சென்னை: தமிழக அரசியல் களத்திலும், சினிமா உலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படம், இன்று உலகளவில் வெளியாகியுள்ளது.. விஜய் ரசிகர்கள் இந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடி மகிழும்போது, இந்த படத்தின் கதைக்களம் மற்றும் காட்சியமைப்புகள் குறித்து சில விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன...!!
முழுநேர அரசியலுக்கு வரும் முன்பாக விஜய் நடித்துள்ள கடைசி படம் என்பதால், இதன் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சட்டப் போராட்டங்களையும் பின்னடைவுகளையும் ஜனநாயகன் படக்குழு எதிர்கொண்டது.
டிரெய்லர் வெளியானபோது கதை ஒற்றுமை குறித்த விமர்சனங்கள் எழுந்ததோடு, சென்சார் தணிக்கை சர்ட்டிபிகேட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டது. பிறகு மறு ஆய்வுக் குழு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்ற நீளமான சட்டப் போராட்டங்களுக்கு பிறகே இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த பொறுத்தவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.. அதேசமயம் விமர்சனங்களும் எழாமல் இல்லை.. படத்தின் பெரும்பகுதி ஆக்ஷன் மற்றும் சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. நூற்றுக்கணக்கான எதிரிகளை ஹீரோ கொடூரமாக வீழ்த்தும் காட்சிகள் தீவிர ரசிகர்களைக் கவர்ந்தாலும், பொதுவான பார்வையாளர்களுக்கு இது அதிகப்படியான வன்முறையாகத் தோன்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண்களுக்கான கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும், அடிக்கடி வரும் வன்முறைக் காட்சிகள் மற்றும் ராணுவம், போலீசார் எளிதில் பலியாகும் சீன்கள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், 3 மணி நேரப் படத்தில் அதிகப்படியான கருத்துகள், ஆக்ஷன் மற்றும் பில்ட்அப் என ஒரே நேரத்தில் திணித்திருப்பதால், இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த படத்தை தியேட்டரில் பார்த்த தவெக அமைச்சர் ஃபர்வேஸ், விஜய்யின் ஓபனிங் சீனை பார்த்ததுமே எமோஷனலாகி விட்டார்.. கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.. கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த படத்துக்கு எதுக்காக இவர் அழ வேண்டும், அப்படியொரு அழுகாச்சி சீன் எதுவும் இல்லையே என்று இணையத்தில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோல்டன் மினி சினிமாஸ் தியேட்டரில், முதல் காட்சிக்கே கூட்டம் வரவில்லையாம். போதிய அளவில் கூட்டம் வராததால் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலமெங்கும் டிக்கெட் பற்றாக்குறை நிலவிய சூழலில், ஒரு திரையரங்கில் ஆள் பற்றாக்குறையால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது.. பல தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள், ஆர்ப்பரித்து பொங்கல் வைத்து, இந்த படத்தை கொண்டாடி கொண்டிருக்க, இந்த பரபரப்புக்கு நடுவே வுட்லண்ட்ஸ் தியேட்டரில், அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஜனநாயகன் கொண்டாட்டத்திற்கு, மத்தியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவுடன் ஒருவர் தியேட்டருக்குள் என்ட்ரி தந்தார்.. பெரிய அளவில் ஃபிரேம் செய்யப்பட்ட ஜெயலலிதா போட்டோவை கையில் எடுத்து கொண்டு, தியேட்டருக்குள் நுழைந்தார்.. ஜனநாயகன் போஸ்டர்களும், கட் அவுட்களும் சுற்றிலும் நின்றிருக்க, ஜெயலலிதா போட்டோவுக்கு நெகிழ்ந்து போய் போட்டோவுக்கு அந்த தொண்டர் முத்தம் தந்துகொண்டேயிருந்தார்.. அவர் யார் என்று தெரியவில்லை.. எதற்காக ஜெயலலிதா போட்டோவுடன் தியேட்டருக்கு வந்தார் என்றும் தெரியவில்லை...!!ஓவர் ஆக்ஷன்
அமைச்சர் ஏன் அழுதார்
முதல் ஷோ - கூட்டம் இல்லை
ஜெயலலிதா போட்டோ