ராஜ் ஐயப்பன் அப்பா யார் தெரியுமா? இத்தனை படங்கள், சீரியலில் நடித்திருக்கிறாரே! சகோதரியும் நடிகை தான்

  • சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் பிரதர் அண்ட் சிஸ்டர் வெப் சீரிஸ் பார்த்த பலரும் கதையை மட்டும் அல்ல அதில் நடித்திருக்கும் நடிகர்களையும் கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த வெப்சீரிஸில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    காரணம் இந்த வெப் சீரிஸில் ராஜ் ஐயப்பன் மட்டுமல்ல அவருடைய அப்பா நடிகர் பானு பிரகாஷ் மற்றும் தங்கை நம்ரிதாவும் இணைந்து நடித்திருப்பது தான். சமீபத்தில் இது பற்றி பேசிய ராஜ் ஐயப்பன், நான் என்னுடைய தங்கச்சி அப்பா எல்லோரும் சேர்ந்து நடிப்பதை இப்போ பார்க்கும்போது இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் இன்னும் சில வருஷங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த நாங்கள் 3 பேரும் ஒரே வெப் சீரிஸில் நடித்தது மறக்க முடியாத நினைவாக இருக்கும். அந்த உணர்வு ரொம்ப ஸ்பெஷல் என்று மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    நடிகர் ராஜா ஐயப்பன் அப்பா

    இந்த வீடியோ வெளியான பிறகு தான் அவருடைய அப்பா மற்றும் தங்கை குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. ராஜ் ஐயப்பனின் சினிமா பயணம் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாம். அவருடைய அப்பாவான நடிகர் பானு பிரகாஷ் இது பற்றி சில வருஷங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

    அஜித் சொன்ன வார்த்தை

    அதில், நடிகர் அஜித் நடித்த முதல் படமான அமராவதியில் அவருடன் நடித்திருந்த பானு பிரகாஷிடம் ஒருநாள் அஜித் பேசிக் கொண்டிருந்தபோது, உங்க மகன் போட்டோ இருக்கா அனுப்புங்க என்று கேட்டிருக்கிறார். போட்டோவை பார்த்த அஜித் உங்க மகனுக்கு நல்ல ஸ்கிரீன் பிரசன்ஸ் இருக்கு. கண்டிப்பா நடிகராக வர வாய்ப்பு இருக்கு என்று சொல்லி இருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் யாருமே ராஜ் ஐயப்பனை நடிகராக வேண்டும் என்று யோசிக்க கூட இல்லையாம்.

    Advertisement

    அஜித்துக்கு வில்லன்

    ஆனால் அஜித் சொன்ன ஒரு வார்த்தை குடும்பத்திற்கே நம்பிக்கையை கொடுத்ததாக பானு பிரகாஷ் கூறியிருந்தார். பல வருஷங்கள் கழித்து அஜித்துடன் வலிமை படத்தில் அவருக்கே வில்லனாக ராஜ் ஐயப்பன் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோல அதர்வா நடித்த 100 திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததின் மூலம் பலரின் கவனத்தை ராஜ் ஐயப்பன் பெற்று இருந்தார்.

    அதற்குப் பிறகு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாறிவிட்டார். அதுபோல அவருடைய சகோதரி பிரதர் அண்ட் சிஸ்டர் வெப் சீரிஸ் மூலம் கவனம் பெற்று இருக்கும் இவர் நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராம். இப்போது தன்னுடைய அப்பா மற்றும் அண்ணனுடன் ஒரே சீரியஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    நடிகர் பானு பிரகாஷ்

    அதுபோல பானு பிரகாஷ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தமிழில் அண்ணாமலை, செல்வி, வம்சம், சொர்க்கம், சக்தி, ருத்ர வீனை, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த தகவல்கள் ஒரு சிலருக்கு தெரிந்ததாக இருந்தாலும் பலருக்கு இது தெரியாத விஷயம் தான்.

    English Summary

    Raj Ayyappan: Many viewers of the web series “Brother and Sister” on Disney+ Hotstar are taking note not only of the storyline but also of the actors involved. In this context, news about Raj Ayyappan, who appears in the series, is going viral on social media.