இயக்குனர் சரண்ராஜ் மரணம் விபத்து இல்ல.. 3 வருஷத்துக்கு பிறகு திரும்பிய வழக்கு.. நீதிமன்றம் சொன்ன தகவல்!

  • சென்னை: சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகவும், சில படங்களில் நடிகராகவும் இருந்த சரண்ராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவு நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சரண்ராஜ் மீது துணை நடிகர் பழனியப்பன் ஒட்டி வந்த கார் மோதியதாக அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுபோதையில் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து என்றுதான் அந்த நேரத்தில் இந்த மரணம் பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    சரண்ராஜ் மரணம் வேறு விபத்துதானா? அல்லது அவரை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டு இருக்கிறாரா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சம்பவம் இது. மதுரவாயல் பகுதியை சார்ந்த சரண்ராஜ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் துணை நடிகராகவும் இருந்தார். குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறனுடன் வடசென்னை படத்தில் துணை இயக்குனராக இருந்திருக்கிறார். அந்த படத்தில் மட்டுமல்லாமல் அசுரன் படத்திலும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

    Advertisement

    இயக்குனர் சரண்ராஜ் விபத்து

    சம்பவத்தன்று இரவு கேகே நகர் ஆற்காடு சாலையில் சரண்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரை ஓட்டி வந்தவர் நடிகர் பழனியப்பன் என்றும் அவர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது. அதனால் ஆரம்பத்தில் இந்த வழக்கு மது போதையில் நடந்த விபத்து என்ற கோணத்தில் தான் நகர்ந்தது. ஆனால் சரண்ராஜ் குடும்பத்தினருக்கு இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

    சரண்ராஜ் அம்மா கொடுத்த மனு

    சரண்ராஜ் அம்மா தரப்பில் தன்னுடைய மகன் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவரை திட்டமிட்டு கொலை பண்ணிட்டாங்க அதற்கு காரணம் பணம் விஷயம்தான், ஏற்கனவே பழனியப்பன் சரண்ராஜிடம் வாங்கி இருந்த கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் பழனியப்பன் சரண்ராஜை திட்டமிட்டு கார் ஏற்றி கொன்றதாக அவருடைய அம்மா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதான் வழக்கின் போக்கையை மாற்றக்கூடிய முக்கியமான குற்றச்சாட்டாக மாறி இருக்கிறது.

    நீதிமன்ற நடவடிக்கை

    வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுவது சிசிடிவி காட்சிகள் தான். கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தற்செயலாக சரண்ராஜ் பைக் மீது மோதியது போல மட்டும் சம்பவம் தெரியவில்லை என்றும் சரண்ராஜை குறிவைத்து காரில் மோதி இருக்கலாம் என்பதற்கான அம்சங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் விசாரணை நடத்திய ஆய்வாளர் அகிலா வழக்கை சரியான முறையில் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நடிகர் பாண்டியராஜ் மகனுக்கு நடந்த விபரீதம்.. ஒகேனக்கலில் காதலியுடன் தொங்கவிட்ட இயக்குனர்
    விசாரணையில் இருந்த குறைபாடுகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் இதன் காரணமாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதோடு அவரை அடுத்த 3 வருடங்களுக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் நேர்மையான அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து 60 நாட்களுக்குள் மேல்விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    English Summary

    Saranraj death: The death of Saranraj—who had worked as an assistant director under filmmaker Vetrimaaran and acted in several films—in a 2023 road accident came as a shock at the time. A case was originally registered stating that a car driven by supporting actor Palaniappan had collided with Saranraj’s motorcycle at night. However, a significant twist has now emerged in the case after all this time.