00:00 டைமிங்.. த்ரிஷா போஸ்ட்டில் அதை பார்த்தீங்களா? அந்த 3 இத்தாலி கேக் சென்னைக்கு எப்படி வந்தது?


  • சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில், சோஷியல் மீடியாவையே அதிர வைத்தது நடிகை த்ரிஷாவின் நள்ளிரவு போஸ்ட் ஒன்று.. இதை பற்றின யூகங்களும், சந்தேகங்களும், கணிப்புகளும் சோஷியல் மீடியாவில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்!!

    Advertisement

    ஜூன் 22ம் தேதி முதல்வர் விஜய் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.. அப்போது த்ரிஷாவின் வாழ்த்துக்காக ரசிகர்களும், தொண்டர்களும் காத்து கிடந்தனர்.. ஆனால், ஒரு நாள் தாமதமாகவே வாழ்த்து வெளியானது.

    Advertisement

    கடந்த வருடம் விஜய்யின் பிறந்தநாளுக்கு தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வாழ்த்தியிருந்தார் த்ரிஷா.. இந்த முறை விஜய்யின் பிறந்தநாள் முடிந்த மறுநாள், அதாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

    த்ரிஷா பதிவிட்டது ஏஐ போட்டோவா

    "எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்த அவர், தான் முதல் ஆளாக வாழ்த்தியதைக் குறிக்கும் வகையில் நள்ளிரவு நேரமான '00.00' என்றும் பதிவிட்டிருந்தார். த்ரிஷா பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில் விஜய் கேக் வெட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் மிகப்பெரிய விவாதம் ஆரம்பமாகி விட்டது.

    Advertisement

    த்ரிஷா வெளியிட்ட அந்த போட்டோவின் உண்மைத்தன்மை குறித்து இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது நிஜமான போட்டோ கிடையாது.. ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட "செய்யறிவு" படம் என்று ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.

    இது பழைய போட்டோ

    ஆனால், இன்னொரு தரப்பினரோ, இது ஏஐ படம் கிடையாது, விஜய் ஏற்கனவே பழைய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட பழைய போட்டோ என்கிறார்கள்.

    அதாவது கடந்த 2024ம் ஆண்டில் இதே போல ஒரு சட்டையை விஜய் அணிந்திருந்தாராம்.. அதையே இப்போது ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இருந்தாலும் அது பழைய போட்டோ என்ற வாதத்தையும் உடைக்கும் வகையில், அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள செல்போன் மாடல் கடந்த 2025ம் ஆண்டில் தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி, இது சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவோ அல்லது ஏஐ தொழில்நுட்பமாகவோதான் இருக்க வேண்டும் என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    Advertisement

    குழப்பம் தந்த ஹைதராபாத் கேக்குகள்

    இந்த விவாதங்களுக்கு நடுவே, த்ரிஷா ஷேர் செய்திருந்த போட்டோவில், டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த கேக்குகளும் எக்கச்சக்கமான டவுட்களை கிளப்பி விட்டுள்ளது.

    அந்தப் படத்தில் இத்தாலி நாட்டு பாரம்பரிய இனிப்பு வகையான டிராமிசு (Tiramisu) எனப்படும் 3 சிறிய கேக்குகளும், மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவைகளிலான 2 பெரிய கேக்குகளும் வைக்கப்பட்டிருந்தன. உடனே நெட்டிசன்கள் இதனையும் அலறி ஆராய ஆரம்பித்துவிட்டனர்..

    ஸ்பெஷல் கேக்குகள்

    அந்தப் படத்தில் இருக்கும் குறிப்பிட்ட டிராமிசு கேக்குகள் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான குறிப்பிட்ட பேக்கரி கடையில் மட்டுமே கிடைக்கக்கூடியவையாம்.. ஹைதராபாத்தில் விற்கப்படும் அந்த ஸ்பெஷல் கேக்குகளை சென்னைக்கு த்ரிஷா எப்படி கொண்டு வந்தார், அல்லது இந்தச் சந்திப்பு எப்போது நடந்தது என்ற புதிய கோணத்தில் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்த போட்டோவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது ஹைதராபாத் கேக் பின்னணியில் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது மறுப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...!!

    English Summary

    Did You Notice That Detail in Trisha's Post at the 00:00 Mark? How Did Those Three Italian Cakes Make Their Way to Chennai?