எங்க பொண்ணுங்க தாலியை அறுக்காதீங்க.. கொடுங்கோல் ஆட்சி! விஜய் இதை செய்யணும்! இயக்குனர் கௌதமன் ஆதங்கம்

  • சென்னை: இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்றால் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். 100 நாட்கள் ஆட்சியில் நடந்த கொலை குற்றங்கள் எல்லாம் போன ஆட்சின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இன்னும் இதையே தொடர்ந்து கொண்டிருந்தால் பழைய ஆட்சிதானே நடக்கிறது? என்று இயக்குனர் கௌதமன் ஆதங்கத்துடன் கேள்வி கேட்டிருக்கிறார்.

    Advertisement

    தினமும் காலை விடிந்தாலே ஆயிரக்கணக்கான கொலை, கற்பழிப்பு, கொள்ளை என செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் இது நடந்ததால் முதல்வர் விஜய் அது தீய சக்தி என்று சொன்னாரு. ஆனால் இப்போ அதே நடந்து கொண்டிருக்கிறது. தான்தான் தூய சக்தி என்று சொல்லிக் கொண்டிருக்கும் விஜய் இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் சாராயத்தை தமிழ்நாட்டில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கௌதமன் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    இயக்குனர் கௌதமன் பேட்டி

    அதில் அவர் பேசுகையில், இந்த நாட்டில் குற்ற செயல்களும் நடப்பதற்கு முக்கிய காரணமே சாராயம் தான். அதை தடை செய்ய வேண்டும். அதை நிறுத்தினாலே பாதி குற்றங்கள் நின்றுவிடும். நம்முடைய குழந்தைகள் குடித்து நாசமா போனால் மட்டும் நம்முடைய மனது துடிக்கிறது. ஆனால் நாட்டு மக்கள் குடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தான் இந்த நாடே நடத்த முடியும் என்ற நிலை இருப்பது என்றால் அது எவ்வளவு கேவலமான நிலை.

    கள்ளுகடைக்கு சப்போர்ட்

    இதற்கு முந்தைய ஆட்சியில் எப்படி வேணாலும் இருந்துட்டு போகட்டும். இதற்கு முன்பு இதுதான் பல வருஷங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஆட்சியில் விஜய் அந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அவர் நான் மாற்றத்திற்கான அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் அந்த மாற்றத்தை நிஜத்தில் அவர் நடத்திக் காட்ட வேண்டும். இப்போ கூட கள்ளுக்கடை வரப்போகிறது என்று சொல்கிறார்கள் அப்படி வந்தால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். அதனால் எந்த உயிரும் பலியானதாக நான் கேள்விப்படவில்லை.

    Advertisement

    சாராயக்கடை பிரச்சனை

    ஆனால் சாராயத்தை குடித்து பல முதலாளிகளை வாழ வைத்து மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் பல பெண்களின் தாலி அறுக்கப்படுகிறது. கள்ளுகடை வந்தால் நம்ம ஊரு விவசாயிகள் முதலாளிகளாக மாறுவார்கள். உடலுக்கும் அது கேடு கிடையாது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த கள்ளு கடையை கொண்டு வந்து விட்டு இந்த சாராயக்கடையை நிறுத்த வேண்டும். சாராய கடையிலிருந்து வரும் வருமானத்தை வைத்து தான் இநத நாட்டை நடத்த முடியும் என்றால் இதற்கு முந்தைய ஆட்சி, அதற்கு முந்தைய ஆட்சிகளில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது நடக்கிறது. நானும் தோற்றுப் போய்விட்டேன் என்று இரண்டு கைகளையும் தூக்கி விட வேண்டும்.

    Advertisement

    மாற்றம் வருமா?

    விஜய் இப்போ 100 நாட்களில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு இதற்கு முந்தைய ஆட்சி இருந்த போதைப் பொருள்கள் பயன்பாடு பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் இதே இன்னும் 100 நாட்களுக்கு தொடர்கிறது, அடுத்த வருடமும் இதே தொடர்கிறது என்றால் அப்போது இந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தால் அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று தானே அர்த்தம். அதனால் விஜய் முதலில் சாராயக்கடையை மூட வேண்டும். அதை மூடினாலே தமிழ்நாட்டுக்கு மாற்றம் வந்துவிடும் என்று கௌதமன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    Gauthaman: Director Gowthaman has expressed deep concern, stating that if this country and its people are to prosper, the sale of liquor must be completely eradicated. He questioned whether the murders and crimes occurring during these first 100 days of the administration might be a continuation of the previous regime's legacy—but added that if this pattern persists, it effectively amounts to the old administration continuing in power.