சொந்த வாழ்க்கையிலும் பட்ட கஷ்டம்.. ஜானகி பற்றி தழுதழுத்த குரலுடன் இளையராஜா! இவரே இப்படி பேசிட்டாரே?


  • சென்னை: இளையராஜா பொதுவாகவே தன்னுடைய உணர்வுகளை வெளியே அதிகமாக காட்டிக் கொள்ள மாட்டார். மிக நெருக்கமானவர்களின் மறைவில் கூட நிதானமாக பேசிவிட்டு நகர்ந்து விடுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட தன்னுடைய நண்பர் பாரதிராஜாவின் மறைவின்போது கூட தைரியமாகத்தான் பேசியிருந்தார். ஆனால் இப்போது பாடகி எஸ் ஜானகியின் மறைவு குறித்து இளையராஜா வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    Advertisement

    இளையராஜா வெளியிட்ட வீடியோ

    அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் ராஜா சார் இவ்வளவு உடைந்து பேசுவதை பார்க்கவே கஷ்டமா இருக்கு என்று உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் இளையராஜா பேசும் போது, பெரும் மதிப்பிற்குரிய பாடகி ஜானகி அம்மாவின் இறப்பு செய்தியை கேட்டு நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன். இது மிகவும் வருத்தமான செய்தி.

    Advertisement

    தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் எத்தனையோ தாங்க முடியாத துக்கங்கள், கஷ்டங்களையும் தாங்கி அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்று குரல் தழுதழுக்க பேசினார். ஜானகி அம்மாவின் கடைசி காலத்தில் அவருடைய ஒரே மகனின் மறைவு, சின்ன வயதிலேயே இறந்த கணவர், அதற்குப் பிறகு தான் கஷ்டப்பட்டு வளர்த்த மகனும் தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்ற சோகத்தை பற்றி தான் இளையராஜா சொல்லி இருக்கிறார்.

    ஜானகி பற்றி பாராட்டு

    மேலும் இளையராஜா பேசும் போது, நான் ஒரு பாடலை உருவாக்கும்போது ஒவ்வொரு வாக்கியத்தையும் விடாப்படியாக சேர்த்து, நான் நினைத்ததை வரவழைக்க உழைப்பேன். அதேபோல நான் சொல்லிக் கொடுத்த பாடலில் ஜானகி அம்மாவும் விடாப்படியாக உழைப்பார்கள். என்னுடைய கடின உழைப்புக்கு ஈக்குவலாக உழைப்பை போடுவார்... அதற்கு மேல் என்று கூட சொல்லலாம். அவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

    Advertisement
    Ilaiyaraaja: நண்பன் பாரதிராஜாவின் அசைவற்ற உடல்.. வித்தியாசமாக பேசிய இளையராஜா

    பாடகி ஜானகிக்கு இளையராஜா இரங்கல்

    இளையராஜா எப்போதுமே யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே இருப்பார். கடினமான உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். இந்த வயதிலும் இந்த தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் பாடல்கள் கொடுப்பது அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஆனாலும் தன்னைவிட பாடலில் சிறந்தவர் என்று ஜானகியை வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார்.

    55 வருஷம் பாடிய பிறகுதான் ஞாபகம் வந்ததா? பத்மபூஷனையே வேண்டாம் என்று சொன்ன எஸ் ஜானகி.. காரணம் தெரியுமா?
    மேலும் ஜானகி இசைஅமைப்பாளர் ஆகவும், பஜனை பாடல்களை எழுதியும் இருக்கிறார் அவர் திறமைசாலி என்றும் இளையராஜா பாராட்டி இருக்கிறார். ஜானகியில் மறைவு சினிமா பாடல் ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்து வைத்திருந்தாலும் இப்போது இளையராஜாவின் பாராட்டு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

    English Summary

    Ilaiyaraaja : Ilaiyaraaja has shared an emotional video mourning the demise of legendary playback singer S Janaki. Recalling her painful personal struggles and dedication to music, he said Janaki worked with the same intensity as him and perhaps even harder while perfecting songs.