மதுரையில் ஆட்டோ இலவசம்.. முதல்வர் விஜய்க்கு போட்டியாக தனுஷ் ரசிகர்கள் அறிவிப்பு.. ஆனால் பிரச்சனை!

  • சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் என ஒவ்வொன்றும் இப்போது கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை தனுஷ் ரசிகர்கள் செய்திருக்கும் ஒரு விஷயம் மீண்டும் இந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்ட ஆட்டோக்களில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பயணம் செய்பவர்களுக்கு இலவசமாகச் சேவை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    ஆட்டோவில் இலவச பயணம்

    நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் சார்பில், நலிவடைந்தவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது அந்த ஆட்டோக்களில்தான் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

    Advertisement

    ஆயுத பூஜை என்பது வாகனங்கள், தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு மரியாதை செலுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்களை பொறுத்தவரை அவர்களுடைய வாகனம்தான் வாழ்வாதாரம். அப்படிப்பட்ட நாளில், ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்ட ஆட்டோக்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச பயண வசதி அளிப்பது கவனிக்க வேண்டிய விஷயம்தான்.

    Dhanush: அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைகிறாரா? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொல்வதை பாருங்க!

    அதே நேரத்தில், இந்த இலவச பயணம் எந்தெந்த வழித்தடங்களில் கிடைக்கும், எத்தனை மணி நேரம் செயல்படும், யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் போன்ற முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. எனவே, அறிவிப்பின் நோக்கம் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், நடைமுறை விவரங்கள் தெரிந்தால்தான் எத்தனை பேர் இதனால் பயனடைவார்கள் என்பதைத் தெளிவாக சொல்ல முடியும்.

    Advertisement

    ஏற்கனவே முதல்வர் விஜய் அரசு, வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதால் அரசு பேருந்தில் பலர் பயணித்து விடுவதால் ஆட்டோக்காரர்கள் வாழ்வாதத்திற்கு கஷ்டப்படுவதாக கூறி வருகிறார்கள். இதற்கிடையே இப்போது தனுஷ் பிறந்த நாளையோட்டி இலவசமாக ஆட்டோகளில் இரண்டு நாள் பயணிக்கலாம் என்றால் மற்ற ஆட்டோக்காரர்களுக்கு அது கஷ்டத்தை கொடுக்கும் என்று சிலர் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் அரசுக்கு போட்டியாக தனுஷின் ரசிகர்கள் செயல்படுகிறார்களா? என்ற விவாதமும் வருகிறது.

    டெல்லி செல்லும் தனுஷ்.. எல்லாமே பக்கா பிளான் தான் போல! யாரை சந்திக்கிறார்?
    Advertisement

    தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?

    இந்ச் செய்தி இப்போது பேசப்படுவதற்கு முக்கியமான காரணம், தனுஷை சுற்றி ஏற்கெனவே அரசியல் பேச்சுகள் உருவாகியிருப்பதுதான். சமீபகாலமாக அவருடைய ரசிகர் மன்ற செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள், ரசிகர்களின் ஒற்றுமை குறித்து அவர் பேசிய கருத்துகள் எனப் பல விஷயங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன.

    திருவள்ளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில், ரசிகர்களின் ஒற்றுமைக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருப்பதாகவும், அந்த சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் தனுஷ் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், ரசிகர் மன்றத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

    English Summary

    Dhanush: An initiative by Dhanush’s fans in Madurai has reignited this discussion. They have announced that passengers can avail of free rides during the Ayudha Puja and Saraswati Puja festivals in the auto-rickshaws that were previously distributed for free to mark Dhanush’s birthday.