சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அடிக்கடி சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வருவது வழக்கம். அதேபோலத்தான் இப்போது கூட ஒரு செய்தி வலம் வருகிறது. அவருடைய போட்டோ ஏற்படுத்திய குழப்பம் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அரசு இணையதளத்தில் ரச்சிதா போட்டோ இடம் பிடித்திருந்தது பலருடைய கவனத்தையும் பெற்று வைக்கிறது.
பொதுவாக ஒரு சில ஹீரோக்கள் மட்டும் தொடர்ந்து பல வருடங்களாக கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நடித்த நடிகைகள் எல்லாம் சில வருடங்கள் கழித்து அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கி விட்டாலும் ஹீரோக்கள் மட்டும் காலேஜ் படிக்கிற பையனாகவே பல வருஷங்களாக நடித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சொல்லலாம். ஆனால் சீரியலில் இதை உடைத்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.
இந்த சீரியல் தொடர்ந்து பல சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலில் தொடர்ந்து ஹீரோயினியாக நடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி தான். ஒவ்வொரு சீசனிலும் அவருக்கு வேற வேற நடிகர்கள் தான் ஜோடியாக நடித்திருந்தார்கள். ஆனால் அதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த சீரியலில் அவருடைய ஹோமிலியான லுக் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது. அந்த சீரியலுக்கு பிறகு ரச்சிதா ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. ரச்சிதா என்றால் சரவணன் மீனாட்சி சீரியல் தான் என்ற ஒரு அடையாளம் கிடைத்து விட்டது. இப்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ரச்சிதாவை பற்றிய ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஒருவர் அரசு இணையமான சிப்காட் இணையத்தை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென ரச்சிதாவின் போட்டோ கண்ணில் பட்டு இருக்கிறது. அதுவும் ஒரு உயர் அதிகாரியின் பெயருக்கு நேராக ரச்சிதா போட்டோ இருந்திருக்கிறது. அதை பார்த்ததும் அந்த நபருக்கு ஒரு நிமிஷம் என்ன நடக்கிறது என்று புரியவில்லையாம். ஒரு வேலை ரச்சிதாவுக்கும் அரசு வேலை கிடைச்சிடுச்சா என்று குழம்பிப் போயிருக்கிறார். ஏற்கனவே முதல்வர் விஜய்யின் ஆட்சியில் சினிமா பிரபலங்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் ரச்சிதாவுக்கும் ஏதாவது முக்கிய பதவி கொடுத்து விட்டார்களா? என்றெல்லாம் சிலர் நினைத்திருக்கிறார்கள். சமீப காலமாக சினிமா மற்றும் கலை துறையை சார்ந்த சில பிரபலங்கள் அரசு சார்ந்த குழுக்கள் மற்றும் பொறுப்புகளில் நியமிக்கப்படுவது பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் ரச்சிதாவின் போட்டோ அரசு இணையத்தில் இருப்பதை பார்த்ததும் அட இவருக்கும் ஏதாவது பொறுப்பு கிடைத்திருக்குமோ என்று அந்த நபர் நினைத்து விட்டாராம். ஆனால் கொஞ்சம் நிதானமாக பார்த்த பிறகுதான் அந்த போட்டோவுக்குள் இருந்த உண்மையான டுவிஸ்ட் தெரிய வந்திருக்கிறது. விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டது தப்பா போச்சு.. கரண்ட் பில் பிரச்சனை! சீரியல் நடிகை உருக்கமான போஸ்ட் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை
அரசு பதவியில் ரச்சிதா மகாலட்சுமி
அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
அதாவது புகைப்படத்திற்கு கீழே இருந்தது ரட்சிதா மகாலட்சுமியின் பெயரே கிடையாதாம். அரசு இணையத்தில் இடம் பெற்றிருந்த ஒரு உயர் அதிகாரியின் போட்டோவுக்கு பதிலாக தான் ரச்சிதாவின் போட்டோவை யாரோ எடிட் செய்து வைத்திருக்கிறார்கள். இதைத்தான் நவீன் மணிகண்டன் என்ற அந்த நபர் ஆதாரத்துடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். வழக்கமாக சிட்கோ இணையத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு உயர் அதிகாரியின் பெயருக்கு ரச்சிதா போட்டோ இடம் பிடித்திருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியாகி விட்டராம். யாரோ ரச்சிதாவின் தீவிரமான ரசிகர் தான் இந்த வேலையை பார்த்திருக்க வேண்டும் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.