சென்னை: உலக சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கும் சில படங்கள் இருக்கும். ஆனால் சில இயக்குனர்களின் படம் மட்டும் திரைப்படம் என்ற எல்லையை தாண்டி ஒரு நிகழ்வாகவே மாறிவிடும். அந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். தி டார்க் நைட், என ஒவ்வொரு முறையும் சினிமாவையே வேறு உயரத்திற்கு கொண்டு சென்ற நோலன் இப்போது The Odyssey (தி ஒடிசி) மூலம் மீண்டும் தன்னுடைய திறமையால் அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறார்.
லண்டனில் நடைபெற்ற இந்த படத்தில் ஸ்பெஷல் காட்சிக்கு பிறகு வெளியான முதல் விமர்சனங்கள் இந்த படம் சாதாரண ஹாலிவுட் படம் அல்ல என்பதையே காட்டுகிறது. பல சர்வதேச விமர்சகர்கள் இந்த வருடத்தின் மிகப்பெரிய திரையரங்க அனுபவம் இந்த படம் இதுதான் என்று கூறி வருகிறார்கள். சிலர் இதை நோலனின் சிறந்த படங்களில் ஒன்றாகவே வர்ணிக்கிறார்கள்.
தி ஒடிஸி படம் ரிவ்யூ
இந்த படத்தில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் ஹாலிவுட் வரலாற்றில் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்கப்பட்ட முதல் மிகப்பெரிய திரைப்படம் இதுதான். கடல் பயணங்கள் பிரம்மாண்ட போர் காட்சிகள், மலைப்பகுதிகள், உண்மையான கப்பல் என பெரும்பாலான காட்சிகளுக்கு கிராபிக்ஸை மட்டும் நம்பாமல் இயற்கையான லொகேஷன்களிலேயே படமாக்கி இருப்பது ரசிகர்களுக்கு வேற லெவல் அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது.
கிரேக்க இலக்கியத்தில் மிகப் புகழ்பெற்ற காவியங்களில் ஒன்றான ஹோமரின் ஒடிஸியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ப்ரோஜன் போருக்கு பிறகு தனது நாட்டிற்கு திரும்ப போராடும் மன்னன் ஒடிஸியின் நீண்ட பயணத்தை மையமாகக் கொண்டது. இந்த பயணத்தில் அசுரர்கள், கடல் ஆபத்துகள், மர்ம உலகம், மக்களின் செண்டிமெண்ட் என சாகசமும் எமோஷனலும் கலந்த ஒரு பிரம்மாண்டமான உலகத்தை நோலன் உருவாக்கி இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றனர். படத்தின் ஒடிஸியாக நடித்துள்ள மேட் டாமின் தன்னுடைய சினிமா பயணத்தில் ரொம்பவும் கஷ்டமான கேரக்டர் இதுதான் என்று கூறியிருக்கிறார். அவருடைய நடிப்பும் வில்லனாக வரும் ராபர்ட்டின் ஸ்கிரீன் பிளேவும் ரசிகர்களை மிரள வைக்கும் என்று இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். வழக்கமாக நோலன் படங்கள் என்றால் சயின்ஸ், சைக்காலஜி போன்ற விஷயங்களை நினைவுக்கு வரும். ஆனால் இந்த முறை அவர் ஒரு புராண கதையை தன்னுடைய பாணியில் திகில், எமோஷனல், சாகசம் பிரம்மாண்ட காட்சிகள் என கலந்து கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுபோல படத்தின் கிளைமாக்ஸ் திரையரங்கில் கைத்தட்டலை அள்ளும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள தி ஒடிஸி ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படம் வெளியாகும் முன்பே இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் பாராட்டும் படத்தை பற்றி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அதனால் இந்த வருஷத்தில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளில் ஒன்றாக இந்த படம் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. 3 வருஷம் காத்திருந்த படம்... 48 மணி நேரத்திலேயே ஓடிடியில் இருந்து மாயம்! பிரபல நடிகர் படத்துக்கு என்ன நடந்தது?இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படம்
விமர்சகர்களின் பாராட்டு
நோலனின் இன்னொரு சினிமா மாயாஜாலத்தை ரசிக்க உலக ரசிகர்கள் இப்போது நாட்களை எண்ணி காத்திருக்கிறார்கள். ஏற்கனவே தமிழில் இதயம் முரளி, ஜனநாயகன், சிக்மா உட்பட ஒரு சில படங்கள் ஜூலை மாத இறுதியில் தியேட்டரில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அந்த படங்களுக்கு இந்த படம் போட்டியாக இருக்குமா என்பதும் கேள்வியாக இருக்கிறது.