ட்ரோன் வைத்து பக்கத்து வீட்டு பெண்ணை.. கடைசியில் அதிர்ச்சி ! டிரோன்ஸ் படம் எப்படி இருக்கு?

  • சென்னை: தமிழ் சினிமாவில் பேய் படங்கள், காதல் படங்கள், சயின்ஸ் பிக்சன் படங்கள் என ஒவ்வொரு வகையிலும் நிறைய படங்களை பார்த்திருப்போம். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அதில் கொஞ்சம் மாயாஜாலம், கொஞ்சம் அமானுஷ்யம், நிறைய காமெடி என வித்தியாசமான முயற்சியில் வெளியாகியிருக்கும் படம்தான் 'டிரோன்ஸ்'. ஒரு ட்ரோனை வைத்து ஆரம்பிக்கும் ஹீரோவின் சேட்டை, கடைசியில் அவரையும் நண்பர்களையும் எப்படிப்பட்ட சிக்கலில் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் சுவாரசியமான விஷயம்.

    Advertisement

    பரிதாபங்கள் புகழ் டிராவிட் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்தில் சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக், சினிமாவாலா சதீஷ், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராகவ் மிர்தாத், வழக்கமான பேய் படமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது?

    Advertisement

    வேற லெவல் மர்மம்

    காலேஜில் படிக்கும் டிராவிட் மற்றும் அவரது நண்பர்கள் செய்யும் ஒரு சேட்டையால் கல்லூரி நிர்வாகத்திடம் சிக்குகிறார்கள். வீட்டுக்கு தெரியாமல் சில நாட்களை கழிக்க வேண்டும் என்பதற்காக, குரேஷியின் ஆய்வுக்கூடத்தில் தங்குகிறார்கள். அங்கே உணவு கொடுக்க பயன்படுத்தப்படும் ட்ரோன், டிராவிட்டுக்கு ஒரு புதிய ஐடியாவை கொடுக்கிறது.

    பக்கத்து வீட்டில் இருக்கும் சித்தி இட்னானியை அந்த ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆரம்பிக்கும் டிராவிட், ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார். காதல் வந்துவிட்டால் அடுத்தது என்ன? எப்படியாவது அந்த வீட்டுக்குள் போய்விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், உள்ளே சென்ற பிறகுதான் அவருக்கு உண்மையான சோதனையே ஆரம்பமாகிறது. அந்த வீட்டில் இருப்பது சாதாரணமான பெண் இல்லை; அமானுஷ்ய சக்திகள் கொண்ட ஒரு மர்மமான உலகம் அங்கே காத்திருக்கிறது. அங்கே மாட்டிக்கொள்ளும் டிராவிட்டை தேடி நண்பர்களும் வருகிறார்கள். வந்தவர்கள் எல்லோருமே வீட்டுக்குள் சிக்கிக்கொள்ள, ஒரு சாதாரண காதல் முயற்சி பெரிய சாகசமாக மாறுகிறது.

    Advertisement

    அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது? அங்கிருந்து எல்லோரும் தப்பித்தார்களா? சித்தி இட்னானியின் பின்னணி என்ன? தேவதர்ஷினி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகர்கிறது.

    ஜெயிலர் 2 வசூல் 2-வது நாளில் எப்படி இருக்கு? ரூ.1000 கோடி வரிசையில் இணையுமா ரஜினி படம்..முழு நிலவரம்!

    பேய் படமா, காதல் படமா?

    இந்த படத்தின் முக்கியமான பிளஸ் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட கதைக்களத்துக்குள் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான். ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் நண்பர்களின் காமெடி, அதற்கு நடுவில் சூனியம், அமானுஷ்ய சக்திகள், பிளாக் ஹோல் தொடர்பான அறிவியல் கற்பனை என பல விஷயங்களை இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

    Advertisement

    பொதுவாக பேய் படம் என்றால் இருட்டான வீடு, திடீரென வரும் சத்தம், யாரோ பின்னால் நிற்பது போன்ற காட்சிகள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், டிரோன்ஸ் படத்தில் அமானுஷ்ய விஷயங்களோடு அறிவியல் கற்பனையையும் சேர்த்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் முதல் பாதியில் நம்மைத் தொடர்ந்து பார்க்க வைக்கிறது.

    அதேநேரத்தில், இவ்வளவு விஷயங்களை ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்று நினைத்ததால் சில இடங்களில் கதை தடுமாறுகிறது. ஒரு காட்சியில் பயமுறுத்துகிறார்கள. அடுத்த காட்சியில் சிரிக்க வைக்கிறார்கள், அதற்கு பிறகு அறிவியல் விளக்கம் கொடுக்கிறார்கள். இப்படி அடிக்கடி திசை மாறும்போது, ஒரு ஜானரில் முழுமையாக பீல் பண்ண முடியாமல் போகிறது. எல்லா ஐட்டங்களையும் ஒரே தட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் எதை ரசிப்பது என்ற குழப்பமும் வந்துவிடுகிறது.

    Advertisement
    தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து!

    ரிவியூ

    பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமான டிராவிட், இந்த படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு பொருத்தமா கதாபாத்திரம் என்பதால், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள், காதல் காட்சிகள் என அவரால் முடிந்த அளவுக்கு கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

    குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு வித்தியாசமான பொழுதுபோக்குப் படத்தைத் தேடுபவர்களுக்கு டிரோன்ஸ் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். திகில், காமெடி, மாயாஜாலம் போன்ற விஷயங்கள் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கும் சில காட்சிகள் சுவாரசியமாக இருக்கலாம். அதேசமயம், அமானுஷ்ய காட்சிகளுக்கு பயப்படும் குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுடைய விருப்பத்தையும் கவனிக்க வேண்டும். டிரோன்ஸ் வித்தியாசமான ஐடியா, ரசிக்க வைக்கும் சில காட்சிகள், ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.

    English Summary

    Drones Movie Review: In Tamil cinema, we have seen many films across various genres—from ghost stories and romances to science fiction. ‘Drones’ stands out as a unique experiment that blends all these elements, incorporating a touch of magic, a hint of the supernatural, and a generous dose of comedy. The film’s intriguing premise revolves around the protagonist’s playful antics with a drone, which ultimately land him and his friends in a series of unexpected complications.