என் நண்பன் செழியன் மறைந்து விட்டான்.. நம்பி இருந்தேனே! என்னை ட்ரெயின் ஏற்றி வைத்து.. கண்கலங்க பேசிய பேரரசு


  • சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் திடீரென உயிரிழந்த செய்தி தமிழ் சினிமாவையே வருத்தத்தில் அழுத்தி இருக்கிறது. பலரும் அவருடைய நினைவுகள் குறித்து பேசி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள வீடியோ பலருடைய மனதயும் உருக்கி இருக்கிறது. தன்னுடைய சின்ன வயது முதல் நண்பராக இருந்த செழியன் குறித்து அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    இயக்குனர் பேரரசு வீடியோ

    பேரரசு வெளியிட்ட வீடியோவில், செழியன் என்னுடைய நண்பன். அவன் இறந்து விட்டான் என்ற செய்தியை இன்னும் நம்ப முடியல. இந்த செய்தியை கேட்டதிலிருந்து மனசே உடைந்து போயிருக்கிறது. நான் சினிமாவை நேசிக்கவும் இந்தத் துறைக்குள் வரவும் முக்கிய காரணமே அவன்தான். ஆரம்ப காலத்தில் எனக்கு பல இடங்களில் துணையாக நின்றவனும் அவன் தான்.

    Advertisement

    என் கனவை நோக்கி சென்னைக்கு புறப்பட்டபோது என்னை ட்ரெயின் ஏற்றி அனுப்பி வைத்தது அவன்தான். நானும் அவனும் சேர்ந்து கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தோம். அவன் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அவனை நம்பித்தான் நிறைய விஷயங்களை செய்தேன். இன்று அவன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்பதே எனக்கு தெரியல என்று கண்கலங்க பேசி இருக்கிறார்.

    பேரரசு கண்ணீர்

    மேலும், செழியனால் இந்த சினிமாவில் பலபேர் வாழ்க்கை பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவனே இப்படி பாதியிலே போய்விட்டான் என்று கண்கலங்கியபடி பேரரசு பேசியிருக்கிறார். இயக்குனர் பேரரசு எப்பவும் தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் பேசுபவர். ஆனால் இப்போது தன்னுடைய நண்பன் இழப்பால் பட்ட வேதனை குறித்து அவர் எமோஷனலாக பேசியது பலருடைய மனதைையும் கனக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    அய்யனார் துணை சீரியலில் இனி கதை இதுதான்.. 4 மருமகள்கள் வந்ததும் நடக்கும் ஆட்டம்.. இயக்குனர் உடைத்த ரகசியம்
    இதே போல இயக்குனர் வசந்த பாலனும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ஒளிப்பதிவாளர் செழியன் மரண செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது... ஏன் செழியன்? ஏன் இப்படி? ஏன் இத்தனை சீக்கிரம்? என்ன அவசரம்? வாழ்வே புரியல..." என்று தன்னுடைய வருத்தத்தை எழுதி இருந்தார். அதுபோல செழியனுடன் வேலை பார்த்த பலரும் செழியன் பற்றிய நினைவுகள்ளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

    Chezhiyan: தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் மறைந்துவிட்டாரே.. இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்
    Advertisement

    தயாரிப்பாளர் செழியன் மறைவு

    செழியன் திறமையான ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த செழியன் 2007 இல் வெளியான கல்லூரி திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதற்கு முன்பு ஸ்ரீ ராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து இருந்தார்.

    கல்லூரி படத்திற்கு பிறகு இரட்டை சுழி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான தருணத்தை தன்னுடைய கேமரா மூலமாக திரையில் காட்டினார். அவர் இறந்துவிட்டாலும் அவருடைய படைப்புகள் அவருடைய பெயரை சொல்லிக்கொண்டு தான் இருக்கும் இன்று பல ரசிகர்களும் கருத்துகூறி வருகின்றனர்.

    English Summary

    Cinematographer Chezhiyan: In the video released by the empire, Chezhiyan is my friend. Still can't believe the news that he is dead. My heart has been broken ever since I heard this news. He is the main reason why I love cinema and got into this industry. He was the one who supported me in many places in the early days. He was the one who sent me on the train when I left for Chennai towards my dream. He and I started a signature movement together. His handwriting is so beautiful. I trusted him and did many things. I couldn't accept that he was gone today. He is talking with his eyes that he does not know how to console his family.