நேற்று விஜய் சேதுபதி பிக் பாஸ் மேடையில் பொய் சொல்லிவிட்டாரா? இங்கேயும் அரசியலா? ஆதாரம் லீக்

  • சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கியாச்சு. ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதும் வழக்கம் போல இந்த நிகழ்ச்சி பற்றிய சர்ச்சையும் கிளம்பியாச்சு. அதுவும் முதல் நாளில் இப்படியா? என்று சொல்ற மாதிரிதான் விஜய் சேதுபதி பற்றிய ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகு யார் என்று எனக்கு தெரியாது என்பது போல விஜய் சேதுபதி நடந்து கொண்டார். ஆனால் அவருடன் சில வருடங்களுக்கு முன்பே விஜய் சேதுபதி புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். இதை வைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    Advertisement

    பிக் பாஸ் 10 சர்ச்சை

    பிக் பாஸ் நிகழ்ச்சியையும், சர்ச்சையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தான் ஒன்றுடன் ஒன்று இணைத்திருக்கிறது. அது வழக்கமாக 9 சீசன்களிலும் நடந்து வந்தாலும் 10வது சீசனில் மாறவா போகிறது? என்பது போலத்தான் இப்போ நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் மேடையிலே வைத்து சில போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தான் ரகு.

    விஜய் சேதுபதி ஆறுதல்

    ஆனால் அவர் பேசியது ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதேபோல விஜய் சேதுபதியும் அவருக்கு சப்போர்ட் கொடுத்திருந்தார். பிக் பாஸ் மேடையில் அவர் பேசும்போது, நான் தமிழ் பையன் தான். ஆனால் சினிமாவில் வாய்ப்பு கேட்டு போகும் போது நீ தமிழ் பையன் மாதிரி இல்ல, உயரமாக இருக்கிறாய், நடிகருக்கான மேனலிசம் இல்லை என்று என்னை ஒதுக்கிடுவாங்க. அதை மாற்ற வேண்டும் என்பதற்கு தான் பிக் பஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று பேசி இருந்தார்.

    Advertisement

    பிக் பாஸ் 10 போட்டியாளர்

    அங்கு இருந்த பார்வையாளர்களில் வாக்குகளின் அடிப்படையில் ரகு எலிமினேஷன் செய்யப்பட்டார். அப்போது விஜய் சேதுபதி அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தார். நீங்க அழகாக இருக்கீங்க. தமிழ் பையனாகத்தான் இருக்கிறீங்க. உங்க திறமையை பார்த்து சீக்கிரமாக நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருந்தார். அதுபோல ரகு நான் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடித்திருந்தேன் ஆனாலும் எனக்கு அதற்கு பிறகு எந்த வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்று சொல்லி இருந்தார். அப்போது ஏற்கனவே எனக்கு ரகுவை தெரியும் என்பது போல விஜய் சேதுபதி சொல்லவில்லை.

    Advertisement

    இந்த நிலையில் தான் ரகுவின் சோஷியல் மீடியா பக்கத்தை ஆராய்ந்து பார்த்த நெட்டிசன்கள் ரகுவும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அப்போ விஜய் சேதுபதி பொய் சொல்லிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை ரகுவை இதற்கு முன்பு சந்தித்ததை விஜய் சேதுபதியே மறந்துவிட்டாரோ? என்னவோ என்று அவருக்கும் சிலர் சப்போர்ட்டும் செய்கின்றனர்.

    ரசிகர்கள் கேள்வி

    காரணம் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட ஒரு சிலரை ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர் அதைப் பற்றி அப்படியே மேடையில் பேசியிருக்கிறார். ஆனால் இவரை பற்றி விஜய் சேதுபதி பேசவில்லை என்றால் ஒருவேளை அவருக்கு மறந்திருக்கலாம் என்று அவருக்கு அதிக சப்போர்ட் கிடைக்கிறது‌. எது எப்படியோ ரகு செலக்ட் ஆகவில்லை ஆனாலும் இதை வைத்து இப்போ விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    கடந்த சீசனை கம்பேர் பண்ணும்போது இந்த சீசன் போட்டியாளர்கள் ஸ்ட்ராங்காகவே இருக்கிறார்கள். அதனால் இந்த சீசன் சுவாரசியமாக இருக்குமா? அல்லது வழக்கம் போல சண்டை சச்சரவோடு இருக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Bigg Boss: Bigg Boss Tamil season 10 premiered grandly on Vijay TV yesterday. However, true to form, controversies surrounding the show have already erupted right after its launch. A photograph featuring Vijay Sethupathi has surfaced, prompting reactions of disbelief—specifically, "Already? On the very first day?"