சென்னை: நடிகர் மோகன்லால் தனது வீட்டில் 10 யானை தந்தங்கள் மற்றும் 13 தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.. அந்தவகையில், யானை தந்தங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவேளை அந்த தந்தங்கள் 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த யானைகளுடையது என உறுதிப்படுத்தப்பட்டால், மோகன்லால் சட்டப்படி சிக்கலை சந்திக்க நேரிடும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்திருக்கும் யானை தந்தங்கள் மற்றும் வனவிலங்கு சார்ந்த பொருட்கள் குறித்து பொதுமக்கள் தாங்களாகவே தகவல் அளித்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு வழங்கப்படும் என மாநில வனத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், நடிகர் மோகன்லால்... தனது வீட்டில் 10 யானை தந்தங்கள் மற்றும் 13 தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்தச் சோதனையின்போது, தேவாரா பகுதியில் அமைந்துள்ள மோகன்லாலின் இல்லத்திலிருந்து 4 யானை தந்தங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இந்தத் தந்தங்கள் தனக்குப் பரிசாக வந்தவை என்று மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய சட்டப்படி யானை, மான், மயில் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதோ அல்லது அவற்றின் உடற்பாகங்களை வீட்டில் வைத்திருப்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். யானை தந்தம் மிகவும் மதிப்புமிக்க பொருள் என்பதால், மோகன்லால் மீது சட்டவிரோதமாக அதனை வைத்திருந்ததாக வழக்குத் தொடரப்பட்டது. 2011ல் இந்த வழக்கில் அவர் சிக்கிய போது, இதிலிருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்த வழக்கு கடந்த 15 வருடங்களாக இதற்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே சென்றது.. இப்படி பிரச்சனையாக மாறும் என்று மோகன்லால் நினைக்கவில்லை. உண்மையிலேயே அதனை அவர், ஒரு அலங்காரப் பொருளாகவே வீட்டில் வைத்திருந்தார். கேரளாவில் நடிகர்களுக்குப் பெரிய அரசியல் செல்வாக்கு உண்டு. மோகன்லால் ஒரு பவர் சென்டர் போல விளங்கியதால், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை தொடர்ந்து நடத்தினார். குறிப்பாக 2015-2016 காலகட்டத்தில், கேரள அரசே சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, "பரிசுப் பொருளாக வந்தால் அதனை வீட்டில் வைத்திருக்கலாம்" என்பது போல ஒரு விதியை உருவாக்கி மோகன்லாலுக்கு யானை தந்தங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை வழங்கியது. இந்த உரிமம் வழங்கப்பட்ட பிறகும்கூட வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. கடைசியில், நீதிமன்றம் இந்த உரிமத்தை அதிரடியாக ரத்து செய்தது. வனவிலங்குகளை வேட்டையாடி பெறப்படும் பொருட்களுக்கு எப்படி அரசாங்கம் உரிமம் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி நீதிமன்றம் அதனை ரத்து செய்ததால் மோகன்லால் அதிர்ச்சியடைந்தார். உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மோகன்லால் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரத்தை இப்போது தாக்கல் செய்துள்ளார். அதில், 2011ம் ஆண்டு சோதனையில் பிடிபட்ட 4 யானை தந்தங்கள் தவிர, தன்னிடம் மேலும் 10 யானை தந்தங்கள் இருப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவை தவிர, 46 கிலோ எடையுள்ள, யானை தந்தத்தால் செதுக்கப்பட்ட சிலைகள் அதாவது கிருஷ்ணர், ராமர், முருகன், திருப்பதி கோயில் மினியேச்சர் என மொத்தம் 13 சிலைகள், ஓவியங்கள் என்று பழங்காலப் பொருட்களை தான் வீட்டில் வைத்திருப்பதாகவும், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த யானை தந்தங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தத் தந்தங்கள் 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த யானைகளுடையது என உறுதிப்படுத்தப்பட்டால், மோகன்லால் சட்டப்படி பெரிய சிக்கலைச் சந்திப்பார். அவர் வாங்கிய பொருட்கள் அசல் தானா அல்லது போலியா என்பதையும் இந்த பரிசோதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும். எனினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் தொடர்பான இந்த யானை தந்த வழக்கில் எளிதாக தப்பிக்க முடியாது. டிஎன்ஏ பரிசோதனையில் இந்தத் தந்தங்கள் சமீபத்திய காலத்தைச் சேர்ந்தவை என்று நிரூபணமானால், அவர் கடுமையான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, தண்டனையிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமாகிவிடும். நீதிமன்ற உத்தரவின்படி மோகன்லால் தன்னிடம் இருந்த கூடுதல் தந்தங்கள் மற்றும் சிலைகளைச் சரண்டர் செய்துள்ளார். இனி அவர் மீது சட்டம் பாயுமா அல்லது என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மோகன்லாலை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.கேரளா அரசு
.
இதுகுறித்து ARAMNAADU சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "2011 ம் ஆண்டு ஜூன், ஜூலை மாத காலகட்டத்தில், மலையாள சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி ஆகியோரின் இல்லங்கள் உட்பட, அவர்களுக்கு சொந்தமான எர்ணாகுளம், கொச்சின், திருச்சூர், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடுமையான சோதனைகளை நடத்தியது.மோகன்லால் வீட்டில் சிலைகள்
பவர் சென்டர் நடிகர் மோகன்லால்
Drishyam 3: த்ரிஷ்யம் 3 ரிலீஸ்.. “ஆண்டுகள் கடந்தாலும்.. கடந்த காலம் மாறாது” மிரட்டும் மோகன்லால்!
வீட்டில் 13 சிலைகள்
40 வருடம் கழித்து நடிகர் மோகன்லால் சந்தித்த நடிகை.. உருக்கமாக வெளியிட்ட பதிவு
விசாரணை வளையத்தில் மோகன்லால்?