ஜனநாயகன் லீக் ஆனது எப்படி தெரியுமா? இத்தனை நாள் மௌனம் காத்த H. வினோத் உடைத்த சஸ்பென்ஸ்

  • சென்னை: ஜனநாயகன் படம் இன்னும் 2 நாளில் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு எப்படி லீக் ஆனது? அதற்கு முக்கிய காரணம் யார்? என்பது பற்றி இயக்குநர் ஹெச் வினோத் முதல் முறையாக ஓபனாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    முதலில் ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் மட்டும் வெளியானது. அப்போதே அனைவருக்கும் அதிர்ச்சி ஆகிவிட்டது. இத்தனை கோடி செலவழித்து இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கிய படத்தை இப்படி கிளிக் பண்ணிட்டாங்களே என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர். அந்த அந்த நேரத்திலேயே மொத்த படமும் வெளியாகிவிட்டது. அப்போது ஒரு சிலர் படகுழுவே இதை பிளான் பண்ணி லீக் பண்ணிட்டாங்க.. பப்ளிசிட்டிக்காக இப்படி பண்ணுறாங்க என்று விமர்சனங்களும் வைத்தனர்.

    Advertisement

    இயக்குநர் ஹெச் வினோத் பேட்டி

    ஆனால் இது பற்றி அப்போது அமைதியாக இருந்த ஹெச் வினோத் இப்போது முதல் முறையாக விளக்கமாக பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நாங்களே படத்தை லீக் செய்தோம் என்று சொல்லிட்டாங்க, அது கொஞ்சம் கூட உண்மையே கிடையாது. உண்மையில் நாங்க அப்படி செய்திருந்தால் அன்றைய சூழ்நிலையில் விசாரணை அமைப்புகளால் சில மணி நேரத்திலேயே அதை கண்டுபிடிக்க முடியும். அது எங்களுக்கும் தெரியும்.

    நாங்கள் லீக் செய்து இருந்தால் அது எங்களுக்கு தான் பிரச்சனை. ஏனென்றால் இது சாதாரண விஷயம் இல்லை. இந்த விவாகரத்துக்காக ஒரு எஸ் பி, பல டிஎஸ்பிகள், சைபர் கிராம் அதிகாரிகள் என தனிக்குழு அமைக்கப்பட்டது. மாநில அளவிலும், மத்திய அளவிலும் தீவிர விசாரணை நடந்தது. இரவு பகலாக அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள் என்று கூறினார்

    Advertisement

    ஜனநாயகன் லீக்கான விவகாரம்

    மேலும் அவர் பேசும் போது ஆரம்பத்தில் சந்தேகம் முழுவதும் எடிட்டிங் குழு மீது தான் திரும்பியது. காரணம் லீக்கான வீடியோவில் எடிட்டிங் தொடர்பான குறிப்புகள் இருந்ததால் எடிட்டிங் பிரிவில் இருந்த எல்லாருடைய கம்ப்யூட்டரையும் செக் பண்ணி பார்த்தபோதோம். google நிறுவனத்தின் உதவியுடன் சில தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அப்படி கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததா? நான் அப்போ எங்கே இருந்தேன் என்பது போலீசுக்கே தெரியும்! ஹெச் வினோத் ஓபன்
    அதற்கு பிறகு விசாரணை வேற விதத்தில் போனது. படத்தின் ஹார்ட் டிஸ்க் சில நேரங்களில் காப்பி பண்ணி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் எடிட்டிங் குழுவில் ஃப்ரீலான்சராக வேலை பார்த்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை மாறியது. அவர்தான் ஹார்ட் டிஸ்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி படத்தின் காட்சிகளை அவர் காப்பி பண்ணி எடுக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக வினோத் கூறியுள்ளார்.

    Advertisement

    விசாரணை

    அதற்கு பிறகு அந்த காட்சிகளை தனியாக எடிட் செய்து ஆடியோ சேர்த்து முழு படம் போல உருவாக்கி பார்த்ததாகவும். அந்த அறையில் சுமார் 15 பேர் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக வினோத் கூறி இருக்கிறார். பிறகு அந்த வீடியோ நண்பர்கள்.. அவருடைய நண்பர்கள்.. என்று பலருடன் பலர் கைக்கு மாறி இருக்கிறது. ஆனால் இந்த கதையில் இன்னும் ஒரு மர்மம் இருப்பதாகவும் மிகச் வினோத் கூறி இருக்கிறார்.

    அடேங்கப்பா! ஜனநாயகன் டிக்கெட் விலை இவ்வளவா? விஜய் ரசிகர்களை ஷாக் ஆக்கிய அட்வான்ஸ் புக்கிங்
    எல்லா விசாரணமும் நடந்த பிறகும் அந்த பையன் முக்கியமான எந்த தகவலையும் சொல்லவில்லை. பிறகு எங்கள் எடிட்டர் அவனிடம் தனியாக பேசும் போது மன்னிச்சிடுங்க அண்ணா என்று மட்டும் சொல்லி அழுதானே தவிர வேற எதுவும் சொல்லவே இல்லை. இதனால் இதற்கு பின்னால் வேறு யாராவது இருந்தார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

    English Summary

    H. Vinoth: Jana nayagan movie is releasing in theaters in 2 days. How come this film was leaked a few months ago when the fans are in high anticipation for this film? Who is the main reason for that? Director H Vinod has spoken openly about it for the first time.