என்னுடைய குரல் போயிடுச்சு.. 5 வருட போராட்டம்.. கண்ணீருடன் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் உருக்கம்

  • சென்னை: சோசியல் மீடியாவில் எப்போதும் மோட்டிவேஷனலாக பேசி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான மக்களின் மனதை கணக்க வைத்திருக்கிறது. அவருக்கு நடிகை அனிதா சம்பத், நடிகை ரேகா உட்பட பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

    Advertisement

    இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் பலர் ராஜஸ்ரீயின் மோட்டிவேஷன் வீடியோக்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாகவே வீடியோக்கள் வெளியிடுவார்.

    Advertisement

    பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ வருத்தம்

    தன்னுடைய கணவனுடன் வெளியே செல்லும் வீடியோக்கள் மற்றும் குழந்தைகளுடன் விளையாடுவது, தன்னுடைய தோழிகளுடன் அரட்டை அடிப்பது என்று வீடியோக்கள் வெளியிடுவார். அதுபோல வாழ்க்கையில் சோர்ந்து இருக்கும் இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அவருடைய பேச்சுக்கள் இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

    கண் கலங்கி அழுகை

    ஆனால் இப்போது அவர் கண்கலக்கி அழுத வீடியோ அவரை பாலோ பண்ணுபவர்களையும் அழ வைத்திருக்கிறது. சிரித்த முகமாக பரீட்சையமான ராஜஸ்ரீ இப்போது வெளியிட்ட வீடியோவில், எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்த போது அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும் நான் அமைதியாக இருக்கிற ஆளே கிடையாது. வாயை திறந்தால் பேசிக்கொண்டே இருப்பேன்.

    Advertisement

    படையப்பா நடிகை சித்தாராவை நினைவு இருக்கா? படத்தை போலவே நிஜத்திலும் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம்!
    எப்போதுமே என் கூட இருக்கிறவங்க சொல்லுவாங்க, கொஞ்ச நேரம் வாயை மூடுமான்னு. ஆனால் என்னால் முடியவே செய்யாது என்று நான் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்த அளவிற்கு பேசுவேன். பட்டிமன்றங்களிலும் நான் பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது நான் பேசுவது எதிரில் இருப்பவர்களுக்கு கேட்க முடியவில்லை. நான் வாயை திறந்தால் என்னுடைய குரலுக்கு பதிலாக காற்றுதான் வருகிறது. 10 நாட்களாக இந்த பிரச்சனை இருக்கிறது.

    5 வருட போராட்டம்

    நான் ஏற்கனவே 5 வருடங்களாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். புற்றுநோய் எனக்கு இருப்பது தெரிந்ததே 4வது ஸ்டேஜில் தான். அதற்குப் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை கவனித்து வந்தாலும் நான் என்னுடைய சோகத்தை பெரிதாக வெளியே சொல்லவில்லை. ஆனால் இப்போது நான் பேசுவது புரியவில்லை, எப்போ அம்மா பழைய நிலைமைக்கு வருவாய் என்று என்னுடைய குழந்தைகள் கேட்கும் போது ரொம்ப வலிக்கிறது. அந்த வேதனையை என்னால் சொல்லக்கூட முடியவில்லை.

    Advertisement

    என்னை தன்னம்பிக்கையாய் பார்த்தவர்களுக்கு நான் இப்படி கண்ணீருடன் இருப்பது வேதனையாக இருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. நானும் மனுஷி தான். எத்தனை நாள் தான் இப்படி நடிப்பது? இப்போதும் கூட சிலர் என்னுடைய வீடியோக்களை பார்த்துவிட்டு இவளுக்கு என்ன கஷ்டம்? அவள் சந்தோஷமாக இருக்கிறாளே? புருஷன் கூட அடிக்கடி அவுட்டிங் போறதை கூட வீடியோவாக வெளியிடுகிறாளே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    ரசிகர்கள் ஆறுதல்

    ஆனால் எனக்குள் இருக்கும் வேதனைகள் வெளியே யாருக்கும் தெரியாது. அதை நான் சொல்லக்கூடாது என்று தான் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்தேன். இன்று எனக்கு யாரிடம் என் வேதனையை சொல்வது என்று தெரியாமல் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்று அவர் அழுதபடியே அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். ராஜஸ்ரீ பழைய நிலைக்கு வர திரும்பி வரணும் என்பதுதான் அனைவருடைய பிரார்த்தனையாக இருக்கிறது.

    English Summary

    Rajashree Jaison: A video posted by the panel speaker Rajashree Jayson, who is always posting motivational videos on social media, is currently capturing the hearts of thousands of people. Actress Anita Sampath, actress Rekha and many others have been consoling her.