டாக்ஸிக் இயக்குனர் கீது மோகன் தாஸ் யார் தெரியுமா? சுகாசினியின் மகள்.. யாருக்கும் தெரியாத சினிமா பயணம்

  • சென்னை: யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிக வன்முறை, பாசம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு நடுவில் ஒரு விஷயம் மட்டும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தை இயக்கிய கீது மோகன் தாஸின் சினிமா ஆரம்ப பயணம் தான். அவர் குழந்தையாக நடித்த போட்டோஸ்கள் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

    Advertisement

    சொல்லப் போனால் இன்று ஒரு மிகப்பெரிய பான் இந்தியா நடிகரை வைத்து 500 கோடி அளவிலான மகா பட்ஜெட் படத்தை இயக்கிய இவர் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே கேமரா முன்பு நின்று இருக்கிறார். அதுவும் தமிழில் சத்யராஜ் சுகாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் அந்த பொம்முக்குட்டி குழந்தையாக நடித்தவர் இவர்தான். அந்த படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படம். குட்டி பொம்மை போல அந்த படத்தில் இருக்கும் அந்த குழந்தையை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது.

    Advertisement

    பொம்முக்குட்டி அம்மாவுக்கு பட சிறுமி

    7 வயதில் கீது அந்த படத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் அவருடைய நிஜ பெயர் காயத்ரி தாஸ். குடும்பத்தில் செல்லமாக அவரை கீது என்று கூப்பிட்டு இருக்கிறார்கள் அதுவே பிறகு சினிமா பெயராக மாற்றி இருக்கிறார். 1986 இல் வெளியான மலையாள படமான ஒன்று முதல் ஜுரோ வரை படத்தில் 5 வயது குழந்தையாக நடித்து அவரது சினிமா பயணம் தொடங்கியது. அந்த படத்தில் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

    நடிகர் யஷ் நிகழ்ச்சியில் விபத்து.. ஓடாமல் நின்று வெளிப்படையாக கொடுக்க அட்வைஸ்.. இது பலருக்கு பாடம்!
    குழந்தை நட்சத்திரமாக கீது நடித்த விதத்திற்கு கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் கிடைத்தது. அதற்குப் பிறகு 1988 ல் ஃபாசில் இயக்கிய என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் சத்யராஜ் சுகாசினி தம்பதியின் மகளாக நடித்திருந்தார். அதாவது இப்போது டாக்ஸிக் படத்தில் யாஷ்ஷை வைத்து ஆக்சன் பட காட்சிகளை இயக்கிக் கொண்டிருக்கும் கீது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பொம்ம குட்டியாக ஓடிக் கொண்டிருந்த குழந்தை.

    Advertisement

    மீண்டும் கம்பேக்

    குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு கீது பல வருஷங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் மோகன்லால் நடித்த லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வந்து அதற்குப் பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். அதிலும் தென்காசி பட்டணம், பால் கண்ணாடி, அகலே, நம்ம தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அகலே படத்துக்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநிலம் விருதையும் பெற்றிருந்தார்.

    நள தமயந்தி பட நடிகை

    அதனால் கிதுமோகன் இயக்குனர் ஆவதற்கு முன்பு நடிகையாக தான் ஆகியிருக்கிறார். 2003இல் கமல்ஹாசன் கதை எழுதி தயாரித்த நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு கீது எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் சுவாரஸ்யமான விஷயம் தான். பட குழுவினர் புதிய முகத்தை தேடிக்கொண்டிருந்த போது ஒரு பத்திரிக்கையில் அவருடைய புகைப்படத்தை பார்த்து தேர்வு செய்ததாக அவரே ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

    Advertisement

    இயக்குனராக வெற்றி

    அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கேமராவுக்கு பின்னால் செல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் எடுத்த முதல் குறும்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் பெரிய மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் இயக்குனராக மாறியதும் நேராக சர்வதேச திரைப்பட விழாக்களுக்குள் நுழைந்து விட்டார். அவருடைய Kellkkunnundo குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தொடர்ந்து சர்வதேச அளவில் விருதுகளை பெற்றவுடன் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.

    இந்த படத்தின் கதை பின்னர் கேரளாவின் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது. இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடிகையாக தொடங்கி இயக்குனராக மாறிய கீது டாக்சிஸ் படத்தின் மூலமாக அதிக அளவில் ட்ரோல்லை சந்தித்து வருகிறார்.

    English Summary

    The film Toxic, starring Yash, is facing intense criticism. Fans are debating various aspects of the movie on social media, including its high levels of violence and themes of affection. However, amidst these discussions, one particular detail has taken fans by surprise: the early cinematic journey of the film's director, Geetu Mohandas. Photos of her from her childhood acting days are currently going viral on social media.