சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே படம் ஆரம்பிக்கும் போது, சரி.. இப்பவாது இவர் என்ன சொல்லப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு வந்துவிடும். அந்த எதிர்பார்ப்புடன் தான் டோரதி படத்துக்குள் போக வேண்டியது இருக்கு. ஏற்கனவே டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற படம் என்பதால் இங்கேயும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது இது வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் படமாக மட்டுமில்லாமல் கொஞ்சம் அழுத்தமான விஷயங்களை பேச முயற்சி செய்திருக்கிறது என்பதே தெரிகிறது.
ஆரம்பத்தில் பார்த்தால் இது 2 நண்பர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான கதை மாதிரி தான் தெரியும். ஆனால் போகப் போக படம் அதைவிட வேறு விஷயங்களுக்குள் செல்கிறது. சிறுவயதில் இருந்தே ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் சில விஷயங்கள், கோபத்தை வெளிப்படுத்துவது, வன்முறையை இயல்பாக எடுத்துக் கொள்வது, பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்ற சமூக மனநிலை என பல விஷயங்களை படம் கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி கேட்கிறது.
இங்கு தான் கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் வேலை செய்கிறது. படத்தை நேராக ஒரே கோட்டில் சொல்லாமல் வெவ்வேறு காலகட்டத்திற்குள் போய் வருகிறது. ஆரம்பத்தில் ஒரு மாதிரி போய்க்கொண்டிருக்கும் படம் திடீரென வேறு ஒரு பாதைக்குள் செல்கிறது. சில இடங்களில் என்ன நடக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் அந்த குழப்பத்தை அதிகம் ஆகாமல் காட்சிகளின் மூலமாகவே விஷயங்களை புரிய வைக்க முயற்சித்து இருப்பதால் படத்திற்கு பலம்.
அதே படத்தில் உண்மையில் ஆச்சரியப்படுத்துவது சுப்பு கதாபாத்திரத்தில் சனத் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது. அதேபோல கார்த்தியாக வரும் ரிஷிகாந்தும் அந்த கதாபாத்திரத்தின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாக காட்டி இருக்கிறார். இவர்களுடைய நட்புதான் படத்தின் ஆரம்பத்திலிருந்து நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. இருவருக்கும் இடையிலான காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் அதிக நேரம் வரவில்லை. சில காட்சிகளில் வந்தாலும் படத்தின் கதைக்கு ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டராக இருக்கிறது. முத்துக்குமார், ராமச்சந்திரன், துரைராஜ், கஜராஜ் உள்ளிட்ட துணை நடிகர்களும் அந்த மதுரை கிராமத்து சூழலை இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். யாருமே தனியாக நடிக்கிறார்கள் என்று உணர்வு வராமல் அந்த உலகத்துக்குள்ளேயே இருப்பது போல இருக்கிறது. இதற்கு மேலாக இளையராஜாவின் இசை இருக்கிறது. சில காட்சிகளில் வசனம் எதுவும் தேவை இல்லாமல் இசையே அந்த உணர்வை நமக்கு கடத்துகிறது. குறிப்பாக பின்னணி இசை படத்தின் இருட்ட தன்மைக்கு நன்றாக பொருத்துகிறது. கல்யாண விருந்து பாடலும் கவனம் பெறுகிறது. ஆனால் டோரதி முழுக்க முழுக்க குறை இல்லாத படம் என்று சொல்லி விட முடியாது. 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடும் படத்தில் சில இடங்கள் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இன்டெர்வலுக்கு பிறகு கதை சொல்லும் இடம் மிகவும் இருட்டாகவும் ஒருவித அழுத்தமான சூழ்நிலைக்குள் போகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள் சிலருக்கு நிச்சயம் ஆசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் படம் ஒரு கட்டத்தில் கேங்ஸ்டர் கதையாக, இன்னொரு கட்டத்தில் ஆணாதிக்கம், பாலினம், சமூக பிரச்சனைகள் என்று ஆழமாக மாறுகிறது. அந்த மாற்றம் சில இடங்களில் கொஞ்சம் திடீரென இருப்பது போல தெரிகிறது. சில உரையாடல்களும் தேவைக்கு அதிகமாக வைக்கப்பட்டு இருக்கிறதோ என்ற உணர்வு வருகிறது. படம் பேசும் விஷயங்கள் எளிதானதே கிடையாது. அதனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் படம் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான கதையை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு டோரதி நிச்சயம் விவாதிக்க வைக்கும் படம். அதே நேரத்தில் அந்த இரண்டாம் பாதியில் மிக மெதுவான பகுதிகளும் பொறுமையை சோதிக்கலாம். Keerthy Suresh: வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியாக கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ! குவியுது வாழ்த்துடோரதி கதை
நடிகர்கள் தாக்கம்
படத்தின் பிளஸ்
படத்தின் மைனஸ்
கிளைமேக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்பார்த்து இருக்காது. அதை வைத்து எப்படியும் விமர்சனங்ளும், படத்தைப் பற்றிய ட்ரோல்களும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் எப்போதுமே ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பவர் அதனால் இந்த படத்தில் அதை முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதை மக்கள் இப்போதைக்கு ஏற்றுக் கொள்வார்களா? என்பது தான் கேள்வி.