தூத்துக்குடி பையன்.. மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி யார் தெரியுமா?

  • சென்னை: ஒரு படம் தியேட்டரில் வெளியாகும் போது ஓரளவுக்கு கவனம் கிடைப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் படம் ஓடிடியில் வந்த பிறகு இந்த படத்தை எடுத்தது யார் என்று இயக்குனரை தேட ஆரம்பித்தால் அதுதான் அந்த இயக்குனருக்கு கிடைத்த பெரிய விஷயம். இப்போது அப்படித்தான் மொத ராத்திரி படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமி பற்றி பலரும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

    Advertisement

    காரணம் ஆகஸ்ட் 21ஆம் தேதி தியேட்டரில் வெளியான மொத ராத்திரி செப்டம்பர் 18ஆம் தேதி Netflix- ல் வந்திருக்கிறது. ஓடிடியில் படத்தை பார்த்த பிறகு அட இந்த மாதிரி மாதிரி ஒரு கிராமத்துக் கதையை எவ்வளவு இயல்பாக எடுத்து இருக்கிறாரே? யார் இந்த இயக்குனர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ராஜா கருப்பசாமி ஏற்கனவே பெரிய படங்களை இயக்கியவர் கிடையாது. மொத ராத்திரிதான் அவருடைய முதல் படம்.

    Advertisement

    இயக்குனர் ராஜா கருப்பசாமி

    சினிமாவுக்கு இது முதல் படம் என்றாலும் சினிமாவுக்குள் வருவதற்கான அவருடைய பயணம் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ராஜா கருப்பசாமி இதற்கு முன்பு பத்திரிக்கை மற்றும் ஊடக துறையில் வேலை பார்த்து இருக்கிறார். அந்த அனுபவம் தான் வெவ்வேறு மனிதர்களை கவனிப்பதற்கும் அவர்களின் குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்கும் தனக்கு உதவியது என்று பேட்டியில் பேசி இருக்கிறார். அது படத்திலும் ஓரளவுக்கு தெரிகிறது.

    ஏனென்றால் இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் மட்டும் முக்கியம் என்று இல்லாமல் கல்யாண வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா கருப்பசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி தான். அதனாலயே அவர் படம் தூத்துக்குடி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது தியேட்டருக்கு நேரில் சென்று நேரில் பார்த்திருந்தார். படத்திலும் திருநெல்வேலி பாஷை தான் அனைவருமே பேசுவார்கள்.

    Advertisement

    அப்பாவின் இறப்பு

    அதுபோல அவருடைய அப்பா இப்போது இறந்து விட்டதால்தான் அந்த படத்தில் பக்ஸ் கேரக்டர் படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஒரு போட்டோவை வைத்துக்கொண்டே இருப்பாரே அது ராஜா கருப்பசாமியின் அப்பா போட்டோ தான். அவர் மட்டும் இப்போ உயிரோடு இருந்தால் என்னுடைய படம் வெளியாகிறது என்பதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை என எல்லா தியேட்டர்லயும் கட்டவுட் வைத்து அலப்பறை செய்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை அப்பா ரொம்பவே கொண்டாடி இருப்பாரு என்று எமோஷனலாகவே சொல்லி இருந்தார்.

    புறக்கணிப்பு

    அதுபோல இந்த படத்தை கடந்த 6 வருடங்களாக ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் தயாரிக்க கேட்டுக் கொண்டே இருந்தாலும் பலரும் இந்த படம் கதையை கேட்டுவிட்டு படம் நல்லாதான் இருக்கு ஆனால் ஹீரோவாக ரிஷிகாந்த் நடித்தால் செட் ஆகாது, இதற்கு பதில் வேற யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று சொல்லிவிடுவார்களாம். ஆனால் அந்த படத்தில் ரிஷிகாந்த் தான் நடிக்க வேண்டும் என்று ராஜா ஒத்த காலிலே நின்னு இருக்கிறார். கடைசியில் அவர் நினைத்தது மாதிரி தான் ரிஷிகாந்த் நடித்து படமும் சக்சஸ் ஆகி இருக்கிறது.

    Advertisement

    மொத ராத்திரி என்று பெயர் வைத்த உடன் ஏதோ கிளாமர் அல்லது இரட்டை அர்த்த காமெடி படமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு வேற மாதிரி அனுபவம் கிடைத்திருக்கிறது. திருமணம் செய்ய விருப்பமே இல்லாத ஒரு இளைஞர் வேறு ஒருவரை காதலிக்கும் ஒரு பெண் இருவருக்கும் எதிர்பாராத திருமணம் நடக்கிறது.

    படத்தின் கதை

    அதற்குப் பிறகு அந்த ஒரு இரவை சுற்றி நடக்கும் பிரச்சனைகள் என கதை செல்கிறது. ஆனால் இயக்குனர் அதை வெறும் முதலிரவில் என்ன நடந்தது என்று கேள்வியில் நிறுத்தாமல் அந்த குடும்பத்தில் இருக்கும் மனிதர்களின் மனநிலை, பெண்களின் அழுத்தம், திருமணத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்புகள், குடும்ப உறவுகள், பெண்களுக்கு பெண்களே எதிராக இருப்பது, ஆண்களுக்குள் மட்டுமல்ல பெண்களுக்கும் சாதி பாகுபாடு மறைந்திருப்பது என பல விஷயங்களை அந்த படத்தில் காட்டி இருக்கிறார்.

    Advertisement

    நடிகரும் இயக்குனரும் ஒருவரே

    அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நிதிஷ் ஆகவும் இயக்குனர் பலருடைய திட்டை வாங்கி இருக்கிறார். படத்தில் கதாநாயகி முத்துச்செல்வியின் காதலனாக வரும் நிதிஷ் கேரக்டர் கவனம் பெற்று இருக்கும் நிலையில், யார் அந்த நிதிஷ் என்று தேடிப் பார்க்கும்போதுதான் அவர் தான் இந்த படத்தின் இயக்குனர் படத்தில் அவரை பரதேசி, சோப்லாங்கி என்று எத்தனையோ இடங்களில் எல்லோரும் திட்டிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவர்தான் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார்.

    English Summary

    Raja Karuppasamy: It is quite common for a film to garner some attention when it is released in theaters. However, it is a significant achievement for a director when people start looking them up only after the film has premiered on an OTT platform. That is precisely what is happening now with Raja Karuppasamy, the director of the movie *Modha Rathiri*.