விஜய் - த்ரிஷாவை கலாய்த்தாரா விஷ்ணு விஷால்?... 'கட்டா குஸ்தி 2' படத்தின் ஒரு சீன் கிளப்பிய புதிய சர்ச்சை!


  • சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இந்தப் படத்திலும் கணவன்-மனைவி உறவு, குடும்ப பாசம், காமெடி மற்றும் எமோஷனல் கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு சொல்லியிருக்கும் விதம் பாராட்டைப் பெற்று வருகிறது. ஆனால், படத்தின் வெற்றியை விட தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவது ஒரு குறிப்பிட்ட காட்சி.

    Advertisement

    விஜய் த்ரிஷா காட்சி

    படத்தின் நடுப்பகுதியில் வரும் ஒரு காட்சியில், விஷ்ணு விஷால் மலையாள நடிகை மோக்‌ஷாவை தூக்கிக்கொண்டு வரும் காட்சியின் பின்னணியில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'கில்லி' திரைப்படத்தில் இடம்பெற்ற "அப்படி போடு" பாடல் ஒலிக்கிறது. தியேட்டர்களில் இந்தக் காட்சிக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தாலும், படம் பார்த்த சிலர் வேறு கோணத்தில் அதை விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

    Advertisement

    த்ரிஷாவின் புடவை

    அந்தக் காட்சியில் மோக்‌ஷா அணிந்திருந்த புடவை, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா அணிந்திருந்த புடவையை போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஒப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதோடு, அந்த காட்சியில் பயன்படுத்தப்பட்ட விஜய் பாடலையும் இணைத்து, "இது சாதாரண சீன் இல்லை... ஒரு மறைமுக ரெஃபரன்ஸ்" என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, சில ரசிகர்கள் இந்த சீனை விஜய் - த்ரிஷாவை வைத்து உருவான காமெடி என கூற, மற்றொரு தரப்பினர், "இது ரசிகர்களின் அதிகப்படியான கற்பனை. கதைக்கு தேவையான ஒரு காட்சியை தேவையில்லாமல் சர்ச்சையாக்க வேண்டாம்" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் மோதிக் கொண்டிருக்கின்றன.

    Advertisement
    Gatta Kusthi 2: கட்டா குஸ்தி 2 ரிவ்யூவை தாண்டி ரசிகர்களை பேச வைத்த 5 விஷயங்கள்.. விஷ்ணு விஷால் மீண்டும் வெற்றி பாதையில்!

    விஷ்ணு விஷால் பேச்சு

    இதற்கு முன்பும் விஷ்ணு விஷால் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, ரஜினி குறித்து கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டு சில விஜய் ரசிகர்கள் விமர்சித்த சம்பவம் நடந்தது. பின்னர் அதற்கு விஷ்ணு விஷால் விளக்கமும் அளித்திருந்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தின் இந்தக் காட்சியும் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    இதற்கிடையில், படம் குறித்து பெரும்பாலான ரசிகர்கள் நல்ல கருத்துகளையே பகிர்ந்து வருகின்றனர். விஷ்ணு விஷால் ஹவுஸ் ஹஸ்பெண்ட் கேரக்டரில் இயல்பாக நடித்திருப்பதும், ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி வீராங்கனையாக மிரட்டியிருப்பதும் பாராட்டைப் பெற்று வருகிறது. அப்பா-மகள் இடையேயான எமோஷனலான காட்சிகள், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைக்கதை, இடையிடையே வரும் காமெடி ஆகியவை படத்தின் பலமாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    Gatta Kusthi 2: கட்டா குஸ்தி 2 எப்படி இருக்கு? விஷ்ணு விஷால்- ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி மாஸா? வேஸ்டா? ரிவ்யூ இதோ!
    Advertisement

    ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பேசப்படுவது அந்த ஒரே காட்சிதான். உண்மையில் அது பிளான் பண்ணி வைக்கப்பட்ட ரெஃபரன்ஸா, இல்லையா என்பது குறித்து படக்குழு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த விவாதங்கள் அனைத்தும் ரசிகர்களின் விளக்கங்களும், ஊகங்களும் மட்டுமே. இருந்தாலும், ஒரு சின்ன காட்சி கூட படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்து, 'கட்டா குஸ்தி 2'வை டிரெண்டிங்கில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Gatta Kusthi 2: Vishnu Vishal's Gatta Kusthi 2 has opened to a positive response from family audiences, but a particular scene from the film has become the biggest talking point online. In one sequence, Vishnu Vishal carries actress Moksha while the popular song "Appadi Podu" from Vijay's blockbuster Ghilli plays in the background.