சென்னை: கானா இசை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ள பாடகி இசைவாணி, சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான அப்துல் மொய்தீனை திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். திருமணம் எளிமையாக நடந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வடசென்னையின் கானா இசையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பெண்களில் முதன்மையானவர் இசைவாணி. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கானா பாடல் துறையில், தனது ஸ்ட்ராங்கான குரலாலும் சமூக அக்கறை கொண்ட பாடல்களாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வீடு தோறும் அறிமுகமானார்.
பல ஆண்டுகளாக நண்பராகவும், பின்னர் காதலராகவும் இருந்த அப்துல் மொய்தீனை இசைவாணி திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். மேடைக்கு வந்த அவரை பார்த்தவுடன் இசைவாணியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. அடுத்த சில நொடிகளில் அவர் கனிமொழியிடம் சென்று கட்டியணைத்து தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார். அந்த தருணத்தில் இசைவாணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கூட அந்த நெகிழ்ச்சியான சந்திப்பை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் கனிமொழி மணமக்களுடன் சில நிமிடங்கள் உரையாடி, திருமண வாழ்த்துகளை தெரிவித்தார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குரலாக இசைவாணி பல ஆண்டுகளாக பாடல்கள் பாடி தனது கருத்தை தெரிவித்து வருகிறார். பெண்களின் முன்னேற்றம், கலைஞர்களின் உரிமைகள் போன்ற விஷயங்களில் குரல் கொடுத்து வந்த அவருக்கு பல்வேறு தருணங்களில் கனிமொழி ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில் அவரை நேரில் பார்த்ததும் இசைவாணி உணர்ச்சிவசப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கனிமொழியை பார்த்ததும் இசைவாணி மகிழ்ச்சியுடன் வரவேற்கும் காட்சியும், இருவரும் கட்டியணைத்து பேசும் தருணங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். "இது அரசியல் சந்திப்பு அல்ல... பாசத்தின் வெளிப்பாடு", "இசைவாணியின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அனைத்தையும் சொல்கிறது", "மனதை நெகிழ வைத்த தருணம்" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு இசைவாணியின் முதல் பொது நிகழ்வாக அமைந்த இந்த ரிசப்ஷன், தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் வைரல் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது.காதலருடன் புதிய வாழ்க்கை
ரிசப்ஷனில் சிறப்பு விருந்தினராக கனிமொழி
ஏன் இவ்வளவு நெகிழ்ச்சி?
நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நான்! மிதித்தாலும் முளைப்பேன்! கெத்தாக இசைவாணி போஸ்ட்,குவியும் அட்வைஸ்
வைரலாகும் வீடியோ