்ல ஆரம்பிக்கும் போல.

    English Summary

    Sivakarthikeyan: Soori's movie Mandadi, which is releasing today, is getting a good response among the fans. The first day fans are giving positive reviews especially for Suri's performance, the film's sea scenes, boat race, climax and many other things. In this situation, Sivakarthikeyan's record has diverted the attention of movie fans.