ஜீ தமிழ் மகா நடிகை 2 வின்னர் யார் தெரியுமா? அதுவும் பரிசு இவ்வளவா? குவியும் வாழ்த்து

  • சென்னை: சின்னத்திரையில் நடிக்க வேண்டும், சினிமாவில் எல்லோரும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கனவு காணும் பல பெண்களுக்கு நம்மாலும் முடியும் என்று சொல்லிக் கொடுத்த நிகழ்ச்சி தான் ஜீ தமிழில் மகா நடிகை. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் நிறைய சவால்களுடன் வந்த மகா நடிகை சீசன் 2 தற்போது பிரம்மாண்ட கிராண்ட் பினாலே நிறைவடைந்து இருக்கிறது.

    Advertisement

    பல வாரங்களாக நடந்த போட்டியில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அழுகை, கோபம், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என பல வதமான உணர்வுகளை காட்டி வந்த போட்டியாளர்களில் கடைசியில் கோபிகா மகா நடிகை சீசன் 2 டைட்டிலை தட்டி சென்று இருக்கிறார். இறுதி போட்டிக்கு கோபிகா, காவியா, நிவேதிகா, அஸ்வதி, சுகந்தி ப்ரியா என 5 பேரு செலக்ட் ஆகி இருந்தனர்.

    Advertisement

    மகா நடிகை 2 வெற்றியாளர்

    ஆரம்பத்தில் ஏராளமான பெண்களுடன் தொடங்கிய இந்த பயணம் ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டே வர கடைசியில் 5 பேரிடம் வந்து நின்றது. இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பலம். ஒருவர் எமோஷனல் காட்சிகளில் அசத்தினால் இன்னொருவர் காமெடியில் கோர்ஸ் செய்வார். மற்றொருவர் வசன உச்சரிப்பில் கவனம் இருப்பார். இப்படியாக போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

    கடைசியில் அந்த மகுடம் கோபிகாவுக்கு சென்று இருக்கிறது. காவியா ரன்னர் ஆப் இடத்தை பிடித்துள்ளார். கோபிகாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவரது நடிப்பு, முகப்பாவனை, தன்னம்பிக்கை மற்றும் கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் விதம். ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான நடிப்பை கொடுக்காமல் தன்னுடைய நிஜ கேரக்டரோடு கொடுக்கப்படும் கேரக்டரை இணைத்து அவர் இயல்பாக நடித்தது அங்கிருந்த போட்டியாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

    Advertisement

    கோபிகா பேட்டி

    வெற்றி பெற்றதும் கோபிகா பேசும்போது, மகா நடிகை சீசன் 2 வெற்றியாளராக தேர்வானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த நிகழ்ச்சி எனக்கு தன்னம்பிக்கையும் ஒரு நடிகையாக வளர வாய்ப்பையும் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஜீ தமிழ் நடுவர்கள் மற்றும் என்னை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனிவரும் வாய்ப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    மகா நடிகை வெற்றியாளருக்கு பரிசு

    இதற்கு முன்பு மகா நடிகை முதல் சீசன் டைட்டில்லை கோமதி வென்று 50 லட்சம் ரொக்க பரிசு பெற்றிருந்தார். அவருக்கு அடுத்த இடத்தை ஜாப்னா பிடித்திருந்தார். அதனால் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களுக்கு டைட்டிலுடன் சேர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. கோபிகாவுக்கு இந்த சீசனில் வழங்கப்பட்ட பரிசு தொகை குறித்து அதிகாரப்பூர்வ தொகையை ஜீ தமிழ் தரப்பில் தெளிவாக வெளியிடவில்லை.

    Advertisement

    விஜய் ஆண்டனியின் வாய்ப்பு

    அதுபோல இந்த நிகழ்ச்சியின் பைனலுக்கு வந்த 5 போட்டியாளர்களுக்கும் விஜய் ஆண்டனி தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க போவதாக விஜய் ஆண்டனி மேடையில் அறிவித்திருந்தார். பல மாதங்களாக நடந்த போட்டி முடிந்து விட்டது .மேடையில் இருந்த போட்டியாளர்கள் இப்போது தங்களுடைய அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்ந்து வந்தனர். முதல் வாரத்தில் இருந்து இத்தனை வாரங்களாக இவர்களுடைய நடிப்பு மக்களை கவர்ந்ததாக பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    Topics: #zee tamil

    English Summary

    Zee Tamil : "Maha Nadigai" on Zee Tamil is the show that empowered many women—who dream of acting on television or landing great opportunities in cinema—by showing them that they, too, can succeed. Following the warm reception of the first season, "Maha Nadigai" Season 2 returned on a grander scale with more challenges and has now concluded with a spectacular grand finale.