பாக்யராஜ் இறுதி சடங்கில் கூட இதுதானா பேசணும்?.. திரிஷா பற்றி கேட்ட அந்த கேள்வி.. மனம் நொந்து பேசிய பார்த்திபன்


  • சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மறைவு இன்னும் பல ரசிகர்களின் மனதில் இருந்து மறையவில்லை, பாக்யராஜின் இறுதி அஞ்சலியில் குடும்ப உறுப்பினர்களைப் போலவே முன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தவர் இயக்குனர் பார்த்திபன். இறுதி ஊர்வலம் முதல் தகனம் வரை ஓய்வு இல்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கூட தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைத்து இப்போது மனம் நொந்து பேசி இருக்கிறார்.

    Advertisement

    பார்த்திபன் பேட்டி

    சமீபத்தில் பார்த்திபன், பாக்யராஜ் பற்றி பேசியபோது பாக்யராஜ் சாரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு அடி கூட நகர முடியாத அளவுக்கு கூட்டம். அந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே கிளம்பினார். ஆனால் அவரால் காருக்கு கூட போக முடியவில்லை. அதனால் நான் தான் அவரை பாதுகாப்பாக கார் வரை கூட்டிக்கொண்டு சென்றேன் என்று கூறினார்.

    Advertisement

    திரிஷா பற்றிய கேள்வி

    மேலும் நாங்கள் நடந்து போகும் போது சுமார் 300 கேமராக்கள் எங்களை சுற்றிக்கொண்டு வந்துடுச்சு தள்ளி போங்க வழி விடுங்க என்று சொல்லிக்கிட்டே அவரை கார்ல ஏத்திவிட்டேன். அப்போ கூட அங்கு இருந்த ஒருவர் இப்போ திரிஷா வந்தா என்ன பண்ணுவீங்கன்னு? என்னிடம் கேட்டார். இந்த நேரத்தில் கூட இதுதான் கேட்கணுமா. இதெல்லாம் சரியா என்று எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினார்.

    பார்த்திபன் இப்படி பேசியதற்கு பின்னால் ஒரு பழைய சம்பவம் இருக்கிறது சில மாதங்களுக்கு முன்பு அதாவது தேர்தல் சமயத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட போது அது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபனிடம் திரிஷா குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இருந்த குந்தவை கதாபாத்திரத்தை வைத்து தனது வழக்கமான வார்த்தை விளையாட்டு பாணியில் "குந்தவை கொஞ்ச நாள் வீட்டில் குந்த வைத்தால் நல்லது" என்று பேசி இருந்தார்.

    Advertisement
    பாக்யராஜ் தகனத்திற்கு முன் பூர்ணிமா கேட்ட ஒரு கேள்வி..

    முன்பு நடந்த சம்பவம்

    அந்த ஒரு வரி சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையாக மாறியது. பலரும் பார்த்திபனை விமர்சித்தனர். நடிகை திரிஷாவும் மறைமுகமாக தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். அதற்கு பிறகு பார்த்திபனே விளக்கமளித்து யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை என்று மன்னிப்பும் கேட்டு இருந்தார். இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் பாக்கியராஜ் இறுதி அஞ்சலியில் கூட சிலர் அதே விஷயத்தை எடுத்து பேசியதாக பார்த்திபன் இப்போது வேதனையுடன் கூறி இருக்கிறார்.

    பாரதிராஜாவுக்கு நடந்தது வேறு.. ஆனால் பாக்யராஜ்க்கு நடந்ததை ஏத்துக்க முடியல.. பார்த்திபன் சொன்ன காரணம்
    Advertisement

    இந்த பேட்டி வெளியான பிறகு, "ஒருவர் நெருங்கியவரை இழந்து நின்றிருக்கிறார். அந்த நேரத்தில்கூட பழைய சர்ச்சையை கிளப்ப வேண்டிய அவசியம் என்ன?", "பாக்யராஜ் சார் இறுதி அஞ்சலியில் மனிதாபிமானம் தான் முக்கியம். அங்கேயும் பரபரப்பு தேடுவது சரியல்ல", "பார்த்திபன் செய்தது மனிதநேயம். கீர்த்தி சுரேஷை பாதுகாப்பாக கார்வரை அழைத்துச் சென்றதை கூட வேறு கோணத்தில் பார்க்கக்கூடாது" என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Director Parthiban: Director Parthiban has shared a distressing experience from the funeral of his mentor K. Bhagyaraj. Speaking in a recent interview, he said the venue was packed with mourners, making it difficult for people to move. After actress Keerthy Suresh paid her final respects, Parthiban personally escorted her safely through the crowd to her car. He recalled that hundreds of cameras surrounded them during the walk, and amid the chaos, someone unexpectedly asked him what he would do if actress Trisha arrived.