சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. அவர்கள் ஹீரோவாக நடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. திரையில் சில நிமிடங்கள் வந்தாலும் அந்த முகம் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்திருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் கொச்சின் ஹனீஃபா. அவர் இறந்து 16 வருடங்கள் கழித்த பிறகு அவருடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொச்சின் ஹனீஃபாவை அவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவருடைய மலையாளம் கலந்த தமிழ் டயலாக் கூட அவ்வளவு அழகாக இருக்கும். தமிழில் அவர் மகாநதி, அன்னியன், லேசா லேசா, பாய்ஸ், வில்லன், சில்லுன்னு ஒரு காதல் என பல தமிழ் படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்கள், வில்லத்தனம் என எல்லா வகையான கேரக்டரிலும் கலக்கியவர். இன்றும் அவர் நடித்த காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலே சேனலை மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.
ஆனால் திரையில் எப்போதும் சிரிக்க வைத்த அந்த மனிதனின் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருந்திருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது. கொச்சின் ஹனீஃபா வாழ்க்கையில் மிகப் பெரிய ஏக்கம் என்ன தெரியுமா? குழந்தைதான். திருமணம் முடிந்து பல வருஷங்களாக அவருக்கு குழந்தை இல்லாமல் இருந்திருக்கின்றனர். அதனால் அவர் ரொம்ப வருத்தப்பட்டதாகவும் அவருடைய உறவினர்கள் கூறியிருக்கிறார்கள்.
கடைசியாக அவர் உயிரிழப்பதற்கு 3 வருடத்திற்கு முன்புதான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த சந்தோஷம் கூட நீண்ட நாள் நீடிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்திருக்கிறது. சிகிச்சைக்காக சென்னை வந்த ஹனீஃபா 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த செய்தி அந்த நேரத்தில் தமிழ் மலையாள திரை உலகையே உலுக்கியது. சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் ஹனீஃபாவிற்கு மனதில் இருந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையாம். அதாவது தன்னுடைய சொந்த ஊரான கொச்சியில் தன் குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டணும் என்று அவர் பலரிடம் சொல்லி இருந்திருக்கிறார். ஆனால் விதி வேற திட்டம் போட்டு இருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது அந்த வீடு கட்ட முடியவில்லை அதனால் அவர் இறந்த பிறகும் அவருடைய குடும்பம் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து இருக்கிறது. அந்த குடும்பமும் பெரிய அளவில் வசதியாக வாழவில்லையாம். BlueSattai Maran: போதைபொருள் சர்ச்சை, மனம் நொந்து பேசிய லோகேஷ் கனகராஜ்.. ப்ளூசட்டை மாறன் கலாய் போஸ்ட் தனது வாழ்நாளில் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து அவருடைய குடும்பத்தினர் இப்போது கொச்சியில் மூன்று மாடி வீடு கட்டி இருக்கிறார்களாம். அந்த வீட்டில் சமீபத்தில் அவர்கள் கிரகப்பிரவேசம் செய்து குடிபுகுந்து இருக்கிறார்கள். அந்த வீட்டிற்கும் கொச்சின் ஹனீஃபா என்ற பெயரையே வைத்திருக்கிறார்கள். வீட்டின் சுவர்களில் எல்லாம் அவருடைய போட்டோக்கள், சினிமா நினைவுகள், விருதுகள் என அந்த வீட்டிலேயே அவர் வாழ்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தற மாதிரி குடும்பத்தினர் அலங்கரித்து இருக்கிறார்களாம். அதுபோல ஹனீஃபா இறப்பதற்கு முன்பு அவருடைய குழந்தைகளை நல்ல படிக்க வைக்கணும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். இப்போது அந்த ஆசையும் அவருடைய மகள்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். இரட்டை மகள்களில் ஒருவர் சார்டட் அக்கவுண்ட் (CA) படிப்பில் சேர்ந்து இருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் பலருக்கும் கொச்சின் ஹனிபாவை நடிகர் என்று தான் தெரியும் ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பாசப்பறவைகள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார். கருணாநிதி உடன் மிகுந்த நெருக்கமாக இருந்த மலையாள கலைஞர்களின் ஹனிபாவும் ஒருவர். பொதுவாக சில நடிகர்கள் நடிகைகள் பற்றிய சர்ச்சை செய்திகள்தான் வைரலாகும் ஆனால் இப்போது கொச்சின் ஹனீஃபா இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினர் அவருடைய ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கும் மோட்டிவேஷனல் ஸ்டோரிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்ல மனிதர்கள் உடலால் மறைந்தாலும் அவர்கள் கண்ட கனவுகள் ஒரு நாள் நிச்சயம் உயிர் பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.கொச்சின் ஹனீஃபா இறப்பு காரணம்
நிறைவேறாத கனவு
கொச்சின் ஹனீஃபா வாங்கி இருந்த ஒரு காரை சூட்டிற்கு வாடகைக்கு அனுப்பி அதில் கிடைத்த வருமானத்தில் தான் குடும்ப செலவுகள் நடந்து வந்ததாம். திறையில் கோடி கணக்கான மக்களை சிரிக்க வைத்த நடிகரின் குடும்ப வாழ்க்கையில் இப்படி கஷ்டத்தோடு தான் கடந்து வந்திருக்கிறது. அவர் இறந்து இப்போது 16 வருடங்கள் ஆகிவிட்டது அவருடைய மகள்களும் வளர்ந்து இருக்கிறார்கள்.கொச்சின் ஹனீஃபா வீடு
நடிகர் கொச்சின் ஹனீஃபா இயக்கிய படம்