பாட்டிலோடு ஓடியது ஞாபகமில்லையா? மாரத்தான் பற்றி பேசலாமா? திமுக மீது வீண் பழி ஏன்..ணே? ஜூலி அட்டாக்


  • சென்னை: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்ற 'போதைப்பொருள் ஒழிப்பு' விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தைத் தொடர்ந்து, "இந்தியாவிலேயே மராத்தான் போட்டியில் கலந்துகொண்டு ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் மட்டும்தான்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசினார். ஆனால், இந்த வாதம் முற்றிலும் தவறானது என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.. இதையே பிக்பாஸ் புகழ் ஜூலியும் வீடியோ பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் தற்போது முதலமைச்சரின் மராத்தான் ஓட்டம் குறித்த விவாதங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

    Advertisement

    மாரத்தான் ஓடி சாதனை புரிந்த விஜய்

    தமிழக வரலாற்றிலும் ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ஒரு மராத்தான் போட்டியில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் ஓடிய ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மட்டும்தான் என்றும், இதற்கு முன்பு எந்தவொரு முதலமைச்சரும் இதுபோன்று ஓடியதே இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    இந்திய வரலாற்றிலேயே இது ஒரு சாதனையாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் பிரபலமான ஜூலி, இதுகுறித்து வீடியோ வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.

    3 கிலோ மீட்டர்

    "ஆதவ் அண்ணா, காலையிலேயே டைவர்ஷன் தெரபி ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே.. வெள்ளை அறிக்கையை எடுத்துட்டு வந்தீங்க.. ஆனால் திமுக ஊழல் செய்துள்ளது என்பதை உங்களால் நிரூபிக்க முடியல.

    Advertisement

    அதை டைவர்ட் செய்வதற்காக, இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர்களிலேயே ஒரு மராத்தான் போட்டியில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் ஓடிய ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜயானந்த் மட்டும்தான் என்று சொல்கிறீர்கள்..

    பிக்பாஸ் ஜூலி

    தமிழ்நாடு வரலாற்றில் வேறு எந்த முதலமைச்சரும் இவ்வாறு ஓடியதே இல்லை என்றும் சொல்கிறீர்களே.. இந்தியாவிலேயே 3 கிலோமீட்டர் தூரம் மராத்தான் ஓடிய முதல் முதலமைச்சர் இவர்தான் என்று நீங்கள் சொல்வதற்காக, உங்களுக்காக ஒரு சிறிய உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

    நம்முடைய ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, 21 கிலோமீட்டர் மராத்தான் போட்டியை மிகக் குறைந்த மணி நேரங்களிலேயே ஓடி முடித்திருக்கிறார். மராத்தான் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

    Advertisement

    அதேபோல ஹரியானா மாநில முதலமைச்சர் நயப்சிங் சைனியும், மராத்தான் ஓடுவதில் திறமை படைத்தவர். கோவா மாநில முதலமைச்சரும் இதில் ஆர்வம் கொண்டவர்தான். நாம ஏன், இவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நம்முடைய மாநிலத்தை சேர்ந்த மா. சுப்பிரமணியன் கூட தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஜாக்கிங் செய்வார்..

    திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

    அங்குள்ள பார்க்குகளில் விளையாடும் இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டிருக்கிறார்.. அதுமட்டுல்ல அவர் ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா இப்படி ஏகப்பட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச மராத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.

    Advertisement

    தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும், காலையிலேயே இது போன்ற ஒரு திசைதிருப்பும் உத்தியை தவெக கையாண்டு வருகிறது. ஒரு மனுஷன் ஒன்று அல்லது இரண்டு பொய்களை சொல்லலாம்.. அதுக்காக ஏக்கர் கணக்கில் இப்படிப் பொய் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

    பாட்டிலோடு போன கதையெல்லாம் ஞாபகத்துக்கு வரும்தானே? ஞாபகத்துக்கு வரலியா? நாமெல்லாம் போதைப்பொருள் ஒழிப்புக்கு ஓடலாமா? தவறில்லையா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    English Summary

    Don't you remember running with the bottle? Isn't it wrong to talk about the marathon?" asks Julie