பிரபல நடிகையின் தொண்டையில் சிக்கிய மூக்குத்தி.. நடிகர் செய்த டிரீட்மென்ட்.. அதிர்ச்சியில் படக்குழு

  • சென்னை: சினிமா படப்பிடிப்பு தளங்களில் சண்டை காட்சிகள், கார் சேஸிங், உயரத்திலிருந்து விழுவது என எதிர்பாராத விபத்துக்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். ஆனால் ஒரு காட்சிகள் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகையின் மூக்குத்தி வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிய சம்பவம் பட குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் பாலிவுட் மற்றும் பஞ்சாபி திரைப்பட உலகில் பிரபலமான நடிகையும், பாடகியுமான ஷெஹ்னாஸ் கில்லுக்கு நடந்துள்ளது. தற்போது அவர் நடித்துள்ள Ishqnma திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    ஓடும் காட்சியில் நடந்த விபரீதம்

    Ishqnma திரைப்படம் 80களில் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு காலகட்ட காதல் கதை. இந்தியா பாகிஸ்தான் எல்லை பின்னணியில் நடைபெறும் இந்த கதையில் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து ஷெஹ்னாஸ் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 24 வெளியானது.

    தொண்டையில் சிக்கிய மூக்குத்தி

    இந்தப் படத்திற்காகத்தான் கதாநாயகி ஓடும் காட்சியை படம் ஆக்கிக் கொண்டிருந்தபோது ஷெஹ்னாஸ் ஓடிவரும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர் அணிந்திருந்த மூக்குத்தி எதிர்பாராத விதமாக கலண்டு அவரது வாய்க்குள்ளே விழுந்து இருக்கிறது. அது தொண்டையில் சிக்கி அவரால் மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த சக நடிகர் சௌரத் தேவா ஓடி சென்று இருக்கிறார்.

    Advertisement

    நிஜத்தில் ஹீரோவான நடிகர்

    பிறகு அவருக்கு என்ன ஆனது என்று கேட்க முயன்ற போது நடிகையால் பதில் சொல்ல முடியாமல் இருமி கொண்டிருந்திருக்கிறார். உடனே நிலைமையை புரிந்து கொண்ட சௌரப் நடிகையின் முதுகில் தட்டி மூக்குத்தி வெளியேறுவதற்கு உதவி செய்திருக்கிறார். ஒரு வழியாக அந்த மூக்குத்தி வெளியே வந்த பிறகு எல்லோரும் நிம்மதி அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்க நிலையில் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

    சூட்டிங் ஸ்பாட் சம்பவம்

    பொதுவாக ஷூட்டிங்க்கு பயன்படுத்தப்படும் நகைகள் கனமாகவும், நீண்ட நேரம் அணிந்து கொள்ள வேண்டியதாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் நடிகை ஷெஹ்னாஸுக்கு நடந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று அவர் ஓடிக்கொண்டிருந்த போது மூக்குத்தி கழன்று அவருடைய தொண்டைக்குள் சிக்கியதால் சில நொடிகளில் அவர் கடுமையாக திணறி இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக பக்கத்தில் இருந்த நடிகர் சௌரப் உதவியால் நிலைமை மோசமடையாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நடிகை திரிஷா வீட்டில் திடீர் பங்க்ஷன்.. குவிந்த பிரபலங்கள்.. இது பலருக்கு கிடைக்காத பாக்கியம்
    இந்த சம்பவத்தை பற்றி நடிகையிடம் பலரும் மூக்குத்தி விபத்து எப்படி நடந்தது என்று கேட்டதால் அந்த வீடியோவை பகிர்ந்ததாக அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் நல்லவேலை பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று அவருக்கு அக்கறையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Shehnaaz Gill: Unexpected accidents like fight scenes, car chases, falls from heights are common on movie sets. But the film crew was shocked when the actress' nose went into her mouth and stuck in her throat during a scene. This incident happened to Shehnaaz Gill, a popular actress and singer in Bollywood and Punjabi film world. Currently, a video is going viral on the internet that this unexpected incident took place during the shooting of his upcoming film Ishqnma.