இளையராஜாவுக்கு அவ்வளவு திமிர் இருந்தால்.. எனக்கு எவ்வளவு இருக்கணும்! ஆர் சுந்தர்ராஜன் சர்ச்சை பேச்சு

  • சென்னை: இயக்குனரும், நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் இளையராஜாவை பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் படைப்பாளிக்கு தனது திறமை மீது நம்பிக்கையும் ஒரு விதமான கர்வமும் இருக்க வேண்டும் என்று பேசி இருப்பதுதான் தற்போது விவாதமாகி இருக்கிறது.

    Advertisement

    இயக்குனர் சுந்தர்ராஜன் பேச்சு

    கருப்பட்டி படத்தின் பிரமோஷனில் பேசிய சுந்தர்ராஜன், ஒரு மியூசிக் டைரக்டரான இளையராஜாவுக்கே அவ்வளவு தொழில் திமிரு இருந்தால் ஒரு எழுத்தாளரான எனக்கு எவ்வளவு திமிரு இருக்க வேண்டும்? எழுத்தாளனுடைய பேனா வேண்டும் என்றால் எழுதும்போது தலை குனியும், ஆனால் எழுத்தாளன் ஒருபோதும் தலை குனிய மாட்டான் என்று அவர் பேசி இருக்கிறார். இதை வைத்து தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    சிலர் திறமை இருக்கிறது என்பதற்காக திமிர் அவசியமா? என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் சுந்தர்ராஜன் இளையராஜாவை குறைத்து பேசவில்லை, படைப்பாளிகளுக்கு தனது திறமை மீது இருக்க வேண்டியது தன்னம்பிக்கையை அவர் இப்படி சொல்லி இருக்கிறார் என்று அவருக்கு சப்போர்ட்டும் செய்கிறார்கள். ஆனால் அதிகமான ரசிகர்கள் இளையராஜா தான் எந்த இடத்திலும் திமிராக பேசுகிறார் என்றால் இவர் அவருக்கே டப் கொடுக்கிறாரே என்று கலாய்க்கிறார்கள்.

    பின்னணி என்ன

    சுந்தர்ராஜன் இயக்குனராக இருந்த சமயத்தில் அவருடைய பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்து அந்த பாடல்களும், படங்களும் செம ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்களை ஆர் சுந்தர்ராஜன் இயக்கி இருக்கிறார். அந்த படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்குள் ஏதேனும் மோதல் இருந்திருக்கலாமோ? அதனால் தான் இப்படி பேசி இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    ஏற்கனவே அதே நிகழ்ச்சியில் சுந்தர்ராஜன், ரஜினிகாந்த் பற்றியும் விமர்சித்து பேசி இருந்தார். அதுபோல கோவை குண்டு வெடிப்பில் இறந்த அப்பாவிகள் பற்றியும் அவர் சர்ச்சையாக பேசியதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இளையராஜாவை பற்றி இப்போ மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.

    English Summary

    R. Sundarrajan: A video of director-actor R. Sundarrajan speaking about Ilaiyaraaja is currently going viral on social media. The discussion centers on his statement that a creator must possess both confidence in their talent and a certain sense of arrogance.