சென்னை: சினிமா ரசிகர்கள் என்றால் தங்களுக்கு பிடித்த நடிகரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஒரு படம் நன்றாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். பிடித்த நடிகருக்காக குரல் கொடுக்கலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த அன்பு எந்த இடத்தில் போய் நின்று விடுகிறது என்றால், நமக்குப் பிடித்தவர் செய்வது எல்லாமே சரி, அவர் பற்றி சொல்லப்படும் எல்லாமே உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். இப்போது சிக்மா படம் தொடர்பாக ஒரு விஜய் ரசிகை பேசியிருக்கும் விஷயத்தைப் பார்த்தால், இப்படியெல்லாம் கூட ஒரு ரசிகரால் நம்ப முடியுமா என்ற கேள்விதான் வருகிறது.
சிக்மா படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு பெரியதாக இல்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக முதல் நாளில் ரூ.2.35 கோடி இந்திய நெட் வசூல் செய்த படம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா ரூ.1.50 கோடி அளவிலேயே இருந்தது. முதல் திங்கட்கிழமையில் ரூ.84 லட்சமாக வசூல் குறைந்து, 4 நாள் இந்திய நெட் வசூல் ரூ.6.19 கோடியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த வசூல் குறித்து பேசும்போதுதான் விஜய் ரசிகை ஒருவர் பேசியிருக்கும் விஷயம் கவனம் பெறுகிறது. அவர் சொல்வது என்னவென்றால், விஜய் அண்ணாவின் மகன் ஒரு படம் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து விஜய்யிடம் கொடுத்திருக்கிறார். அதை விஜய் மக்களுக்காக செலவு செய்து கொண்டிருக்கிறார். வெளியே தெரியாமல் நிறைய உதவிகளைச் செய்கிறார். நீட் தேர்வுக்காக போராடுபவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். பொதுவாக நாம் செய்யும் உதவிகள் ஊடகங்களில் வர வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதை வெளியே காட்டுவார்கள். ஆனால் விஜய் அப்படியில்லை. விஜய் மகன் நடித்து சம்பாதித்த பணத்தையே அரசு பணமாக்கி மக்களுக்காக செலவு செய்கிறார் என்றும் அவர் கூறுகிறார். அதேபோல ஜனநாயகன் படத்தின் வசூலையும் கட்சிக்காக செலவு செய்ததாகவும், எல்லாமே மக்களுக்காகத்தான் என்றும் அந்த ரசிகை பேசியிருக்கிறார். இதில் நமக்கு முதலில் தோன்றுவது ஒன்றுதான். சிக்மா படத்தை ஜேசன் சஞ்சய் நடித்தாரா? ஜேசன் சஞ்சய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை. சிக்மா அவருடைய முதல் இயக்குநர் படம். சுந்தீப் கிஷன்தான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான படம் என்பதுதான் அடிப்படை விஷயம். அப்படியிருக்கும்போது, "விஜய் மகன் ஒரு படம் எடுத்தார், அந்தப் பணத்தை அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தார்" என்று பேசுவது எந்த அளவுக்கு குழப்பமான புரிதல் என்பதை நாமே யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் அந்தப் பணத்தை விஜய் வாங்கி, அரசு பணமாக்கி, மக்களுக்காக செலவு செய்கிறார் என்ற அடுத்த கட்ட கதை இன்னும் பெரிய விஷயம். ஒரு படம் வசூல் செய்கிற பணம் எப்படி நேரடியாக அரசின் பணமாக மாறும்? அதற்கு என்ன நடைமுறை? அந்தப் பணம் அரசு கணக்குக்குள் எப்படி செல்கிறது? அதற்கான எந்த ஆதாரம் இருக்கிறது? என்ற அடிப்படை கேள்விகள் கூட கேட்காமல், "விஜய்ணா எல்லாவற்றையும் மக்களுக்காகத்தான் செய்கிறார்" என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவது தான் இங்கே ஆச்சரியம். இதுதான் இப்போது சமூக வலைதளங்களைப் பார்க்கும்போது சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது ஒரு தகவலை தெரிந்துகொள்ள நமக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு படம் யார் இயக்கியது? யார் நடித்தது? எவ்வளவு வசூல் செய்தது? தயாரிப்பாளர் யார்? என அனைத்தையும் சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும். இப்படி தகவல் கையில் இருக்கும் காலத்திலும், நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி ஏற்கனவே மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை நாமே உருவாக்கிக்கொள்வது தான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. இது விஜய் ரசிகர்களை மட்டும் குறை சொல்வதற்கான விஷயம் கிடையாது. எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் இப்படியான கண்மூடித்தனமான ஆதரவு வரும்போது இதே பிரச்சனைதான். ஆனால் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தால், இதுபோன்ற வீடியோக்களும் பேச்சுகளும் வேகமாகப் பரவுகின்றன. அதனால்தான் ஒரு விஷயம் இன்னும் முக்கியமாகிறது. நடிகரை பிடித்திருக்கிறது என்பதற்காக அவர் தொடர்பான ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்காமல் உண்மை என்று நம்ப வேண்டிய அவசியமில்லை. அதுவும் சமூக வலைதள காலத்தில் இப்படியான பேச்சுகள் அப்படியே ஆயிரக்கணக்கான பேரிடம் சென்று சேரும். அதனால் தான் ரசிகராக இருப்பதிலும் ஒரு சின்ன பொறுப்பு இருக்கிறது. விஜய்யை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். அவருடைய அரசியல் செயல்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்கிய படத்தைப் பற்றிய அடிப்படை தகவல் கூட தெரியாமல், அதிலிருந்து ஒரு பெரிய அரசியல் கதையை உருவாக்கிவிடுவது பார்த்தவர்களை நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. கண்மூடித்தனமான ரசிகத்தனம் வளர்ந்து கொண்டே போகும்போது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்துவிடக் கூடாது என்பதுதான் இங்கே சொல்ல வேண்டிய விஷயம்ரசிகையின் புலம்பல்
இப்படியும் நம்புகிறார்களே
பத்தா Vs சிக்மா.. நேற்றைய வசூலில் தெரிந்த வித்தியாசம்! ஜேசன் சஞ்சய்க்கு இது கொஞ்சம் சிக்கல் தான்
அடிப்படை புரிதல் இல்லை
சொதப்பிய விஜய் திட்டம்! கர்நாடகா, தெலங்கானா வரிசையில் தமிழ்நாட்டிலும் வெடித்த போக்குவரத்து சர்ச்சை!
ரசிகர்கள் கருத்து