சென்னை: ஜனநாயகன் வெளியாகும் முன்பு திரையரங்கில் அதிகம் பேசப்பட்ட விஷயம் படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்தது தான். பாக்ஸ் ஆபிஸில் அதன் தாக்கம் தெரியும் என்று பலரும் கணித்தனர். ஆனால் முதல் மூன்று நாட்களில் வசூல் நிலவரம் அந்த கணிப்புகளை மாற்றி எழுதி இருக்கிறது.
ஆரம்பகட்ட பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி 3வது நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 28.50 கோடி நெட் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 3 நாட்களில் இந்திய நெட் வசூல் 92.35 கோடி எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2வது நாளை விட 3வது நாள் வசூல் அதிகரித்து இருப்பதும் வார இறுதி நாட்களில் குடும்ப ரசிகர்களின் வருகை அதிகரித்து இருப்பதும் திரையுலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருப்பதால் குழந்தைகளால் இந்த படத்தை பார்க்க முடியாது என்பதால் பலரும் குடும்பத்துடன் வருவதற்கு தயங்குவார்கள், அதனால் வசூல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளையும் இப்போது இந்த படம் பொய்யாக்கி இருக்கிறது. அதுபோல கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சென்சார் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகும் முழு படமும் HD தரத்தில் சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது. இதனால் வசூலில் பாதிப்பு வரும், விஜய்யின் கடைசி படம் இப்படி ஆகிவிட்டது என்று பலரும் சொல்லி வந்தனர். ஜனநாயகன் எப்படி இருக்கு? பார்க்க முடியல கொடுமை! ரஜினியையும் இழுத்து ப்ளூ சட்டை மாறன் அசிங்கப்படுத்திட்டாரே! அதுபோல ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹேட்டே, பாபி தியோல், மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அதுபோல படத்தில் சில லாஜிக் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. தெலுங்கு படத்தின் சாயல் என்பதால் சில காட்சிகள் நம்பகத்தன்மை குறைவு போல இருந்தாலும் படத்தை படமாக மட்டும் பார்த்தால் இது குட் என்று சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் படத்தில் மிகப்பெரிய பலம் விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள், அரசியல் பஞ்ச் வசனங்கள், அனிருத் பின்னணி இசை போன்றவை அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதோடு ஒன் லாஸ்ட் டான்ஸ் என்ற உணர்வு ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் பாண்டிங் கொடுத்திருக்கிறது. கடைசியாக திரையில் விஜய்யை பார்க்கப் போகிறோம் என்று ரசிகர்கள் பீலிங்குடன் இணைந்து படத்திற்கு வந்து குவித்து கொண்டிருக்கின்றனர். அதனலேயே வசூலில் பிரதிபலிப்பு தெரிகிறது. 3 நாட்களில் 92 கோடியை கடந்த நிலையில் 4வது நாளிலே படம் 100 கோடி நெட் வசூலை தாண்டும் என்று திரை உலக வட்டாரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். தொடர்ந்து முன்னேற்றம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்த சில நாட்களில் 200 கோடி கிளப்பிலும் ஜனநாயகம் இணையுமா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.ஜனநாயகன் 3வது நாள் வசூல் நிலவரம்
ஆனால் விஜய் ரசிகர்கள் நாங்கள் எங்க தலைவனா சும்மா வழி அனுப்பி வைக்க மாட்டோம், அவருக்கு பெரிய ரெக்கார்டு கொடுப்போம் என்று இப்போது கங்கணம்கெட்டி விட்டார்கள் போல. ஏற்கனவே படம் ரிலீஸான நாளில் பட்டாசு, பாலபிஷேகம், மேல தாளம் கொண்டாட்டத்துடன் பெரிய திருவிழா போல நடந்தது ஆனாலும் 3 நாட்கள் ஆன பிறகும் அதே திருவிழா கொண்டாட்டத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஜனநாயகன் படத்தின் குறை
ஜனநாயகன் படத்தின் பிளஸ்