சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த அமைச்சர் ராஜ் மோகன் கொடுத்த ரிவ்யூ கவனம் பெற்று வருகிறது. அவர் இந்த படத்தை ரொம்பவே பாராட்டி இருக்கிறார். இதை படமாக பார்க்காமல் ஒரு பாடமாகவே பார்க்கலாம். அந்த அளவிற்கு படம் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்.
அமைச்சர் ராஜ்மோகன் ரிவ்யூ
2 நண்பர்களின் கதையை மையமாக வைத்து உருவான டோரதி படத்தை பார்த்த பிறகு பலரும் ரிவ்யூ கொடுத்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் இந்த படத்தின் சில காட்சிகள் ட்ரோலாகி வருகிறது. குறிப்பாக படத்தின் கடைசி காட்சிகள் தான் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் ராஜ்மோகன், பொதுவாக ஒரு படம் முடிந்த பிறகு அந்த கதை நம்முடைய மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கத்தை டோரதி படம் ஏற்படுத்துகிறது. படம் பார்த்து முடிந்த பிறகு நம்முடைய மனதிற்குள் பல கேள்விகளுக்கும், சில குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.
கார்த்திக் சுப்புராஜ் என்னுடைய நண்பர் அவர் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னார். மீண்டும் ஒரு ஜிகர்தண்டாவை எதிர்பார்த்து அவருக்காக போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் அவருடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று எனக்கு தெரிந்தது. மண்ணின் மனத்தை மாறாமல் அப்படியே கதையாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு கிராமத்தோடு இணைந்து செல்லும் அந்த கதைக்குள் பல விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். இதுவரைக்கும் யாரும் சொல்லாத.. சொல்லவும் முடியாத, ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் நடிகர்கள் ரைட்டிங் எல்லாமே நம்முடைய மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் ப்ரைமில் இருந்து கடைசி பிரேம் வரைக்கும் எந்த இடத்திலும் தேவையற்ற வார்த்தைகள், தேவையற்ற காட்சிகள் என்று எதையும் சொல்ல முடியாது. எல்லாமே அந்த அளவிற்கு கதையோடு பயணிக்கிறது. இதில் நடித்த சனத், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் எல்லாருமே கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் இளையராஜாவின் மியூசிக் தான் இந்த படத்திற்கு உயிர். இந்த படத்திற்கு கேப்டனாக கார்த்திக் சுப்புராஜ் இருந்திருக்கிறார். டோரதி படம் நமக்கு ஒரு பாடம் என்று அமைச்சர் ராஜ் மோகன் ரிவ்யூ சொல்லி இருக்கிறார்.நண்பருக்காக
வித்தியாசமான கதை
படத்தின் பிளஸ் பாயிண்ட்