என்ன விலை படம் எப்படி இருக்கு? காசு தேடி கடலுக்குள் இறங்கியவருக்கு கிடைத்த பொக்கிஷம்.. ஒர்தா? இல்லையா?

  • சென்னை: நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் என்ன விலை திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பொதுவாக ஹீரோவுக்கு ஏதாவது கிடைத்தால் அது பெரும்பாலும் பெரிய திருப்பமாகத்தான் இருக்கும். அதேபோலத்தான் இந்த படத்தின் ஹீரோவாக இருக்கும் கருணாஸ் இராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் வீசும் சில்லறை காசுகளை சேகரித்து குடும்பத்தை நடத்தும் சாதாரண மனிதரின் வாழ்க்கையில், ஒரு விலை உயர்ந்த ஆபரணம் வந்து விழுகிறது. அதிலிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது.

    Advertisement

    படத்தின் ஆரம்பமே நம்மை ராமேஸ்வரம் கடற்கரைக்கு கூட்டிக்கொண்டு செல்கிறது. கருணாஸ் பெரிய ஹீரோ பில்டப்பும் இல்லாமல் தினசரி கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தும் மனிதராக வருகிறார். இன்னைக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் அவரது வாழ்க்கை எனக்கு இருக்கிறது. ஆனால் ஒருநாள் கடலுக்குள் கிடைக்கும் பொருள் அவரது வாழ்க்கை தலைகீழாக மாற்றுகிறது.

    Advertisement

    என்ன விலை படத்தின் ரிவ்யூ

    விலை உயர்ந்த ஆபரணம் அவருடைய கையில் கிடைத்ததும் வாழ்க்கை மாறும் என்ற நினைக்காமல் அதை காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். இங்கு தான் நமக்கு இந்த படம் ஒரு கேள்வி கேட்க ஆரம்பிக்கிறது. நேர்மையாக இருந்தால் வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா? என்பதை இந்த படத்தை பார்த்த பிறகு அந்த கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாது. நேர்மையாக இருந்ததற்கே இப்படியா? என்று தான் நினைக்க வைக்கிறது.

    கருணாஸ் ஹீரோ

    கடலில் கிடைத்த நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த பிறகு கருணாஸ் வாழ்க்கையில் பிரச்சனை தொடங்குகிறது. அவர் செய்யாத ஒரு விஷயத்துக்காக சந்தேக வளையத்திற்குள் வருகிறார். இதுதான் படத்தின் சுவாரசியமான பகுதி. நேற்று வரை கடலில் காசு தேடி குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்த மனிதன் திடீரென்று போலீஸ் வழக்கு, விசாரணை என்று ஓட வேண்டிய நிலை வருகிறது. அதிலும் நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

    Advertisement

    சாதாரண மனிதனுக்கு சட்ட பிரச்சனை வந்தால் அவன் எவ்வளவு திணறுவான் என்பதை படம் அந்த கோணத்தில் காட்டி இருக்கிறது. கருணாஸை நாம் பொதுவாக காமெடி, அரசியல், கிராமத்து பாத்திரங்கள் என்று பல கோணங்களில் பார்த்திருக்கிறார். ஆனால் இங்கு அவருடைய கேரக்டர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. ஹீரோ பெரிய பெரிய வசனங்கள் பேசுவதை காட்டிலும், நான் எதுவும் செய்யவில்லையே என்ற தவிப்பை முகத்தில் காட்ட வேண்டிய இடங்கள் தான் அதிகமாக இருக்கிறது.

    படத்தின் கதை

    அந்த மன அழுத்தத்தை கருணாஸ் நன்றாக கொண்டு வருகிறார். குறிப்பாக குடும்பம் ஒரு பக்கம் பாதிக்கப்படுவது, மறுபக்கம் தன் மீது விழுந்த குற்ற சாட்டை சமாளிக்க வேண்டியது என அவர் தடுமாறும் காட்சிகள் படத்தின் எமோஷனலை தூக்கியை நிறுத்துகிறது. இந்த இடத்தில் தான் நிமிஷா சஜயன் வரும் காஞ்சனா கேரக்டர் முக்கியத்துவம் வருகிறது. கருணாஸ் செய்யாத குற்றத்திற்காக சிக்கி இருக்கிறார்.

    Advertisement

    கூவத்தூரில் நடிகைகளை நான் கூட்டிட்டு வந்தேனா? அங்கு எத்தனை பேர் இருந்தாங்க? கருணாஸ் ஓபன் பேச்சு
    சட்டத்தின் வழியாக அவருக்கு நியாயத்தை போராடும் வழக்கறிஞராக நிமிஷா வருகிறார். அவருடைய கேரக்டர் ஹீரோவை காப்பாற்றும் வக்கீல் என்று மட்டும் இல்லாமல் வழக்கு எந்த திசையில் செல்கிறது என்பதை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய கேரக்டராக இருக்கிறது. கோர்ட் காட்சிகள் படத்திற்கு வேறு ஒரு டோனை கொடுக்கிறது. இந்த படத்தின் கடல் வெறும் பின்னணி கிடையாது. ராமேஸ்வரத்தில் கடல், கடற்கரை வாழ்க்கை, அங்கு திதி கொடுக்க வரும் மக்கள், அவர்களை சுற்றி வாழும் சாதாரண மனிதர்கள் என்று அந்த சூழலை கதைக்குள் நன்றாக கவர்ந்திருக்கிறது.

    Advertisement

    ரசிகர்களின் ரியாக்ஷன்

    கடலில் காசு தேடும் கருணாஸ் கேரக்டரை பார்த்தால் இவருக்கு பெரிய ஆசையே இல்லையே.. கிடைத்த காசை வைத்து வாழ்ந்துட்டு வருகிறாரே என்று நினைக்க வைப்பது தான் படத்தின் ஆரம்பம். அதனால் தான் அவர் மீது விழும் குற்றச்சாட்டு இன்னும் பெரிய பிரச்சனையாக தெரிகிறது. கதை உணர்ச்சியும், பதற்றமும் அதிகரிக்கும் இடங்களில் சாம் சிஎஸ் பின்னணி இசை கைகொடுக்கிறது.

    விஜய்யை எவ்வளவோ விமர்சித்தேன்.. நேரில் எங்கிட்ட கேட்ட ஒரு கேள்வி மறக்க முடியாது! கருணாஸ் உருக்கம்
    அதுபோல ஒளிப்பதிவும் ராமேஸ்வரத்தின் கடல் அழகை காட்டுகிறது. கடலை சுற்றுலா ஸ்பாட்டாக மட்டும் காட்டாமல் அந்த பகுதி மக்களின் வாழ்க்கையோடு இணைத்து காட்டுவது ரசிக்க வைக்கிறது. என்ன விலை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஆனால் படம் கேட்கும் மிகப்பெரிய கேள்வி பணத்தைப் பற்றியது மட்டுமில்லை ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதற்கு கொடுக்கும் விலை என்ன என்பதுதான்.

    English Summary

    Enna Vilai movie review : The film Enna Vilai, starring actor Karunas as the lead, has been released in theaters. Typically, when a protagonist stumbles upon something, it marks a major turning point in the story. Similarly, in this film, Karunas plays an ordinary man who supports his family by collecting the coins devotees toss into the sea at Rameswaram; his life takes a dramatic turn when a piece of expensive jewelry falls into his hands, triggering a series of problems.