Jana nayagan 1st day collection: ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லீக்கான படத்துக்கும் மவுசு குறையலையே

  • சென்னை: விஜய்யின் கடைசி படமாக வெளியான ஜனநாயகன்படம் நேற்று ஜூலை 23ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரிலீசானது. (Jana nayagan 1st day box office) முதல் நாளே இந்தப் படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது தெரியுமா? இந்த படம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டதால் இதற்கு யார் பார்க்க வருவார்கள்? என்று ஆரம்பத்தில் விமர்சனங்கள் இருந்தது. ஆனால் நாங்க தளபதி பசங்கடா என்று ரசிகர்கள் கெத்து காட்டி இருக்கிறார்கள்.

    Advertisement

    சும்மாவே விஜய் படம் என்றால் கேட்கவே வேண்டாம் முதல் நாள் காட்சி பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் இப்போது அவருடைய கடைசி படம், முதல்வராக மாறிய பிறகு வெளிவந்த முதல் படம். இதனால் சென்டிமெண்டாகவே இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் பல தடைகளை தாண்டி 7 மாத தவத்திற்கு பிறகு நேற்று இந்த படம் வெளியானது.

    Advertisement

    ஜனநாயகன் நடிகர்கள்

    இந்த படத்தை துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் தான் இயக்கி இருந்தார். அதுபோல இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மற்றும் விஜய்யின் வளர்ப்பு மகளாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார். ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.

    ஜனநாயகன் முதல் நாள் வசூல் நிலவரம்

    சரி இது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் முதலில் நேற்று எவ்வளவு வசூல் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். ஆரம்பகட்ட பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளின்படி ஜனநாயகன் இந்தியாவில் முதல் நாளில் சுமார் 41 கோடி நெட் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் தமிழ் ரிலீஸ் மட்டும் 36.5 கோடி, தெலுங்கு 2.75 கோடி, இந்தி ரிலீஸ் 1.75 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கிராஸ் மதிப்பு 48.27 கோடி, வெளிநாடுகளில் மட்டும் 30 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படும் நிலையில் முதல் நாள் உலகளாவிய வசூல் நிலவரம் 78.27 கோடியை எட்டி இருப்பதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங் ஆக இருக்கிறார்கள்.

    ஜனநாயகன் கொண்டாட்டம்

    ஜனநாயகன் தியேட்டர்ல படம் ஓடுதா? இல்ல திருவிழா நடக்குதா? என்ற கேள்வி எழுகின்ற மாதிரி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழக முழுவதும் பல தியேட்டர்களில் நேற்று அதிகாலையை முதலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். பால் அபிஷேகம், பட்டாசு, மேளம், டிஜே என சில இடங்களில் படம் தொடங்கும் முன்பே திருவிழா ஆரம்பித்துவிட்டது என்றே பலர் சொல்லி வந்தனர்.

    Advertisement

    படத்தின் ஆரம்பகாட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற டைட்டில் கார்டு வந்த இடத்தை எல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்து சோசியல் மீடியாவில் வீடியோக்களை தெறிக்க விடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார். 24 கோடி கிராஸ் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அடுத்ததாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் படம் நல்ல தொடக்கத்தை பெற்று இருக்கிறது.

    ஜனநாயகன் விமர்சனம்

    அதேபோல படத்திற்கு விமர்சனங்கள் ஒரே போல வரவில்லை. ஒரு சிலர் நெகட்டிவ் ஆக சொன்னாலும் அதிகமான ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் சொல்கிறார்கள். இந்த படம் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் போல ஒரு சில இடங்களில் இருந்தாலும் அது தளபதி ஸ்டைலில் ரசிகர்களின் மனதில் படம் பிடித்து விட்டதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    Jana nayagan Review: ஜனநாயகன் ரிவ்யூ.. பகவந்த் கேசரிதானா? விஜய்யின் புது அவதாரமா? முழு படம் எப்படி இருக்கு?
    அதுபோல படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருப்பதால் குழந்தைகளோடு சென்று பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் தளபதி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்திற்கு வந்து ஆதரவு கொடுக்கப் போகிறார்களா? வீக்கண்ட் வசூல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Jana nayagan: Vijay's last film 'Jana nayagan' was released in theaters yesterday on July 23rd. Do you know how much this film has collected on the first day? The film has already been leaked on social media so who will watch it? That was the initial criticism. But the fans are saying that we are not the leader. According to the initial box office accounts, Demokraman has collected around 41 crore nett on its first day in India. It is said that the Tamil release alone has collected 36.5 crores, Telugu 2.75 crores and Hindi release 1.75 crores.