OTT: ஓடிடியில் கலக்கும் திரிஷ்யம் 3.. இதுதான் பிரச்சனை! ஆனாலும் விட முடியாத காரணம் இருக்கு!


  • சென்னை: ஒரு நல்ல த்ரில்லர் படத்துக்கு பெரிய பலம் என்னன்னா, அது முடிந்த பிறகும் கதாபாத்திரங்கள் நம்ம தலையை விட்டு போகக்கூடாது. அந்த விஷயத்தில் 'திரிஷ்யம்' சீரிஸ் இன்னும் வேலை செய்கிறது. அதனால்தான் மூன்றாம் பாகம் வந்தாலும் மக்கள் இன்னும் ஜார்ஜ்குட்டியை பார்க்க உட்கார்கிறார்கள். ஆனா அதே நேரத்தில் ஒரு கேள்வியும் தவிர்க்க முடியல - "இன்னும் இந்த ஒரு கேஸை வைத்துத்தான் எவ்வளவு தூரம் போகப் போறீங்க?"

    Advertisement

    முதல் 'திரிஷ்யம்' வெற்றி பெற்ற போது அது ஒரு செம சினிமா அனுபவம். சாதாரண குடும்ப மனிதன் ஒருத்தன், போலீஸ் என்கிற பெரிய இயந்திரத்தையே தன் புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி தப்பிக்கிறான் - இந்த ஒரு விஷயமே படத்தை மக்கள் மனசுக்குள் தள்ளி வைத்தது. அதனால்தான் ஜார்ஜ்குட்டி வெறும் கதாபாத்திரமா இல்லாமல், "சிக்கலில் சிக்கினாலும் புத்தியால் தப்பிக்கலாம்" என்ற ஆசையின் முகமாக மாறிவிட்டார்.

    Advertisement

    ஆனா அந்த வெற்றிதான் இப்போது 'திரிஷ்யம்' படத்துக்கு சாபமா ஆசீர்வாதமா என்று கேட்க வைத்திருக்கிறது. முதல் பாகத்தில் வேலை செய்த அந்த மாயாஜாலத்தை, இரண்டாம் பாகம் மீண்டும் பிடிக்க முயற்சித்தது. இப்போது மூன்றாம் பாகம் வந்திருக்கிறது. பார்க்கும்போது விறுவிறுப்பே இல்லையா? இருக்கிறது. அடுத்த காட்சி என்ன, ஜார்ஜ்குட்டி இன்னும் என்ன பிளான் போடப்போகிறார், போலீஸ் மீண்டும் என்ன கயிறு விடப் போகிறது - இப்படி ஒரு ஆர்வம் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ஜீத்து ஜோசப்புக்கு த்ரில்லரை கட்டிப் பிடிக்க தெரியும்.

    Advertisement

    ஆனால் ஒரு கட்டத்தில் சிரிப்பும் வருகிறது. அந்த ஊர்ல யாராவது காலை டீ குடிக்க முன்னாடி "ஜார்ஜ்குட்டி கேஸ் என்னாச்சு?"ன்னு கேட்காமல் நாளே தொடங்காத மாதிரி படம் காட்டுறது கொஞ்சம் ஓவர்தான். இத்தனை வருடங்களாக ஒரு குடும்பத்தின் கடந்த காலத்தை ஊர் முழுக்க சுமந்து கொண்டு போவது சினிமாவாக சுவாரஸ்யமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கை லாஜிக்கில் பார்த்தால் பல கேள்விகள் எழுகிறது. அதிலும் "ஜார்ஜ்குட்டி இன்னும் அந்த ஊரையே விட்டு போகாம ஏன் அங்கேயே இருக்கிறார்?" என்ற கேள்வி தொடர்ந்து தொந்தரவு செய்கிறது.

    அப்படின்னா படம் மோசமா? அதுவும் இல்ல. அதுதான் இந்த சீரிஸின் பலம். நாம கிண்டல் பண்ணிக்கிட்டே பார்த்தாலும், அடுத்த சீனுக்கு போயிருப்போம். "சரி இப்போ என்ன திருப்பம்?"ன்னு உட்கார வைக்கும் சக்தி இந்த படத்துக்கு இருக்கு. அதனால்தான் இதை முழுக்க நிராகரிக்க முடியவில்லை. ஜார்ஜ்குட்டியின் ரகசியத்தை வைத்து இவ்வளவு நீளமாக பயணம் பண்ணுறது ஓவர்னு தோன்றினாலும், அந்த பயணத்தை பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமைதான்.

    மோகன்லால் பற்றி தனியா சொல்லணும். ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தில் அவர் மீண்டும் மிகவும் இயல்பாக நுழைந்து விடுகிறார். அவர் எதையும் பெருசா செய்ய மாட்டார்; ஆனா ஒரு பார்வை, ஒரு சின்ன இடைவெளி, ஒரு தயக்கம் - அதுவே அந்த கதாபாத்திரத்தின் பயத்தையும், கணக்கையும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் பதட்டத்தையும் காட்டிவிடும். அதனால்தான் இந்த கதாபாத்திரம் இன்னும் உயிரோடு இருக்கிறது. மீனாவும் வழக்கம்போல் அந்த குடும்பத்தின் நெஞ்சழுத்தத்தை சுமக்கும் பெண்ணாக நன்றாகத் தெரிகிறார். மகள்களாக நடித்தவர்கள் மீண்டும் அந்த குடும்ப உணர்வை நன்றாக carry பண்ணியிருக்கிறார்கள்.

    Advertisement

    ஆனா பழைய கதாபாத்திரங்களில் சிலருக்கு இந்த முறை கிடைத்த இடம் ஏமாற்றமாக இருக்கிறது. குறிப்பாக முதல் பாகத்தில் நமக்கு தாக்கத்தை கொடுத்த சிலர், இப்போது வெறும் நினைவுப்பொருளாக மாத்தப்பட்ட மாதிரி தோன்றுகிறது. சில கதாபாத்திரங்களின் அடிப்படை தன்மையே மாறிப்போனது போல இருக்கும். அதுவே படத்துக்கு கொஞ்சம் artificial feel தருகிறது.

    இந்த சில ஸீன்களை மட்டும் பார்வேர்ட் செய்து பாருங்கள்.. கர வேற லெவல் படம்தான்!

    இருந்தாலும் 'திரிஷ்யம் 3' ஏன் பார்க்கலாம் என்றால், இது வெறும் ஒரு murder mystery continuation இல்லை. "அதிகாரத்துக்கு எதிராக ஒரு சாதாரண மனிதன் எவ்வளவு தூரம் புத்தியால் போராட முடியும்?" என்ற அடிப்படை கேள்வி இன்னும் இதில் உயிரோடு இருக்கிறது. அதுதான் இந்த சீரிஸின் உண்மையான ஹுக். போலீஸ், சட்டம், அதிகாரம் எல்லாம் ஒரு பக்கம். குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லை வரை போகலாம் என்ற தந்தையின் பயமும் பிடிவாதமும் இன்னொரு பக்கம். இந்த conflict தான் 'திரிஷ்யம்' சீரிஸை இன்னும் தள்ளி கொண்டு செல்கிறது.

    Advertisement

    மொத்தத்தில், 'திரிஷ்யம் 3' பார்த்து முடித்தவுடன் "அடடா, இதே விஷயத்தை இன்னும் எவ்வளவு நாள் இழுப்பீங்க?" என்ற சலிப்பும் வரும். அதே நேரத்தில் "சரி... அடுத்தது என்ன?" என்ற ஆர்வமும் விடாமல் இருக்கும். அதுதான் இந்த சீரிஸின் வெற்றி. ஒரே பிணத்தை வைத்து இத்தனை வருடங்களாக சினிமா வியாபாரம் பண்ணுறாங்கன்னு கிண்டல் பண்ணலாம். ஆனா அந்த வியாபாரத்துக்கு நாம இன்னும் டிக்கெட் வாங்கிக்கிட்டே இருக்கோம் என்பதுதான் உண்மை.

    கருப்பு திரைப்படம் எப்படி 300 கோடி வசூல் செய்தது? ஓடிடியில் பார்த்துவிட்டு வியக்கும் ரசிகர்கள்
    Advertisement

    அதனால், பெரிய எதிர்பார்ப்புடன் அல்லாமல், ஜார்ஜ்குட்டி இன்னும் என்ன செய்து தப்பிக்கிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வத்துடன் 'திரிஷ்யம் 3' பார்க்கலாம். எல்லா இடத்திலும் லாஜிக் வெல்லாது. ஆனால் விறுவிறுப்பு மட்டும் உங்களை கடைசி வரை கூட்டிச்செல்லும்.

    English Summary

    Drishyam 3 Review: There are some thriller characters who leave the screen but never really leave the audience’s mind. Georgekutty is one of them. That is the biggest reason why Drishyam 3 still works, even after the franchise has now stretched one murder case across three films. The audience may ask, “How long can one man keep running from the same crime?” — but the truth is, they still sit down to watch him do exactly that.