அண்ணன் நெற்றியில் திருநீறு இருக்கு பார்த்தீங்களா? திருமாவளவனை பற்றி கூல் சுரேஷ் ஆதங்கம்

  • சென்னை: அரசியல் தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் என்ன செய்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான விவாதங்கள் எழுகின்றன என்பதுதான் இப்போது அதிக கவனம் பெறுகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து கொண்டாடிய நிகழ்ச்சி தொடர்பான வீடியோவும், இதை பற்றி நடிகர் கூல் சுரேஷ் பேசிய வீடியோவும் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

    Advertisement

    ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை அலங்கரித்து பூஜை செய்து கொண்டாடினார்கள். இந்த சூழலில் திருமாவளவனும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து ஆயுத பூஜை கொண்டாடி இருக்கிறார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவர் திருநீறு பூசி விட்டிருக்கிறார், அவரது நெற்றியிலும் திருநீறு இருந்தது அப்போது பக்கத்தில் இருந்த கூல் சுரேஷ், திருமாவளவனை பற்றி பேசியிருப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    கூல் சுரேஷ் ஆதங்கம்

    திருமாவளவனின் நெற்றியில் திருநீறு இருப்பதை காட்டி, அண்ணனை பார்த்து நீங்க திருநீறு அழிக்கிறார் என்று சும்மா குழப்பத்தை உண்டாக்குவீங்களே... இப்ப பார்த்தீங்களா, அண்ணனோட நெற்றியில் திருநீறு இருக்கு என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் அதை கேட்டு திருமாவளவன் சிரித்துக்கொண்டு இருக்கிறார் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமாவளவனின் செயல்களை வைத்து அவரை சுற்றி தேவையில்லாத சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக கூல் சுரேஷ் சொல்லி இருக்கிறார்.

    ஏற்கெனவே எழுந்த திருநீறு சர்ச்சை

    கூல் சுரேஷ் இப்போது பேசியிருப்பதற்குப் பின்னால் ஒரு பழைய விவாதமும் இருக்கிறது. கடந்த 2025ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றிருந்த திருமாவளவனுக்கு திருநீறு பூசப்பட்டது. பின்னர், அங்கிருந்து வெளியே வந்தபோது செல்ஃபி எடுக்க முயன்ற சமயத்தில் அவரது நெற்றியில் இருந்த திருநீற்றைத் துடைத்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து திருமாவளவனும் பின்னர் விளக்கம் அளித்திருந்தார். திருநீற்றை அவமதிக்கும் நோக்கத்தில் தான் துடைக்கவில்லை என்றும், நெற்றியில் வியர்வை இருந்தால் வழக்கமாகத் துடைக்கும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    மேலும், கோயிலில் தன்னை சிறப்பித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஆயுத பூஜை நிகழ்ச்சியில் அவர் திருநீறு பூசி இருந்ததை வைத்து கூல் சுரேஷ் பேசியிருப்பது, அந்த பழைய விவாதத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

    English Summary

    Thirumavalavan: A video showing Viduthalai Chiruthaigal Katchi (VCK) leader Thol. Thirumavalavan celebrating Ayudha Puja alongside auto-rickshaw drivers, as well as a video of actor Cool Suresh speaking about this event, are currently gaining attention online.