ஜெயிலர் 2 படத்தில் பறந்து சண்டை போட்ட இந்த 3 பெண்கள் யார் தெரியுமா? ரஜினியுடன் கலக்கல்

  • சென்னை: ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள் ஒருபக்கம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், படத்தில் அதிரடியாக சண்டை போடும் பெண்களும் இப்போது கவனம் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக ரோகா, எடின் ரோஸ், அபேக்ஷா போர்வால் ஆகிய மூன்று பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்துடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, இவர்களை பற்றியும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    ஜெயிலர் 2-வில் கவனம் ஈர்க்கும் பெண்கள்

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் ஏற்கெனவே பல பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கதை இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த சில நடிகர்களுடன், புதிய முகங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் இடம்பெறும் பெண்களும் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளனர்.

    Advertisement

    இந்த படத்தில் நடித்துள்ள எடின் ரோஸ், இந்தி பிக் பாஸ் 18 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலருக்கும் அறிமுகமானவர். மாடலாகவும் நடிகையாகவும் பிரபலமான இவர், ஜெயிலர் 2 படத்திலும் முக்கியமான காட்சிகளில் மிரட்டி இருக்கிற. படத்தில் இவருடைய தோற்றம் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல், அபேக்ஷா போர்வால் படத்தின் டிரெய்லரில் துப்பாக்கியுடன் வந்த காட்சியே பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இவர் முன்னாள் அழகி போட்டி போட்டியாளர் மட்டுமல்ல கிக் பாக்ஸிங், நன்சாகு உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றவர். படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் இடம்பெறும் அதிரடியான சண்டை காட்சியில் கலக்கி இருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுக படத்திலேயே ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.

    Advertisement
    தலைவா.. ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்காக மொத்த தியேட்டரையும் 'புக்' செய்த சஞ்சு சாம்சன்

    இன்னொரு பெண்ணான ரோகாவை பொறுத்தவரை, அவரை பற்றிய விரிவான தகவல்கள் தற்போது அதிகமாக வெளியாகவில்லை. இருந்தாலும், ஜெயிலர் 2 படத்தில் சண்டைக் காட்சிகளில் அவருடைய தனித்துவமும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

    ரஜினியுடன் புகைப்படம்

    இந்தப படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வெள்ளை வேட்டி, சட்டையில் ரஜினிகாந்த் புன்னகையுடன் நிற்க, அவருக்கு அருகில் இந்த நடிகைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

    Advertisement
    தலைவா.. ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்காக மொத்த தியேட்டரையும் 'புக்' செய்த சஞ்சு சாம்சன்

    ரசிகர்களின் தேடல்

    படத்தில் அதிரடியாக சண்டை போடும் பெண்களாக பார்த்தால் படப்பிடிப்புக்கு வெளியே ரஜினியுடன் இயல்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்க ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இதனால், 'ஜெயிலர் 2' படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்த பெண்கள் யார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

    படத்தில் யார் அதிக நேரம் வந்தார்கள் என்பதைத் தாண்டி, சில நிமிடங்கள் வரும் கதாபாத்திரங்கள்கூட ரசிகர்களிடம் பேசுபொருளாக மாற முடியும் என்பதற்கு ஜெயிலர் 2-வில் இடம்பெற்றுள்ள இந்த பெண்களின் ஆக்‌ஷன் காட்சிகளும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளன.

    English Summary

    Jailer 2: While Rajinikanth’s high-octane, mass-appeal sequences in *Jailer 2* are captivating fans, the women performing intense action scenes in the film are also drawing significant attention. In particular, photographs of three women—Roka, Edin Rose, and Apeksha Porwal—have gone viral online. Fans have begun discussing them, sharing the photos they took alongside Rajinikanth.