கோர்ட்டை சாதாரணமா நினைக்காதீங்க.. ஜெயிலர் 2 படம் நடிகைக்கு குட்டு வைத்த நீதிபதி! பின்னணி காரணம்

  • சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி இப்போது டெல்லி நீதிமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் என்பவரின் 200 கோடி மோசடி வழக்கில் சாட்சியாக ஆஜராக வேண்டிய இருந்த நோரா இன்று விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வராததால் நீதிபதி அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவரை மீண்டும் நவம்பர் 6ஆம் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நீதிமன்ற விசாரணை

    டெல்லியில் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான 200 கோடி பண மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நோரா அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் நவம்பர் 2ம் தேதியான இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அதற்கு பதிலாக ஆஜரான வழக்கறிஞர் விசாரணைக்கு வருவதிலிருந்து விளக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

    Advertisement

    கண்டித்த நீதிபதி

    இதை கேட்ட நீதிபதி, சாட்சியாக ஆஜராக வேண்டியவர் நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார். மேலும் நீதிமன்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வழக்கறிஞரை எச்சரித்திருக்கிறார்.‌ இந்த விவாகரத்தில் டெல்லி காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவலில், நோராவுக்கு அக்டோபர் 22ஆம் தேதியே மெயில் மற்றும் whatsapp மூலம் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அவர் ஆஜராக வருகிறார் என்பது குறித்து உறுதியாக தகவல் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இதை அடுத்து நீதிமன்றம் மீண்டும் அம்மன் அனுப்பி நவம்பர் 6ஆம் தேதி உத் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    Advertisement
    16 வது நாளில் வேகம் குறைந்த ஜெயிலர் 2 வசூல்..ஆனாலும் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா? கலக்கும் ரஜினி

    ஜெயிலர் 2 பட டான்ஸர்

    நோரா என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய டான்ஸ் தான். பாலிவுட்டில் பல பாடல்களுக்கு தனது டான்ஸால் தனி அடையாளத்தை உருவாக்கியவர். இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். படம் வெளியான பிறகு அவரைப் பற்றிய செய்திகள் திரையுலாக வட்டாரத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத விவாகாரம் அவரை மீண்டும் தலைப்பு செய்திகளில் கொண்டு வந்திருக்கிறது.

    English Summary

    Jailer 2 actress: Bollywood actress Nora Fatehi, who recently grabbed the attention of fans through a song in Rajinikanth’s *Jailer 2*, has now made headlines due to an incident at a Delhi court. Nora was expected to appear as a witness in the Rs 200 crore extortion case involving Sukesh Chandrashekhar; however, as she failed to appear for the hearing today, the judge expressed displeasure. The court has now ordered her to appear again on November 6.