சென்னை: பொதுவாகவே சினிமாவில் தமிழ் பெண்களை விடவும் மற்ற மொழி பெண்களுக்கு தான் அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது என்று நடிகைகளும், ரசிகர்களுமே ஆதங்கம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சுந்தர்ராஜன் சமீபத்தில் நடைபெற்ற கருப்பட்டி பட ப்ரமோஷனில் தமிழ் பெண்களின் அழகு பற்றியும் சின்ன பட தயாரிப்பாளர்கள் படும் கஷ்டங்கள் பற்றியும் இருக்கிறார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சினிமா உலகத்தில் இப்போது ஒரு மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான பொருள் செலவில் அளவில் எடுக்கப்படும் படங்கள் கூட பெரிதாக கவராமல் போய்விடுகிறது. அதே நேரத்தில் இயல்பாக மக்களுடன் கனெக்ட் ஆகுற மாதிரி சின்னதாக எடுக்கும் படங்கள் கூட ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து விடுகிறது. அந்த படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். 100 கோடி வசூலை அசால்டாக அடித்து விடுகிறது.
இது குறித்து தான் இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், தமிழ் பெண்களை விட எங்கேயும் அழகு என்று சொல்லிவிட முடியாது. நம்முடைய நாட்டிலேயே பெண்கள் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். நாம பார்த்த அழகிகளை இன்னும் சினிமாவில் பார்க்கல என்று சொல்லலாம். இப்போ மற்ற மொழிகளில் இருந்து தான் இங்கே தமிழ் சினிமாவில் பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தமிழ் பெண்களுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆரம்பத்தில் தமிழ் பெண்கள் நம்முடைய கேரக்டருக்கு செட் ஆகுமா என்ற கேள்வியை எழுந்தது? அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று ஒரு மனநிலையிலேயே பலரும் அவர்களை இருக்க வைத்து விட்டோம். ஆரம்பத்தில் கூட அதிகமான தமிழ் நடிகைகள் நடித்திருந்தனர் இப்ப இருக்கிற படங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும். அதுபோல அதிகமான பட்ஜெட்டில் எடுக்கும் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் கூட மக்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. லப்பர் பந்து, பேமிலி மேன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படத்தை எல்லாம் மக்கள் முதல் நாள் பார்க்கவில்லை என்றாலும் அடுத்த காட்சிக்கு வந்து குவிய தொடங்கி விட்டார்கள். மக்கள் நல்ல படத்தை பார்க்க காத்திருக்கிறாங்க. ஆனா அதுக்கு தகுந்த மாதிரி நாம தான் எடுக்கணும். தமிழ் சினிமாவில் சின்ன படங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்கிறாங்க. அதை வெளிய காட்டுனா தானே மக்கள் அதை பார்ப்பாங்க. பொங்கல், தீபாவளி வந்தால் பெரிய படங்கள் மட்டும் தான் வெளியிடுறாங்க. அப்போ சின்ன படங்கள் எடுக்குறவங்களோட நிலைமை என்ன ஆகும்? அந்த படத்தின் நடிகர் கூட தயாரிப்பாளருக்கு உதவ மாட்டாரு. அவர் வேலை முடிந்ததும் போய்விடுவாரு. அதனால பொதுவாக பொங்கலுக்கு பெரிய படங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், தீபாவளிக்கு சின்ன படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அல்லது தீபாவளிக்கு பெரிய படங்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு பொங்கலுக்கு சின்ன படங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். அப்போதுதான் சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மீண்டும் மீண்டும் நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சியில் சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார். இப்போதைய தலைமுறைக்கு சுந்தர்ராஜனை பெரிதாக தெரிந்திருக்காது. அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று தான் தெரியும். ஆனால் அவர் பல ஹிட்டான படங்களை இயக்கியவர் என்பது 90 கிட்ஸ்களுக்குத் தான் தெரியும். இப்போது அவர் பேசியதும் சரிதான் என்று அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.இயக்குனர் சுந்தர்ராஜன் பேட்டி
ரசிகர்களின் மனநிலை
இயக்குனர் சுந்தர்ராஜன் வேண்டுகோள்
ரசிகர்கள் கருத்து