சென்னை: 2002ம் ஆண்டு நடிகை தேவிகா காலமான பிறகு, கனகாவுக்கு இந்த உலகமே இருண்டது போல் ஆகிவிட்டது. அம்மாவின் மறைவை தாங்க முடியாமல் தனிமையில் முடங்கினார். ஒரு காலகட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை தான் கல்யாணம் செய்துகொண்டதாக கனகா பேட்டி அளித்திருந்ததார்.. ஆனால், உண்மையில் அப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை" என்று கனகா பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நடிகை கனகாவும் அவருடைய தாயார் தேவிகாவும், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தனர்.
ஒருநாள் அவர்கள் அங்குள்ள பார்க்கில் வாக்கிங் போய் கொண்டிருந்தனர். அப்போது டைரக்டர் கங்கை அமரன் அவர்களை தற்செயலாகச் சந்தித்துப் பேசினார். அப்போது தேவிகாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கனகாவை அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.
கரகாட்டக்காரன் படத்துக்காக ராமராஜனிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு, ஹீரோயினுக்கான ஒரு தமிழ் முகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.. அப்போது கனகாவை தன்னுடைய படத்தின் கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் கங்கை அமரன். தன் மகளை பொத்திப் பொத்தி வளர்ப்பதாக சொன்ன தேவிகா, இந்த முடிவுக்கு மறுப்பு சொன்னார்..ஆனால், கங்கை அமரன் தன் சொந்தப் பெண் போலப் பார்த்துக்கொள்வதாக வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால், மகளை நடிப்பதற்கு சம்மதித்தார். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான கரகாட்டக்காரன் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து, 365 நாட்கள் தொடர்ந்து ஓடியது. இந்த ஒரே படத்தின் மூலம் ராமராஜன் ரஜினிகாந்துக்கு இணையான சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்... கனகாவும் முன்னணி நட்சத்திரமானார்... ரஜினிகாந்துடன் அதிசயப் பிறவி, பிரபுவுடன் கும்பக்கரை தங்கையா, விஜயகாந்துடன் கோயில் காளை என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் கனகா நடித்தார். கனகாவின் வளர்ச்சிக்கு காரணமான அவரது அம்மாவின் அதீத பாசமே, பிற்காலத்தில் கனகாவின் தனிமைக்கும் காரணமாக அமைந்தது. கனகாவின் படங்களை தேர்ந்தெடுப்பது தேவிகா தான்.. ஷூட்டிங்குகளுக்கும் கனகாவுடனேயே செல்வார் தேவிகா.. எந்த டிரஸ் போடணும்? என்ன படம் நடிக்கணும் என்பது உட்பட நிறைய கட்டுப்பாடுகளை தேவிகா போட்டார். நடிகர் ரஜினிகாந்த்தே, தேவிகாவிடம் தனியாகப் பேசி கனகாவுக்கு சுதந்திரம் தருமாறு சொன்னாராம். எதிர்காற்று என்ற படத்தில் மார்டன் டிரஸ் அணியும் கேரக்டரில் நடிக்க கனகாவுக்கு வாய்ப்பு வந்தது.. பெரிய அளவிலான சம்பளமும் கனகாவுக்கு பேசப்பட்டது. ஆனால், மாடர்ன் டிரஸ் கேரக்டர் முதன்முதலாக மகளுக்கு வந்ததால், அதை நழுவ விட தேவிகாவுக்கு விருப்பம் இல்லை. அதனால் மொத்த சம்பளத்துக்கும் காஸ்ட்யூம் வாங்கும்படி புரொடியூசரிடம் சொல்லிவிட்டாராம், 2002ம் ஆண்டு தேவிகா காலமான பிறகு, கனகாவுக்கு இந்த உலகமே இருண்டது போல் ஆகிவிட்டது. அம்மாவின் மறைவை தாங்க முடியாமல் தனிமையில் முடங்கினார். ஒரு காலகட்டத்தில் தான் அமெரிக்காவை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை கல்யாணம் செய்துகொண்டதாக கனகா பேட்டி அளித்திருந்தார்.. ஆனால், உண்மையில் அப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை. தனக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தேவை என்பதற்காகவே கனகா அப்படி சொன்னாராம். கனகா மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் என்றும், கேன்சர் நோயால் இறந்துவிட்டார் என்றும் பிபிசி போன்ற ஊடகங்கள் வரை தவறான செய்திகள் பரவின. ஆனால், அவர் சீரான மனநிலையுடன் உயிரோடுதான் இருக்கிறார். அம்மா, அக்கா அல்லது பாட்டி போன்ற கேரக்டர்களில் நடித்து சினிமாவை தொடர கனகா விரும்பவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் சென்னை பாண்டி பஜார் சென்றிருந்தபோது, எதிரே நடிகை கனகா நடந்து வந்தார்.. 2 கைகளிலும் நான்கைந்து பெரிய துணிப் பைகளை சுமந்து கொண்டு தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் பொதுமக்கள் யாருக்குமே அது கனகா என்று அடையாளம் தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.நடிகை கனகாவின் வாழ்க்கை
தேவிகா - கனகா
மொத்த சம்பளத்துக்கும் காஸ்ட்யூம்
கிசுகிசுக்கள்