சென்னை: தமிழ் திரையுலகின் 2 ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரு பல வருஷங்களுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்துள்ள படம்தான் 'தலைவர் 173'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தத் படத்திற்கு தலைப்பு மற்றும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தலைவர் 173 என்ற தற்காலிக பெயரில் ரஜினி, கமல் இருவருமே இணைந்து படப்பணியை ஆரம்பித்தனர்.. இதனால் இந்த படத்தின் துவக்க நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பிவிட்டன.. இப்போது இந்த படத்துக்கு 'தர்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'தர்மத்தின் தலைவன்', 'தர்மதுரை' போன்ற படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானவை.. எனவே அதே வரிசையில், இந்த 'தர்மன்' படமும் ரசிகர்களைப் பெருமளவில் மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியபாகி, ரசிகர்களுக்கு செம ஆச்சரியத்தை தந்து வருகிறது.. காலை 10 மணியளவில் வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் போஸ்டர் வெளியிட்டு நேற்று சோஷியல் மீடியா முழுவதும் பெரும் வைரலான பதிவுகள் ஷேர் ஆகியிருநதன.. எதிர்பார்த்தபடியே இன்று காலை 10 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் சிவப்பு நிற சட்டையுடனும் பேண்டுடனும் காட்சியளிக்கும் ரஜினிகாந்த், ஒருவரைத் தாக்கிவிட்டு கையில் ஆபரேஷன் கத்தியுடன் தனக்கே உரிய ஸ்டைலில் மாஸாக நிற்கிறார். அப்படியானால் இந்த படத்தில் ரஜினி டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த போஸ்டரில் 'டெட்லி ஸ்லோகன்' (Deadly Slogan) என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ஆகிய படங்களின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து 'ஜென் ஜி' (Gen Z) இயக்குநராக முத்திரை பதித்த அஷ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார்.. முன்னதாக ஒரு தனியார் யூடியூப் நேர்காணலில், தான் ரஜினிகாந்திற்கு கதை சொல்லி பாராட்டுப் பெற்றதாக அஷ்வத் மாரிமுத்து குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சிகளை அன்பறிவு கவனிக்கின்றனர். இந்த போஸ்டர் வெளியாகி இப்போது ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்ற கூடுதல் தகவலும் ரசிகர்களுக்காக வெளியாகி உள்ளதால், இரட்டிப்பு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தலைவர் 173
ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆயிருச்சு
ஓ மை கடவுளே
படத்தின் டைரக்டர்