சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் அம்மா கேரக்டர் என்றாலே ஒரு சிலருடைய முகங்கள் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் நடிகை ஜானகி சபேஷும் ஒருவர். கில்லி படத்தில் விஜய்யின் பாசமான அம்மாவாக நடித்த அவர் அயன் படத்தில் யாருமே யோசிக்காத கில்லாடி வில்லியாக வந்து ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இப்போது சோசியல் மீடியாவில் அவரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
கில்லி பட அம்மா
2004 இல் வெளியான கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக ஜானகி நடித்த விதம் ரசிகர்களும் மிகவும் கவர்ந்தது. இப்படி ஒரு அம்மா நமக்கு இல்லையே என்று ஏங்கிய இளைஞர்கள் ஏராளம். என்ன சொன்னாலும் நம்பிவிடும் கேரக்டர் அவருடைய முகத்துக்கு அப்படியே சூட்டாகி விட்டது. பொம்மைகளுக்கு இடையே இருக்கும் திர்ஷாவை கூட அது நிஜ பொண்ணு என்று தெரியாத அவருடைய ஆக்சன் இப்படியும் இருப்பாங்களா? என்று யோசிக்க வைத்தது. அதிலும் அவருடைய முகபாவனை பார்த்து உண்மையாகவே இவங்க வெகுளித்தான் போல என்று முகவெட்டு நம்பவே வைத்துவிட்டது.
ஆனால் கேவி ஆனந்த் இயக்கிய அயன் படத்தில் அவருடைய கேரக்டரை மறக்க முடியுமா? ஒரு சின்ன கேரக்டரில் தான் ஜானகி நடித்திருப்பார். ஆனால் படத்தை பார்த்தபோது யாருக்குமே இவர்தான் நிஜ வில்லி என்பது தெரிந்திருக்க வாய்ப்பே இல்ல. இப்போ கூட அந்த படத்தை நீங்க ஒருமுறை பார்த்தால் கூட இவங்களா? சீ...சீச்சு அப்படியெல்லாம் வில்லியாக இருக்க மாட்டாங்கன்னு சொல்ற மாதிரி தான் அவருடைய முகம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும். வில்லன் கோஷ்டியை சார்ந்த ஜானகி தான் சூர்யாவுக்கு பெரிய ஆப்பு வைப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. காரணம் அன்பான அம்மா கேரக்டரில் மட்டுமே அதிகம் நடித்திருந்ததால் அவரை வில்லியாக மனது ஏற்றுக் கொள்ள தயங்கியது தான். அதே நேரத்தில் பலர் நினைப்பது போல ஜானகி சபேஷ் முழு நேர நடிகை கிடையாது டெல்லி மற்றும் கொல்கத்தாவில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு Lady Shri Ram College-ல் அரசியல் அறிவியலும், மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். அவருடைய அப்பா ஆசைப்பட்டதால் தான் நடிக்க வந்தாராம். ஆனால் அதற்கு முன்பு பிரபல தொகுப்பாளர் சிமி கெரோ வாலுடன் இணைந்து ராஜீவ்கந்தி பற்றிய ஆவணப்படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்து இருக்கிறார். ராஜீவ் மேனனின் மின்சார கனவு படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமாகி, இயக்குநர் சங்கரின் ஜீன்ஸ் படத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடிக்கும் போது நான் இன்னும் இளமையாக இருக்கிறேனே என்ன போய் அம்மாவாக நடிக்க வைக்கிறீங்களே அப்போ செட் ஆகுமா என்று இவர் ஷங்கரிடம் கேட்டாராம். அதற்கு ஷங்கர் ஒரு இளமையான அம்மா தான் இதற்கு செட்டாகும். இந்த படத்தில் உங்களுக்கு நரைமுடி, வயதான தோற்றம் எல்லாம் இல்ல.. பாடகி ஜானகி இறப்பிலும் மோசமான விமர்சனம்.. இப்படியுமா பேசுவாங்க? பேத்தி அப்சரா சொன்ன அதிர்ச்சி விஷயம்! அதற்கு பிறகு குழந்தைகளுக்கான "Golpo - Tales Unlimited" என்ற ஸ்டோரிடெல்லிங் முறையை நடத்தி வருகிறார். ஸ்கூல், இலக்கிய விழாக்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகளில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகள் பாணி சபேஷ் உடன் பாட்டி ரசம் என்ற குழந்தைகள் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த நூல் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகமாக செலக்ட் ஆகி இருக்கிறது. சொந்த வாழ்க்கையிலும் பட்ட கஷ்டம்.. ஜானகி பற்றி தழுதழுத்த குரலுடன் இளையராஜா! இவரே இப்படி பேசிட்டாரே?அயன் பட வில்லி
முதல் அறிமுகம்
நீங்க மார்டன் அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்க என்று சொன்ன அதற்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் பல மார்டன் அம்மா கேரக்டர் உருவானது என்று அவரே ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதுபோல ஜானகி சபேஷ் குடும்பமும் கலை உலகத்துடன் தொடர்புடையது. பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இவருடைய உறவினர் தான் என்பது பலருக்கும் தெரியாத தகவல். ஒரே மாதிரியான அம்மா கேரக்டர்கள் தொடர்ந்து வந்தத சமீப காலமாக அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்து இருக்கிறார்.தற்போதைய நிலை
சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். எழுத்தாளர், கதை சொல்லி, மீடியா தொழில்நுட்ப நிபுணர் என பல முகங்களை கொண்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவரை உண்மையிலேயே பல திறமைகளை அமைதியாக சாதித்துக் கொண்டிருக்கும் ஒரு அண்டர்ரேட்டட் கலைஞர் என்றே சொல்லலாம்.