பாடகி ஜானகி இறப்பிலும் மோசமான விமர்சனம்.. இப்படியுமா பேசுவாங்க? பேத்தி அப்சரா சொன்ன அதிர்ச்சி விஷயம்!

  • சென்னை: பொதுவாக சிலருடைய சோகம் கண்ணீராக வெளியே வந்து விடும். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு சோகம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதற்காக அவர்களுக்குள் வலி, வேதனை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? மறைந்த பாடகி எஸ் ஜானகியின் பேத்தி அப்சரா குறித்து கடந்த சில நாட்களாக எழுந்த விமர்சனங்கள் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இது குறித்து அப்சராவே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    சமீப காலமாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினிமா ஆளுமைகள் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் இயக்குனர் பாரதிராஜா மறைந்தார். அதைத்தொடர்ந்து பாக்யராஜ், இப்பொழுது பாடகி ஜானகியும் காலமாகி இருக்கிறார். இது சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    Advertisement

    பாடகி ஜானகி குடும்பம்

    அதே நேரத்தில் பாடகி ஜானகியின் இறுதி சடங்கு மைசூரில் நடைபெற்ற நிலையில் பேத்தி அப்சரா இறுதி சடங்குகளை முன் நின்று செய்தார். அப்போது செய்தியாளர்களிடமும் தன்னுடைய பாட்டி பற்றி பேசி இருந்தார். ஆனால் அந்த வீடியோக்களை பார்த்த சிலர் பாட்டி இறந்திருக்கிறார் பேத்தியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட இல்லையே? எப்படி இவ்வளவு சாதாரணமாக பேச முடிகிறது? என்று சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினர்.

    இந்த கேள்விகளை கவனித்த அப்சரா தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நீங்கள் பார்த்த அல்லது பார்க்காத கண்ணீரை வைத்து என் பாட்டி மீது நான் வைத்திருக்கும் அன்பை அளவிடாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான கதைகளையும் சொல்லி இருக்கிறார். அப்சராவின் அக்கா வர்ஷா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்துள்ளார். அக்கா தான் பாட்டி ஜானகி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததாக அப்சரா கூறி இருக்கிறார்.

    Advertisement

    பாடகி ஜானகி பேத்தி பேட்டி

    இந்த உலகத்தில் என் பாட்டிக்கு மிகவும் பிடித்தவர் என் அக்கா வர்ஷா தான். இருவரும் ஒரே மாதிரியானவர்கள், அவர்களுக்குள் இடையே தனியான புரிதல் இருந்தது. இன்று நான் இருந்த இடத்தில் இருந்து பாட்டிக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டியது வர்ஷா தான். அக்காவை இழந்த சோகத்தில் இருந்து எங்கள் குடும்பம் இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அந்த வலி மறைவதற்குள் தற்போது பாட்டியையும் இழந்திருக்கிறார் அப்சரா.

    பாரதிராஜா வாழ்க்கையில் நடந்த அதே சோகம், ஜானகி அம்மாவுக்கும்.. என்ன ஒரு வலி? யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!
    மேலும், என் அனுபவங்கள் நான் நினைத்ததை விட என்னை வலிமையானவள் ஆக மாற்றி இருக்கிறது என்று அப்சரா பேசியிருக்கிறார். ஏற்கனவே ஜானகி அம்மா சின்ன வயதிலேயே தன்னுடைய கணவரை இழந்தார். அதற்கு பிறகு ஒரே மகன் முரளி கிருஷ்ணாவுக்காக வாழ்ந்து வந்தார். முரளி கிருஷ்ணாக்கும் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அம்மாவுடன் தான் தனியாக வசித்து வந்தார்.

    Advertisement

    பாடகி ஜானகி குடும்பத்தில் நடந்த துயரம்

    அதில் மூத்த மகள் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார். இந்த விஷயம் பெரிதாக வெளியே தெரியாது. ஆனாலும் கடந்த ஜனவரி மாதத்தில் முரளி கிருஷ்ணாவும் இறந்துவிட்டார். இப்படி அடுத்தடுத்த பிரிவுகளை தாங்க முடியாமல் ஜானகி அம்மாவும் அவருடைய குடும்பத்தினரும் தவித்து வந்திருக்கின்றனர்.

    அதில் 88 வயதில் உடல்நலக்குறைவினால் காலமான ஜானகி அம்மாவின் இறப்பிற்கு அவருடைய குடும்பத்தினர் அழவில்லை என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்கள் குடும்பம் ஏற்கனவே வேதனையில் இருக்கும்போது உடல்நிலை குறைவினால் கஷ்டப்பட்ட ஒருவர் இந்த உலகத்தை விட்டுப் போயிருக்கிறார். அதை வைத்தும் அவருடைய குடும்பத்தினரை விமர்சிப்பது தவறு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English Summary

    S Janaki : Usually some people's sadness comes out in tears. But some people, no matter how sad they are, don't show it. Can it be said that there is no pain and suffering in them? Late singer S Janaki's granddaughter Apsara has been frowned upon for the past few days. Apsara himself has given an explanation about this. Film personalities have been dying in recent times, shocking Tamil cinema fans. Director Bharathiraja passed away only a few weeks ago. After that Bhagyaraj, now singer Janaki also passed away. This has made movie fans sad.