எனக்கு 800 ரூபாயாக இருந்த சொத்து வரி இப்போ எவ்வளவு தெரியுமா? ப்ளூ சட்டை மாறன் பதிவு! சென்னைவாசிகள் குமுறல்

  • சென்னை: சென்னையில் சொத்துவரி உயர்வு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்று இருக்கிறது. அதில் தனக்கு 800 ரூபாய் இருந்த சொத்து வரி இப்போது 3000 ரூபாயாக மாறி இருப்பதாக ஆதங்கத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விஜய் அரசை விமர்சித்து வரும் நிலையில் இன்று காலையில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், நேற்றிலிருந்து எல்லோரும் சொத்து வரி அதிகரித்து இருக்கிறது என்று சொல்கிறார்களே.. என்ன விஷயம் என்று தெரியுமா? என்று கேட்டிருந்தார். பிறகு சில மணி நேரம் கழித்து அதே போஸ்ட்டை ரீஷேர் செய்து இப்போதுதான் லாகின் பண்ணி பார்த்தேன். 800ல் இருந்து 3000 ஆக மாறி உள்ளது. "What is this bro very wrong bro #propertytax" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    Advertisement

    சென்னை சொத்து வரி பிரச்சனை

    மேலும் நீங்களும் லாகின் பண்ணி எவ்வளவு அதிகரித்து இருக்குன்னு செக் பண்ணிட்டு இங்க போடுங்க என்றும் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறார். இதை அடுத்து அந்த பதிவை பார்த்த பலரும் தங்களது சொத்து வரி கணக்கு சரிபார்த்து வருவதாகவும், சிலருக்கு வரித்தொகை பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அந்த பதிவில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    அதிகரித்த சொத்து வரி

    ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவை மட்டும் வைத்து சென்னை முழுவதும் சொத்து வரி 800ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூற முடியாது. ஒவ்வொரு சொத்துக்கும் கணக்கீடு அதன் கட்டிட அளவு, பயன்பாடு வகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாறுபடக்கூடும். எனவே அவருடைய பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை அவரது குறிப்பிட்ட சொத்து தொடர்பான கணக்காக இருக்கலாம். ஆனால் இந்த பதிவு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் என்னுடைய வீட்டுக்கும் இப்படித்தான் வரி அதிகரித்து இருக்கிறது என்று பல சென்னைவாசிகள் தங்களுடைய குமுறலை கொட்டி தீர்க்கின்றனர்.

    Advertisement

    ஏற்கனவே சொத்து வரிக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பலரும் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்களாம். 2026- 27 ஆம் நிதி ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தாதவர்களிடம் சென்னை மாநகராட்சி தீவிரமாக வசூல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சுமார் 2 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

    சொத்துவரி வசூல் நிலவரம்

    மேலும் சொத்து விரி செலுத்துவதற்கான க்யூ ஆர் கோடு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தற்போது நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நடைபெற்ற சிறப்பு வசூல் முகாம்களில் மட்டும் 103.3 கோடி நிலுவை சொத்து வரி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஜனநாயகன் எப்படி இருக்கு? பார்க்க முடியல கொடுமை! ரஜினியையும் இழுத்து ப்ளூ சட்டை மாறன் அசிங்கப்படுத்திட்டாரே!
    இதனால் ஒரு புறம் மாநகராட்சி நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மறுபக்கம் நாங்கள் செலுத்தி வந்த வரியே இவ்வளவு அதிகமாகி விட்டது என்ற கேள்வியை சில சொத்து உரிமையாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே வீட்டு செலவு, மின்சார கட்டணம், குடிநீர் பராமரிப்பு செலவு என பல்வேறு செலவுகள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் பேசிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சொத்து வரியில் ஏற்படும் இந்த மாற்றமும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

    English Summary

    Blue Sattai Maran: While there are already various discussions going on regarding property tax hike in Chennai, the post of film critic Blue Shirt Maran on his X page is now getting attention. He mentioned with apprehension that his property tax which was 800 rupees has now become 3000 rupees.